Tips for strong bones - உஷார் எலும்பு தேயலாம்!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
“”கால்சியம் சத்து குறைபாடுதான் எல்லாத்துக்கும் காரணம்!
ஸ்லிம்மாக இருந்தாலும் சரி, பருமனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மானம் ஏற்படும்.
கால்சியம் குறைந்தவர்கள் சின்ன அளவில் இடறி விழுந்தால்கூட எலும்பு முறிவில் கொண்டுபோய்விடும்
பெண்களின் தவறான உணவுப்பழக்கம்கூட கால்சியம் குறைபாடுக்கு முக்கிய காரணமாகும்.
ஆண்களுக்கு மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மான நோய் வரக்கூடும்.
மெனோபாஸ் பெரும் தொல்லை!
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட மிகப்பெரிய காரணம் மாதவிலக்குக் காலத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு விடுவதுதானாம். அதாவது, மாதவிலக்கு சுழற்சிநின்றபின்னர் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்து விடுவதால்தான் இந்தப் பிரச்னையாம்.
கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுமாம்.
இவர்கள் சிறியளவில் இடறினால்கூட, எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
இதிலிருந்து விடுபட ஒரே வழி, கால்சியம் சத்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்து உண்பதுதான்.
மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கால்சியம் சத்துள்ள மாத்திரைகளை எடுத்து அந்தக் குறைபாட்டை நீக்க முடியும்.
எலும்பு தேய்ந்துவிட்டது என்று எப்படி தெரிந்துகொள்வது?
திடீர் திடீரென்று நம் உடம்பில் உள்ள மூட்டின் மேல்பகுதியில் லேசான வலி தெரியும். குதிகாலில் அடிக்கடி வலி தெரியும். சிலர் ஏதோ ரத்த ஓட்டம் காலுக்கு வரவில்லை. நடந்தால் சரியாகிப் போகும் என்ற அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அது தவறு. இன்னும் சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலிக்கும். அதை வாய்வு என்று கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. அடிக்கடி இந்த வலிகள் வந்தால் அலும்புப் பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்வது நல்லது.
வரும்முன் காக்கலாம்!
1. “ஸ்லிம் ஆகிறேன் பேர்வழி’ என்று தேவையில்லாத உணவுக் கட்டுப்பாடுகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
2. அதே சமயம், உடற்பருமனை அதிகரிக்கும் உணவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.
3. கால்சியம் மற்றும் இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் உண்பது அவசியம். பேரீட்சை, பால், முட்டை, நார்ச்த்துள்ள காய்கறிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
4. கண்டிப்பாக புகை, மது கூடாது.
5. எளிதான உடற்பயிற்சி அல்லது 45 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டாலே எலும்புகள் உறுதிப்படும்.
6. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒருமுறை தங்கள் எலும்பின் தன்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்குத்தக்க தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டால் எலும்புகள் உறுதிப்படுவது உறுதி.
7. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளுந்தம்களி உள்ளிட்ட கால்சியம் சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுப்பது நல்லது.
Nandri--"kumudham
இரா.மணிகண்டன்
 
Last edited:

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#3
Re: உஷார் எலும்பு தேயலாம்!

nandri Kesavan........migavum ubayogamana pagirvu.......
 

Janani14

Friends's of Penmai
Joined
Jan 3, 2012
Messages
322
Likes
149
Location
Chennai
#4
Re: உஷார் எலும்பு தேயலாம்!

thanks Kesavan sir, naanum daily calcium eduthukunam
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.