Tips For Sensitive Skin - சென்ஸிடிவ் சருமத்துக்கு சிறப்பான ய&#3

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சென்ஸிடிவ் சருமத்துக்கு சிறப்பான யோசனைகள்!
ந்து வகை சருமங்களில்... நார்மல், டிரை, ஆய்லி, காம்பினேஷன் ஆகிய நான்கு வகை சருமங்களின் பராமரிப்பு பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில் ஐந்தாவதாக இருக் கும் சென்ஸிடிவ் சருமத்தின் பராமரிப்பு பற்றிப் பார்க்கலாம்.

பார்லர்
'க்ரீன் டிரெண்ட்ஸ்’ பியூட்டி சலூனின் சீனியர் டிரெயினர் பத்மா, சென்ஸிடிவ் சருமத்துக்கான பார்லர் சர்வீஸ் பற்றிப் பேசுகிறார்...

''இயல்பான சூழலில் இருக்கிற சருமம், ஏ.சி அல்லது குளிர்ப்பிரதேசங்களில் இருந்து பழக்கப்பட்ட சருமம், திடீரென அதிகமான சூரிய ஒளியினால் பாதிக் கப்படும்போதோ அல்லது அடிக்கடி பிளீச்சிங் போன்ற கெமிக்கல் நிறைந்த மேக்கப் அயிட்டங்களைப் பயன்படுத்தும்போதோ, உரிய பராமரிப்பு கொடுக்காம விட்டா... சென்ஸிடிவ் சருமமா மாறிடும்.

இந்த வகை சருமத்தை அடிக்கடி க்ளென்ஸ் செய்து, மாய்ஸ்ச்சரைஸர், டோனர் பயன்படுத்தி பராமரிக்கறது மிக அவசியம். அப்படி பராமரிக்காம போனா, பிக்மென்டேஷன், ரேஷஸ், மங்கு மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம். இதுக்கெல்லாம் பார்லர் சர்வீஸ் மட்டும் இல்லாம, சரும டாக்டர்கிட்டயும் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

பார்லர்ல செய்யப்படுற பல ஃபேஷியல்களும் சென்ஸிடிவ் ஸ்கின்னுக்குப் பொருந்தாது. இவங்களுக்கு கெமிக்கல் ஃபேஷியலைவிட, ஃபிரெஷ்ஷான பழங்களை வெச்சி செய்யுற ஃபேஷியல்தான் நல்லது. குறிப்பா, ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல் ரொம்ப நல்லது.

இந்த ஃபேஷியல்ல, ஸ்ட்ராபெர்ரி பழத் தோலை மசித்து, முகத்தில் ஸ்கிரப் செய்து, நீராவி கொடுத்து, பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் இருந்தால் நீக்குவோம். அடுத்து ஸ்ட்ராபெர்ரி பழத்தோட சதைப் பாகத்தை மசித்து, முகத்தில் தேய்த்து மசாஜ் கொடுப்போம். அதன்பிறகு பேண்டேஜ் துணியால முகத்தை மூடி, உருக்கிய பாரஃபின் மெழுகை பொறுக்கும் சூட்டில் அப்ளை செய்வோம். 10, 15 நிமிஷத்துக்கு அப்புறம் ஃபேஸ் மாஸ்க்கை நீக்குவோம். இந்த ஃபேஷியல், முகத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராக விளங்குவதுடன், சருமத்தை ஆரோக்கியமாவும் மாத்தும்!''

பாரம்பரியம்!
சென்ஸிடிவ் சருமத்துக்கான பாரம்பரிய முறை பராமரிப்புகளைச் சொல்கிறார், 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிறுவனர் கீதா அஷோக்.

''சென்ஸிடிவ் சருமம் மிகமிக நுட்பமா, மிருதுவா, லகுவா இருக்கும். இதுல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு விசிபிள் சென்ஸிடிவ் ஸ்கின். அதாவது அதிகமான பருக்கள், கொப்புளங்கள், சூரிய ஒளியால் அளவுக்கு அதிகமா சிவந்து போறதுனு இதெல்லாம் சருமத்தின் மேற்பரப்பில் வெளிப்படையா தெரியும்.
ரெண்டாவது வகை, இன்விசிபிள் சென்ஸிடிவ் ஸ்கின். அதாவது, பார்க்கும்போது வெளிப்படையா எந்த பாதிப்பும் தெரியாது. ஆனா, ஒரு எறும்பு அல்லது கொசு கடிச்சாகூட அலர்ஜி ஏற்படும்.

