Tips for Skin care in summer

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#1
* தினசரி 2 வேளை குளியல் அவசியம். வாரம் 2 நாள் தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து அரை மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறிக் குளிக்கலாம்.

* சோப் உபயோகிப்பதைக் கூடிய வரை இந்நாட்களில் தவிர்ப்பது நல்லது. கடலைப் பருப்பு, பயறு, சந்தனம், வெட்டிவேர், ரோஜா இதழ்கள், செண்பகம், செம்பருத்தி இலை ஆகியவற்றை காய வைத்துப் பொடித்து சோப்புக்குப் பதில் தேய்த்துக் கொள்ளலாம்.

* வாரத்தில் ஒருநாள் வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை அப்படியே பச்சையாக அரைத்து, சருமம் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் ஊறிக் குளிக்கலாம். இது வெயிலால் கருத்த சருமத்தை மீண்டும் பழைய நிறத்துக்கு கொண்டு வரும் இயற்கை சன் ஸ்கிரீன்.

* வெயிலில் போய்விட்டு வந்ததும் சுத்தமான சந்தனத்தில் பன்னீர் விட்டுக் குழைத்து சருமத்தில் தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊறிக் கழுவலாம்.

* வெயிலில் சருமம் வறண்டு போகாமலிருக்க தினமும் சுத்தமான தேங்காய் எண்ணையை உடல் முழுக்க தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

* முதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தை பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். உஷ்ணத்தைக் குறைப்பதோடு, முடியை பளபளப்பாகவும் மாற்றும். ஷாம்பு போடத் தேவையில்லை.

* பப்பாளி விழுது, ரோஜா விழுது, கொத்தமல்லிதலை விழுது, எலுமிச்சைசாறு, பன்னீர், வெந்தயம், செம்பருத்தி போன்றவற்றை சேர்த்தரைத்த விழுது அல்லது ஏதாவது ஒரு கலவையை உடலுக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறி குளித்தால் சருமம் ஆரோக்கியமாக மாறும்.

* வெயில் நாட்களில் சிலருக்கு அரிப்பு ஏற்படும். தாமரை எண்ணை என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை அரிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம்.

thanks; tamilsigaram.com
 

shinninglikeme

Friends's of Penmai
Banned User
Joined
Jun 8, 2013
Messages
217
Likes
99
Location
Mumbai
#4
Thanks for the tiops for skin care,
i strongly believe that one must simply take care of the skin in form of cleansing moisturising and eating the right food and sleeping well. Firstly wash face two - three times a day and


and keep the skin moisturised with it. The fluids in the body help to remove the toxins from the body so drink a lot of water and more than that eat the fruits which water content is high.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.