Tips to handle the New borns-குழந்தை வளர்ப்பது ஒரு தவம் மாதிரி!

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1


குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறு பிறவி என்பார்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதை வளர்ப்பது ஒரு தவம் மாதிரி!குழந்தை அழுதால் அழுகவும், சிரித்தால் சிரிக்கவும், ஏதாவது தொந்தரவு
என்றால் அதை நீக்கி சீராட்டி, தாலாட்டுவதும் உண்மையிலேயே சுகமான சுமைதான்!


குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு எப்படி பாதுகாத்து வளர்க்கப் போகிறோம்
என்ற பயம் வந்துவிடுகிறது. தலையின் அமைப்பு கூம்பு மாதிரி
இருக்கிறாதே...இது சரியாகி விடுமா? கண் பார்வை சக்தி எப்படி உள்ளதோ? காது
நன்றாக கேட்கிறதா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழும்பி, அதுவே பயமாக
மாறிவிடுகிறது.


அதனால்தான் கர்ப்பம் முழுமையானதில் இருந்து, குழந்தை பிறந்து, 3 மாதம்
வரை பெண்கள் தங்களது தாய் வீட்டில் இருக்க விரும்புவார்கள். இருந்தாலும்
இன்றைய அவசர யுகத்தில் இது சாத்தியமா? என்பது சந்தேகமே! பல்வேறு
காரணங்களால் தாய் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் இன்றைய பெண் கள்
வாழ்ந்து வருகின்றனர்.குழந்தை பிறந்தவுடன், சருமத்தில் சிவப்பு கலந்த நீல நிறம் காணப்படும்.
இப்படி இருந்தால் தாய்மார்கள் பயம் கொள்ளத்தேவையில்லை. காலப்போக்கில் அது
மாறிவிடும். சிவப்பாக படை போல் இருந்தால் டாக்டரிடம் சோதனை செய்வது
நல்லது.


குழந்தை பிறந்து 36 மணி நேரத்தில் அம்மாவை அடையாளம் தெரிந்துகொள்ளும்
என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கருவறையில்
இருக்கும்போது, அம்மாவின் சத்தத்தை அதிகமாக கேட்பதால் குழந்தைக்கு தாயை
அடையாளம் தெரிந்து கொள்ளும். அதேபோல் 72 மணி நேரத்தில் அனைத்து
சத்தத்தையும் கிரகித்து வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுமாம்!


தாயின் உடல் வாசனை மற்றும் பால் மணத்தை ஒரு சில நாட்களிலேயே புரிந்து
கொள்ளும். சில தாய்மார்கள் ஒருசில காரணங்களால் பாலூட்ட முடியாத
சூழ்நிலையில், வேறு பெண்கள் பாலூட்டினால் பால் மணத்தின் மூலம்
வேறுபாட்டைத் தெரிந்துகொண்டு குழந்தைகள் பாலை குடிக்க விரும்பாது. இதனால்
குழந்தை பெற்ற பெண்கள் வாசனை மிக்க பவுடர், சென்ட் பயன்படுத்தாமல்
தவிர்த்து இயற்கை மணத்துடன் இருப்பது குழந்தைக்கு நல்லது.


குழந்தை பிறந்த 2வது நாளிலேயே தாய்மார்கள் தங்களது குழந்தையுடன்
இனிமையாக பேசி, உடலை அசைத்து விளையாட வேண்டும். அதேபோல் குழந்தையும் பண்ண
முயற்சிக்கும். இதனால் குழந்தைக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்
வளர்ச்சி ஏற்படும்.


குழந்தைகளை எப்படி கையில் எடுப்பது என்ற சந்தேகம் பெரும்பாலான
பெண்களுக்கு ஏற்படும். தலையை தாங்கியபடி எடுத்து, மார்போடு அனைத்து
கொள்ளவேண்டும். தாயின் தோளில் சாய்ந்து கொள்ள எல்லா குழந்தைகளுமே
விரும்பும். அப்படி தோளில் சாய்த்து வைக்கும்போது குழந்தையின் தலையை
தாங்கியவாறு கவனமாக வைத்திருக்க வேண்டும்.


குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, அம்மாவின் சூடு, இதயத்துடிப்பின்
தாளம் ஆகியவற்றை குழந்தை ரசித்தபடி பால் குடிக்கும். ஆதலால், குழந்தையை
நெருக்கமாக அணைத்து, பால் குடுப்பது நல்லது. அதாவது, குழந்தையின் வயிறும்,
அம்மாவின் வயிறும் இணைந்தபடி பால் கொடுக்க வேண்டும். சிஷேரியன்
பண்ணியிருந்தாலும்கூட உட்கார்ந்தபடி பால் கொடுப்பதுதான் சிறந்தது.


