Tips to get rid of worry - கவலையை போக்க சில.........

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
கவலை வாழ்வைத் துன்பமயமாக்கி விடுகிறது.எனவே கவலைகளை ஒழித்தே ஆக வேண்டும்.அதற்கான சில பயிற்சிகள்:
1 தனிமையில் அமைதியாக உட்காருங்கள்.பேப்பர்,பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.
2 உங்கள் கவலைகளையெல்லாம் தொகுத்து வரிசைப் படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்.
3 கவலைதரும் சிக்கல்களை கீழ்க்கண்ட நான்கு வகைகளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
.அனுபவித்தே தீர வேண்டிய கவலைகள்.(தீராத நோய்,மரணம்,பொருள் இழப்பு போன்றவை)
.தள்ளி வைத்துப் பொறுமை கட்ட வேண்டிய கவலைகள்.(பருவம் வந்தும் திருமணம் ஆகாமை போன்றவை)
.அலட்சியப்படுத்த வேண்டிய கவலைகள்.(பிறரின் கருத்து வேறுபாடு, பொறாமைப் பேச்சு,செயல்கள் போன்றவை)
.உடனே தீர்த்து விட வேண்டியவை.(கடன் தொல்லை,பாகப் பிரிவினை,தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.)
இவ்வாறு தரம் பிரித்தவுடன் அவற்றிற்கேற்றவாறு செயல் பட வேண்டும்.
4 ஒரு சிக்கலை விரைவாகத் தீர்க்க உணர்ச்சி வசப்பட்டு செயலாற்ற வேண்டாம்.அறியாமையால் சிக்கல்களை மேலும் உண்டாக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.
5 முன்பு வந்த கவலைகள் எப்படித் தீர்ந்தன என்று யோசித்துப் பாருங்கள்.
6 வாழ்வில் சிக்கல்களே இருக்கக் கூடாது என்று எண்ணவோ ,இருப்பவற்றை எல்லாம் வேரோடு களைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யவோ, செயலாற்றவோ வேண்டாம்.ஒரு சிக்கல் தீர்ந்து மற்றொன்று முளைக்கும் போது ஏற்படும் கவலைகளைத் திட்டமிட்டு செயலாற்றி நீக்கிக் கொண்டால் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம்.

[TABLE]
[TR]
[TD] [/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#2
நல்ல தீர்வு சுபா......எழுதும் பொழுதே....பல பிரச்சனைகளுக்கு விடை கிடைத்துவிடும்..மனம் லேசாகிவிடும்....

விஷயங்கள் வெளியில் வந்து விட்டால் ....கனத்த மனம் கவலை அற்றதாகி விடும்......
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
ஆமாம் சித்ரா ......... நீங்கள் கூறுவது மிகவும் சரி.........நன்றி

நல்ல தீர்வு சுபா......எழுதும் பொழுதே....பல பிரச்சனைகளுக்கு விடை கிடைத்துவிடும்..மனம் லேசாகிவிடும்....

விஷயங்கள் வெளியில் வந்து விட்டால் ....கனத்த மனம் கவலை அற்றதாகி விடும்......
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#5
உபயோகமான டிப்ஸ் சுபா மற்றும் சித்ரா . மிக்க நன்றி .
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#9
உபயோகமான டிப்ஸ் சுபா மற்றும் சித்ரா . மிக்க நன்றி .

thanks ஜெயந்தி...... படித்தவுடன் தோன்றியதை சொன்னேன் ..அவ்வளவுதான்.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.