Tips for Winter - குளிர்கால டிப்ஸ்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
குளிர்கால டிப்ஸ்


பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது. தயிர், மோர் போன்ற பால் பொருள்களையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களையும் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள். உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, புதினா, தூதுவளை அதிகம் சேர்க்க வேண்டும்.


குழந்தைகளை டூ வீலர், சைக்கிளில் முன்னாடி உட்கார வைத்து கூட்டிபோகக் கூடாது. குழந்தைகளுக்கு இந்த சீசனில் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் போகும்போது காதில் ஸ்கார்ப், மப்ளர் ஏதாவது ஒன்றை காது மறையும்படி கட்டி வைக்க வேண்டும். பெரியவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் போகும்போது இதேபோல் காது மறையும்படி கட்டிக்கொள்ள வேண்டும்.


குளிர்காலங்களில் சைக்கிள், ஸ்கூட்டரில் செல்லும்போது, மார்பில் காற்று பலமாகத் தாக்கும். ஆகையால், ஒரு நியூஸ் பேப்பரை நான்காக மடித்து, பனியனுக்குள் வைத்து, பனியனை "இன்' செய்து சட்டை போட்டுக் கொண்டால் மார்புக்கு பலமான பாதுகாப்பு கிடைக்கும். ஸ்வெட்டரை எடுத்துக்கொண்டு அலைய வேண்டாம்.


பொதுவாக குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போகும் என்பதால் எப்போதும் கூந்தலில் எண்ணெய்ப் பசை இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் கூந்தலை அடிக்கடி ஷாம்பு வாஷ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குளிருக்காக உல்லன் குல்லாக்கள் அணிவதைத் தவிர்த்து "சிந்தடிக் சில்க்' தயாரிப்பு குல்லா மற்றும் ஸ்கார்ஃப்களைப் பயன்படுத்துவதன் மூலம் குளிர்காலத்தில் கூந்தலில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கலாம்.


குளிர்காலத்தில் முடி வறட்சி காரணமாக பொடுகுப் பிரச்னையும் அதிகமாகும். அந்த பொடுகானது தோல், கைகளில் எல்லாம் செதிள், செதிளாக உதிர்ந்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை கற்றாழை ஜெல்லை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் நன்றாகத் தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் வறட்டுத்தன்மை நீங்குவதுடன் பொடுகும் மட்டுப்படும்.


குளிர்காலத்தில் வறட்சி காரணமாக நரையும் அதிகரிக்கலாம். அதற்காக "டை' அல்லது "கலரிங்' பயன்படுத்தும்போது அது கூந்தலின் வறட்சியை மேலும் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு கப் மருதாணி இலையுடன் கால் கப் டீத்தூள்; எலுமிச்சைச் சாறு கால் கப்; தேங்காய் எண்ணெய் நான்கு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வாரம் ஒருமுறை இந்த விழுதை தலையில் தேய்த்து அலச, டை மற்றும் கலரிங் போன்றவை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.


குளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம் பொடி ஒரு ஸ்பூனுடன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கலந்து குளிக்கலாம்.


குளிர்காலத்தில் தலையில் பேன் தொல்லை அதிகரிக்கும். வசம்பு பவுடருடன் தேங்காய் எண்ணெயும் தயிரும் கலந்து பத்து நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.


உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க தேன், கிளிசரின், பீட்ரூட் சாறு, வாஸ்லைன் தடவலாம்.


குளிக்கப் போவதற்கு முன்பு உடம்பிலும் முகத்திலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும். குளிப்பதற்கு அதிக அளவு சூடுள்ள தண்ணீர் வேண்டாம்.


குளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.


இந்தச் சீசனில் முக்கிய தேவை நிறைய தண்ணீர் குடிப்பது. அதனால் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

-dinamani
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2
Re: குளிர்கால டிப்ஸ்

குளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்க சில வழிகள்!!!

குளிர்காலம் வந்தாலே நமது உடல் நலத்தை பராமரிப்பதோடு நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிக்க வேண்டும். ஏன்னெனில், நம்மை போலவே நமது வீடும் குளிர்காலத்தை உணரும் தன்மையை கொண்டது. அதனால், இந்த குளிர்காலங்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

குளிர்காலங்கள் குளிர்ந்த காற்றை வீசி நாம் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கச் செய்கின்றது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் ஒரே இடத்திலேயே இருக்கச் செய்கின்றது. இன்றைய மாடர்ன் வீடுகளில் உள்ள ஹால் மற்றும் படுக்கை அறைகளில் சிறந்த முறையில் அறையை வெப்பமாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இந்த வெப்பமாக்கும் கருவிகள் இல்லாத நிலையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கு வேறு வழிகளை நாடவேண்டி வரும்.

