Tips to Get Soft & Smooth Hair Naturally - தலை முடி மென்மையாக

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,847
Likes
2,776
Location
Bangalore
#1
தற்போது பலர் கூந்தலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளை நாடிச் செல்கின்றனர். அப்படி கூந்தலைப் பராமரிக்க சரியான வழிகளை நாடிச் செல்லும் போது, நிறைய வழிகள் கிடைக்கும். அதில் டிவிக்களில் ஒளிபரப்பப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பற்றிய விளம்பரங்களைப் பார்த்து வாங்கி பயன்படுத்துவோர் தான் அதிகம். இப்படி வாங்கிப் பயன்படுத்துவதால், கூந்தலானது தனது ஆரோக்கியத்தையும், மென்மையையும் தான் இழக்கும்.
ஆகவே கூந்தலை மென்மையாக்குவதற்கு கண்ட கண்ட கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி கூந்தலைப் பராமரித்தால், கூந்தல் எப்போதும் ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் இருக்கும். இங்கு கூந்தலை ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் வைத்துக் கொள்ள சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

முட்டை

கூந்தலைப் பராமரிக்க முட்டை மிகவும் சிறப்பான பொருள். ஏனெனில் முட்டையில் கூந்தலுக்கு தேவையான புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் கூந்தலானது ஆரோக்கியமாகவும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு முட்டையை தேன், எலுமிச்சை அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட்டு, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

தேன்

பொதுவாக தேன் முடியில் பட்டால், முடி நரைத்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் தேனை முட்டை அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். ஒருவேளை அதிக நேரம் ஊற வைத்தால், முடியின் நிறமானது மங்க ஆரம்பித்துவிடும். எனவே முடி மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்க தேனை உபயோகியுங்கள்.

பால்

பாலிலும் புரோட்டீன் வளமாக நிறைந்திருப்பதால், அதனை தலை முடிக்கு தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால், அவை முடிக்கு ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மென்மையையும் கொடுக்கும்.

எண்ணெய்

கூந்தல் பராமரிப்பு என்று வரும் போது அதில் நிச்சயம் எண்ணெய் கொண்டும் பராமரிப்பதும் இருக்கும். அதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து குளித்து வந்தால் முடியானது பொலிவோடு மென்மையாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை அரைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

தயிர்

தயிரிலும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. மேலும் இது மிகவும் சிறப்பான மாய்ஸ்சுரைசரும் கூட. அதற்கு தயிரில் கடலை மாவு மற்றும் அரைத்த வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து கலந்து, தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும்.

பீர்

பீர் ஷாம்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின்னர், சிறிது பீரைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆப்பிள்

சீடர் வினிகர் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின்னர், ஆப்பிள் சீடர் வினிகரை சிறிது நீரில் கலந்து இறுதியில் கூந்தலை அலசினால், கூந்தல் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

எலுமிச்சை

தலைக்கு முட்டை, எண்ணெய், பால் அல்லது தேன் கொண்டு ஹேர் பேக் போடும் போது, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஹேர் பேக் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

கடலை மாவு

கடலை மாவை தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவினால், கூந்தல் நன்கு மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,847
Likes
2,776
Location
Bangalore
#2
re: Tips to Get Soft & Smooth Hair Naturally - தலை முடி மென்மையாக

தலைமுடியின் வறட்சியை போக்க வாரம் ஒரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். முடி மென்மை யாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். பொடுகு தொல்லை நீங்க தேங்காய் பூவை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து பிழிந்து வடிகட்டி முடியின் வேர்களில் தடவி 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். வாரம் ஒரு முறை செய்யவும். பேன் தொல்லை நீங்க வேப்பிலையை அரைத்து தலையில் பேக்காக போட்டு அரைமணி நேரம் கழித்து முடியை அலசவும்.

வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவி விட்டு வர வேண்டும். இது சுகாதாரமான பழக்கம் மட்டுமல்ல, உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் பழக்கமாகும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது. தினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடைத்துக் கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. குதிகால் பகுதிகளில் கடினமாகியிருக்கும் தோல்(டெச் செல்) பகுதியை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும்.

அவ்வப்போது, நகங்களை வெட்டி விட வேண்டும். கால்களுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும், குதிகால் உயர்ந்த செருப்புகளை அத்தியாவசியமான நேரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும். 60 வயதுக்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகி விடும். எலும்புகளும் பலவீன மடைந்திருக்கும். எனவே அவர்கள் இதமான எடை குறைந்த செருப்பை தேர்வு செய்வது அவசியம். குளிர் காலங்களில் வெறும் கால்களால் கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல்லெண்ணெய் தடவி படுத்தால் உடல் சூடு, கண்களில் எரிச்சல் குறையும். சுடுநீரில் ஒரு பிடி கல்உப்பை போட்டு கால்களை 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் பாதங்களில் உள்ள வலி குறையும். பித்த வெடிப்பு உள்ளவர்கள் பாதங்களை ஊறவைத்து பின்னர் பியூமிஸ் கற்களை கொண்டு தேய்த்தால் வெடிப்பு குணமாகும். பாதங்களை பராமரிப்பதில் ஆண், பெண் பேதம் தேவையில்லை.

முடி கொட்டுதலை தவிர்க்க ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழத்தின் காய்ந்த தோல், பூந்திக்காய், செம்பருத்திபூ மற்றும் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு இதை அரைத்து பேஸ்ட்டாக்கி ஷாம்பூ போல் உபயோகித்து தலைக்கு குளியுங்கள்.

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.