Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப்&#

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப்பர் டிப்ஸ்!

‘படிக்கும் பாடங்கள் எழுதும்போது சட்டென மறந்து க்ளீன் ஸ்லேட்டாகி விடுகிறான்...’, ‘கேள்வி கேட்கும்போது சரியான பதில் சொல்பவன், தேர்வில் மறதியினால் தவறாக எழுதிவிடுகிறான்’ என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் தேர்வுநேரப் புலம்பல். படிப்பில் கவனம் செலுத்துவதற்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர். என்ன சாப்பிடலாம்? பழங்கள், நட்ஸ், உலர்ந்த பழங்கள், பழச்சாறுகளைத் தினசரி உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். இதிலுள்ள செலினியம், மக்னீசிய தாது உப்புக்கள் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. வால்நட்ஸ், அக்ரூட், பாதாம் வகைகளைத் தினமும் சாப்பிடக் கொடுக்கலாம். வல்லாரைக் கீரையிலுள்ள இரும்பு மற்றும் மக்னீசியம் ஞாபக சக்திக்கு உத்வேகம் தரும். அவரைக்காய், வெண்டைக்காயில் டோபோமைன் சத்து மூளையினைத் தூண்டிவிட்டு செயல்பட உதவுகிறது.

உணவில் தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்வதோடு அதன் சத்துக்களை உறிஞ்சும் தன்மையும் தயிருக்கு உண்டு. வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்கள் சாப்பிடலாம். எப்போது சாப்பிடலாம்? ‘‘காலை ஏதாவது ஒரு பழம் மற்றும் நட்ஸ் கொண்ட மில்க்‌ஷேக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துமாவு, பொட்டுக்கடலை (அ) கேழ்வரகு கஞ்சி சாப்பிடுவதால், அதில் உள்ள கால்சியம் உடலுக்கு வலு தரும். ஸ்நாக்ஸாக முளைகட்டிய பயிறு, உலர்ந்த பழங்கள், நட்ஸ், சுண்டல். மதிய உணவுக்கு புரதச்சத்து உணவுகள். வெண்டைக்காய், பாலக்கீரை, வல்லாரைக்கீரை என ஒரு கீரை வகை உணவில் அவசியம். கீரை சாப்பிடாத குட்டீஸ்களுக்கு கீரை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து புலாவ் செய்து தரலாம். பனீர், மீன், முட்டை, மஷ்ரூம் உணவுகளும் சாப்பிடலாம். மாலையில் பழங்கள், பழச்சாறுகள், சுண்டல்கள், வேக வைத்த கடலை, வேர்க்கடலை (அ) பொட்டுக்கடலை உருண்டை சாப்பிடலாம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

வேண்டாமே ப்ளீஸ்!

சத்துமாவு, பொட்டுக்கடலை (அ) கேழ்வரகு கஞ்சி இரவில் சாப்பிட்டால் ஜீரணிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற உணவுகள் மூளையை மந்தமாக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு வடிவிலான உடற்பயிற்சி அவசியம். காபியிலுள்ள காஃபீன் குறிப்பிட்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி தருமே தவிர, நாளடைவில் மறதியை அதிகரிக்கச் செய்யும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,906
Likes
76,713
Location
Hosur
#3
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&#302

Wonderful suggestion to improve memory power in children, thanks for sharing Bhuvana.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#5
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&

Wonderful suggestion to improve memory power in children, thanks for sharing Bhuvana.
Thank you Sumi ka :)
 

coolbuddy21982

Friends's of Penmai
Joined
Aug 26, 2011
Messages
215
Likes
165
Location
chennai
#6
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&#302

Hi,
Can I have some tips to increase brain development in a child
 

srathi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 28, 2011
Messages
1,449
Likes
1,943
Location
singapore
#7
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&#302

Hi Bhuvana,

Thanks for sharing valuable information bhuvana:):thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup
 

srathi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 28, 2011
Messages
1,449
Likes
1,943
Location
singapore
#8
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்


தேன்
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். 

srathi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 28, 2011
Messages
1,449
Likes
1,943
Location
singapore
#9
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்

எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்

படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.

குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.

மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் இருந்து, லாங்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் . ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#10
Re: Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப&

Hi Bhuvana,

Thanks for sharing valuable information bhuvana:):thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup
Most welcome & thanks for the useful tips friend :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.