இயற்கையான முறையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கான வழிகளை கண்டறிவது கடினமான ஒன்று அல்ல. வெப்பமாக்கும் கருவிகள் உங்களை நிம்மதியாக உறங்க வைத்தாலும் அதன் விளைவாக வரும் அதிக மின்கட்டணங்கள் உங்களை பெரிதும் பாதிக்கும். இதற்கு மாறாக, இந்த குளிர்ந்த நிலைகளை கட்டுக்குள் வைக்கும் விலை மலிவான சில வழிகள் உள்ளன. இவற்றின் மூலமாக குளிர்காலத்தில் உங்கள் வீடு வெப்பமாக இருப்பதற்கு உதவும்.

குளிர்காலங்களில் உங்கள் வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக்குவதற்கான வழிகள் பல உள்ளன. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், சில எளிமையான அடிப்படை வழிகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டின் சுழலை எளிமையான முறையில் வெப்பமாக வைத்து குளிரை கட்டுப்படுத்தலாம். இந்த எளிய வழிகளை உபயோகித்து உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து குளிரால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சரியான திரைச்சீலைகளை உபயோகிப்பது
குளிர்காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாக வைப்பதற்கு நீங்கள் சரியான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வீட்டு பராமரிப்பு டிப்ஸ். சூரிய வெளிச்சம் உள்ளே வரும் ஜன்னல்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். மற்ற ஜன்னல்களுக்கு தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.

பர்னிச்சர்களை நகர்த்தி வைத்தல்
உங்கள் பர்னிச்சர்களை ஜன்னல் மற்றும் கதவுகளிடம் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும். இது வெப்பமாக்கும் கருவிகள் இல்லாமல் உங்கள் வீட்டை வெப்பமாக வைக்க உதவும் இயற்கையான முறைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டு பர்னிச்சர்களை ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும்.

செயற்கை அடுப்புகளை உபயோகிக்கக்கூடாது
செயற்கை அடுப்புகள் சுற்றுசூழலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி சிம்னி வழியாக வெளியேற்றிவிடும். அது எரிந்து கொண்டிருக்கும் போது வெப்பமாக இருந்தாலும், அதனை அணைத்த பின்பு உங்கள் அறையில் மீண்டும் குளிர் நிறைந்து இருக்கும்.

ஜன்னல்களை மூடி வைக்கவும்
இந்த வீட்டு பராமரிப்பு வழி மிகவும் எளிமையான ஒன்றாகும். வெப்பமாக இருப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைக்க வேண்டும். அவற்றை காற்றுப்புகாதவாறு அழுத்தி மூட வேண்டும்.

தடைகளை அகற்றுவது
குளிர்காலத்தில் சில நாட்கள் வெயில் வரக்கூடும். நமது வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக வைப்பதற்கு நமது வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற இடையூறுகளை நீக்க வேண்டும். இதன் மூலமான உங்கள் வீட்டிற்குள் அதிக சூரிய வெளிச்சம் வந்தடையும்.

கம்பளி மற்றும் தரைவிரிப்பான்
நீங்கள் இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து கொள்ள நினைத்தால், உங்களுக்கு அதிகமான கம்பளம் மற்றும் தரைவிரிப்பான்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஹால்,சாப்பிடும் அறை, படுக்கை அறைகளின் தரைகளில் உபயோகப்படுத்தவும்.

உரைகளை பயன்படுத்தவும்
உங்கள் ஹாலை வெப்பமாக்குவதற்கு பர்னிச்சர்களுக்கும் சோபாக்களுக்கும் கம்பளி உரைகளை பயன்படுத்தவும். இதன் மூலமாக ஒவ்வொரு முறை நீங்கள் சோபாவில் உட்காரும் போதும் குளிரை போக்கி வெதுவெதுப்பாக உணருவீர்கள்.

மெழுகுவர்த்திகள் பயன்படுத்தவும்
இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக்குவதற்கு மெழுகுவத்திகளை ஏற்றி வைக்க வேண்டும். இது விலை மலிவான வழி மட்டுமல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும். மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதன் மூலமாக குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான சூழ்நிலையில் இருந்து உங்கள் அறையை வெளிச்சமாகவும் வெப்பமாகவும் மாற்றும்.
 
Last edited:

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#3
Re: குளிர்கால டிப்ஸ்

குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...

குளிர்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய தொல்லை தான், மரச்சாமான்களில் பூஞ்சை படிவது. ஆம், இந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான ஈரப்பசை இருப்பதால், மரச்சாமான்களில் ஈரமானது தங்கி, பூஞ்சைகளை படிய வைக்கின்றன. இப்படி மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால், அது ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாக காணப்படுவதோடு, மரச்சாமானின் அழகு மற்றும் தரத்தை கெடுத்துவிடுகின்றன. எனவே வீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகளில் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், சரியாக பராமரிப்பது அவசியமாகும்.