பொதுவா, உள்ளங்கை எப்போதும் சூடா இருக்கறது, அதிகபட்ச சூரிய ஒளி அல்லது அதிகபட்ச குளிரால பாதிக்கப்படுறது போன்ற சின்னச் சின்ன அறிகுறிகள் மூலம் சென்ஸிடிவ் சரும வகையை சுலபமா கண்டுபிடிக்கலாம்.

சென்ஸிடிவ் சருமத்துக்கு 'ஸாலிசிலிக் ஆசிட்’ இருக்கும் ஃபேஸ் வாஷை, நிறைய தண்ணியில கொஞ்சமா கலந்து, அடிக்கடி முகம் கழுவணும். அல்லது காய்ச்சாத பாலை பஞ்சால் தொட்டு முகம் மற்றும் கழுத்தில் தடவி, அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் குளிர்ந்த நீரால கழுவலாம். சென்ஸிடிவ் சருமம் உள்ளவங்க வெந்நீரில் முகம் கழுவவோ, குளிக்கவோ கூடாது. நீர்ச்சத்து மிக்க பழங்களை சாப்பிடறதால... உடல் சூடு குறைஞ்சி, சருமத்தோட சென்ஸிடிவ் தன்மை குறையும்.

சென்ஸிடிவ் சருமத்துக்கு அழகு சாதனப் பொருட்கள் பரம எதிரி. இருந்தாலும் தவிர்க்க முடியாம பயன்படுத்த நேர்ந்தா, ஃபவுண்டேஷன், மாய்ஸ்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன் இதையெல்லாம் க்ரீமா பயன்படுத்த வேணாம். ஏன்னா... சென்ஸிடிவ் சருமத்தில் இருக்கும் அதிக, பெரிய துவாரங்களை, இந்த க்ரீம் அடைச்சுக்கும்.

இதனால கூடுதல் பிரச்னைகள் வந்து சேரும். அதனால, லோஷன் வடிவத்துல கிடைக் கற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இதை அப்ளை செய்றதுக்கு முன்ன முகத்தை நல்லா கழுவி, டோனரோட கொஞ்சம் ஐஸ்வாட்டர் கலந்து, பஞ்சால் தொட்டு சருமத்தில் தடவினா... திறந்திருக்கும் சருமத் துவாரம், இறுகிடும். அதுக்குப் பிறகு மேக்கப் போடுறது நல்லது!''
கீதா அஷோக் தரும் வீக்லி ஃபேஸ் பேக்...

கைப்பிடி அளவு செர்ரிப் பழங்களை, 10 மில்லி தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஐஸ் கட்டி ஒன்றை மஸ்லின் துணியால் சுற்றி, முகத்தில் ஒத்தடம் கொடுக்கவும். பிறகு, முகத்தின் மீது பேண்டேஜ் துணியை வைத்து, அதன் மேல் செர்ரி - தேங்காய்ப்பால் கலவையை திக்காக அப்ளை செய்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு, ஃபேஸ் பேக்கோடு சேர்ந்து காய்ந்திருக்கும் பேண்டேஜ் துணியை எடுத்துவிட்டு, பன்னீரை பஞ்சால் தொட்டு முகம் முழுவதும் துடைத்தெடுக்கவும். வாரம் ஒரு நாள் தொடர்ந்து இப்படி செய்து வந்தால் முகம் பொலிவடைவதுடன், சருமத்தின் சென்ஸிடிவ் தன்மை குறைந்து, கூடிய விரைவில் நார்மல் சருமமாக மாறிவிடும்.
 
Last edited:

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
162
Likes
304
Location
Melbourne
#2
Re: Tips For Sensitive Skin - சென்ஸிடிவ் சருமத்துக்கு சிறப்பான &#2991

very useful tips.
 

ruba

Friends's of Penmai
Joined
Jan 30, 2012
Messages
123
Likes
116
Location
trichy
#3
Re: Tips For Sensitive Skin - சென்ஸிடிவ் சருமத்துக்கு சிறப்பான &#2991

Useful tips
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
Re: Tips For Sensitive Skin - சென்ஸிடிவ் சருமத்துக்கு சிறப்பான &#2991

@chan, thrilled to get nice tips... dear...
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#5
Re: Tips For Sensitive Skin - சென்ஸிடிவ் சருமத்துக்கு சிறப்பான &#2991

Very useful health care tips. Thanks for sharing ji:thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.