தாய்மார்கள் படுத்தபடி பால் கொடுக்கவே கூடாது. இதனால் குழந்தையின்
வாய்க்குள் காற்று புகுந்து புரை ஏறும். இதனால் குழந்தையின் வளர்ச்சியும்
பாதிக்கப்படும். அதேபோல் மார்புகாம்பு சுற்றியுள்ள பகுதியையும் குழந்தை
வாய்க்குள் இருக்குமாறு பால் கொடுக்க வேண்டும். காம்பு மட்டும் வாய்க்குள்
இருக்குமாறு பால் கொடுத்தால் குழந்தைக்கு வயிறு தொடர்பான உபாதைகள்
ஏற்படும்.


பிறந்த குழந்தைகள் அழுவது பாலுக்காக மட்டுமல்ல... சிறுநீர்
கழித்ததாலும் இருக்கலாம், பால் குடித்தவுடன் அழுதால் வாயு தொந்தரவாகவும்
இருக்கலாம், சூழல் ஒத்துக்கொள்ளாமல் இருப்பதாலும் அழுகலாம். என்ன
பிரச்சினை என்பதை அறிந்து சரி செய்ய வேண்டும். பின்னர் தோளில் போட்டு
முதுகில் மெதுவாக தட்டிக் கொடுக்க வேண்டும்.பிறந்த சில நாட்களில் சில குழந்தைகளுக்கு மார்பிலிருந்து ஒரு சில
சொட்டுகள் பால் கசியும். அதேபோல் பெண் குழந்தையாக இருந்தால், மாதவிலக்கு
சமயத்தில் வருவதுபோல் ரத்தம் கசியும். இதுகுறித்து பயம் வேண்டாம்.
அம்மாவின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் இப்படி ஏற்படும். சில ஆண்
குழந்தைகளுக்கு சிறுநீர் சொட்டுசொட்டாக வடியும்.


இது நாளாக நாளாக சரியாகி விடும். தொடக்கத்தில் 20 மணி நேரம் தூங்கும்
குழந்தைகள் நாள் ஆக ஆக தூக்கத்தின் நேரம் குறையும். பிறந்த ஒரு வாரம் வரை
குழந்தை ஆழ்ந்து தூங்கினாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பால் கொடுப்பது
நல்லது. அடிக்கடி விழித்தால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.


நல்ல காற்றோட்டம் இல்லாமை, அசுத்தம், தூக்கமின்மை, கொசு கடித்தல் ஆகிய
காரணங்களால் குழந்தை அழுகலாம். காரணம் அறிந்து குழந்தையை பராமரிக்க
வேண்டும். குழந்தைகள் என்பது கடவுளின் பிம்பங்கள் என்பார்கள்! குழந்தையை
பராமரிப்பது நாம் இறைவனுக்கு செய்யும் தொண்டுதான்!


உடனடியாக டாக்டரிடம்...


* தொப்புள்கொடி விழுவதற்கு முன் ரத்தப்போக்கு, கெட்ட வாடை மற்றும் சீழ் பிடித்தால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.


* அடிக்கடி காப்பி நிறத்தில் வாந்தி எடுத்தால்...


* மலத்துடன் ரத்தமும் சேர்ந்து வந்தால்...


* பிறந்த 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை குழந்தையின் தோல் நிறம் மஞ்சளாக இருந்தால்...


* பால் குடிக்காமல் அடிக்கடி அழுது கொண்டிருந்தால்...


* குழந்தையின் உடம்பு அதிகமாக சூடாக இருந்தால் அல்லது அதிகமாக குளிராக இருந்தால்..


* தலையின் நடுப்பகுதியில் திடீரென குழி விழுந்தால் அல்லது மேடாக இருந்தால்...


* பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி, மூச்சு திணறினால் உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.


கூடவே...கூடாது!


* விளம்பரங்களை பார்த்துவிட்டு, கண்ட கண்ட நாப்கினை குழந்தைக்கு
அணிவிக்கக் கூடாது. காட்டன் துணிகளால் தயாரிக்கப்பட்ட நாப்கினை மட்டுமே
அணிவிக்கவும்.


* குழந்தை தூங்கும் இடத்தில் கண்டிப்பாக கொசுபத்தி, லிக்ïட் வேண்டாம். கொசுவலை மட்டும் போதும்.


* குழந்தையின் உடைகளை துவைக்கும் போது கிருமிநாசினிகளை பயன்படுத்த
வேண்டாம். இதனால் குழந்தைக்கு தோல் அலர்ஜி ஏற்படும். சோப் மற்றும்
சுடுநீரில் துவைத்தால் போதும்.


* குழந்தையின் முகத்தில் நேரடியாக காற்று படுமாறு மின்விசிறியை வைக்கக் கூடாது.


* தாய்க்கு காய்ச்சல், ஜலதோஷம் இருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை
நிறுத்தக்கூடாது. குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி, குடிக்கும்
தாய்ப்பாலிலேயே உள்ளது.


நன்றி: தந்தி
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Very useful share Jaya. will be useful for all the new moms.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.