அதுமட்டுமின்றி, நிபுணர்கள் வீட்டில் மரச்சாமான்கள் ஈரமாக இருந்தால், அவற்றை வெயிலில் நீண்ட நேரம் உலர வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் மரச்சாமான்களுக்கு போதிய வெயில் கிடைக்காவிட்டால், மீண்டும் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...

ஆகவே மரச்சாமான்களில் பூஞ்சை படியாமல் இருக்கவும், படிந்த பூஞ்சையைப் போக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி செய்து வந்தால், மரச்சாமான்களை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளலாம்.

* மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலி ஈரமாக இருந்தால், வெளியில் எவ்வளவு நேரம் வைக்க முடியுமோ, அவ்வளவு நேரம் வைக்க வேண்டும். இதனால் மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால் காய்ந்துவிடும். பின் அதனை எளிதில் நீக்கிவிடலாம்.

* ஈரமான மரச்சாமான்களில் உள்ள பூஞ்சையை துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து, பின் வெயிலில் காய வைக்க வேண்டும்.

* எவ்வளவு தான் பூஞ்சையை துடைப்பம் கொண்டு தேய்த்து நீக்கினாலும், தேய்த்த இடமானது வெள்ளையாக தெரியும். ஆகவே அப்படி தேய்த்த பின்பு, வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியைக் கொண்டு ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும்.

* வினிகர் கொண்டு துடைத்து எடுத்தப் பின்னர், அதனை வெளியே வெயிலில் குறைந்தது 2 மணிநேரமாவது உலர வைத்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

* மேற்கூறியவற்றை செய்து முடித்த பின், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை பஞ்சில் நனைத்து, அதனை மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் போல் தேய்த்தால், எலுமிச்சையானது மீண்டும் பூஞ்சை வராமல் தடுக்கும்.

* இறுதியில் மீண்டும் மரச்சாமான்களை வெயிலில் 1/2 மணிநேரம் உலர வைத்து எடுத்தால், உங்கள் மேஜை மற்றும் நாற்காலி புதிது போன்று பளிச்சென்று மின்னும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், நிச்சயம் குளிர்காலங்களில் வீட்டில் இருக்கும் மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலியை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Thank you for the useful tips guna sir & mythili aunty
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#7
உதவிகரமான டிப்ஸ் களுக்கு மிக்க நன்றி , குணா மற்றும் மைதிலி அக்கா
 

skarthiga

Friends's of Penmai
Joined
Apr 30, 2012
Messages
376
Likes
1,117
Location
dgl
#8
tks for usefu tips guna sir and mythili mam,,,,,,,,
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
குளிர்கால சரும பராமரிப்புகள்


குளிர்காலம் தொடங்கும் போது கூடவே தோல் தொடர்பான பிரச்சனைகளும் படையெடுக்கத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் நிலவும் வறட்சி மற்றும் குளிர்காற்றினால் தோல் வறட்சியடைந்து விடும். தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும்.

குளிர்காலத்தில், சருமத்தின் வறட்சியும் அதிகரித்து காணப்படும். ஏனெனில் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வீசுவதால், அவை சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்தை அதிகப்படியான வறட்சிக்கு உள்ளாக்கிவிடும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. ஒருவேளை சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் ஏற்படும் வறட்சி அதிகரித்து, ஆங்காங்கு வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவ்வப்போது சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டு வர வேண்டும்.

• அவகேடோ குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். ஆகவே அந்த பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.

• பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.

• வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

• ஓட்ஸ் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமத்தை வறட்சியில் இருந்து தடுக்கலாம். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, அதில் தேன், தயிர், சேர்த்து கலந்து, சில துளிகள் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

• பப்பாளியில் உடல்நல நன்மைகள் மட்டுமின்றி, பல அழகு நன்மைகளும் அடங்கியுள்ளன. அதற்கு பப்பாளியை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இத்தகைய ஃபேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள் -


குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில்,

உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.

இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.

கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

எனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக...

சத்தான உணவு :

குளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவாக சாப்பிடவும் :

குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி :

காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும்.

சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி :

சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும்.

மாய்ஸ்சுரைசர் :

குளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும்.

குளிர்கால உடை :

குளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

நோய்கள் :

குளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.

தியானம் :

மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

சூடான பானங்கள் :

சூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு!

காரம் கொஞ்சம் தேவை :

உடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் :

குளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

வைட்டமின் `டி' :

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும்.

தண்ணீர் :

சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே!

சன் ஸ்க்ரீன் :

குளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும்.

ஆற்றலுக்கு முன்னுரிமை :

உங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள். இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.