Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
E_1379834234.jpeg

வேலை வேலை என்று காலில் சக்கரம் கட்டி, ஓடிக் கொண்டிருக்கிறோம். காலை முதல் இரவு வரை, எதைப் பற்றியும், யாரை பற்றியும் கவலைப்படாமல், பணம் ஒன்றையே பிரதானமாக கருதி வாழ்ந்து வருகிறோம். இது, பல குடும்பங்களில் பிரச்னையை உருவாக்குகிறது. குடும்பம் மற்றும் மனித உறவுகளை அலட்சியப்படுத்திவிட்டு, வயதான காலத்தில் வருந்தி என்ன பயன்? இந்த நிலையிலிருந்து மீண்டு வர, கீழே தொகுத்துள்ள, "டிப்ஸ்’களை பின்பற்றி தான் பாருங்களேன். வாழ்க்கை, தென்றல் வீசும் சோலை வனமாக மாறும் என்பது நிச்சயம்.

* காலையில் எழும்போதே, பல நாட்களாக செய்யாமல் வைத்திருக்கும் வேலையை, "இன்று, எப்படியேனும் செய்து முடிப்பேன்…’ என்று, அன்றைய தினமே செய்ய முயற்சி செய்யுங்கள்.

* வீட்டில் எல்லாருடனும் அன்பாக பழகுங்கள். முடிந்தால், வீட்டிலுள்ளவர்களுக்கு, சிறு சிறு உதவிகளை செய்து, அவர்களின் நன் மதிப்பைப் பெற முயற்சி செய்யுங்கள்.

* வயதானவர்கள் வீட்டிலிருந்தால், அவர்களின் உடல்நிலை பற்றியோ, அவர்களின் பழைய நாட்களை நினைவு படுத்தியோ, சிறிதுநேரம் அவர்களுடன் உரையாடுங்கள்.

* சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் டென்ஷனாகாமல், ஆற, அமர யோசித்துச் செயல்படுங்கள். இதனால், உங்கள் உடல் நிலையும் கெடாமலிருக்கும்.

* எதையும் மனதிற்குள்ளேயே வைத்து மருகாமல், வீட்டிலுள்ளவர்களிடம் கூறி, அவர்களின் எண்ணத்தையும் அறிந்து, அதற்கு மேல், எது சரியாகப்படுகிறதோ அதைச் செய்யுங்கள். அதே சமயம், விஷயத்தை பெரிதுபடுத்தாமல், விரைவில் சரிபடுத்த முயற்சி செய்யுங்கள்.

* "மவுனம் சர்வார்த்த ஸாதகம்’ என்று, சமஸ்கிருதத்தில் சொல்வர். அதாவது, சில விஷயங்களில், மவுனமாக இருந்து விடுவதே சாலச் சிறந்தது.

* குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள் இவற்றை நினைவில் வைத்திருந்து, அவர்களுக்கு வாழ்த்து சொல்வதுடன், உங்கள் வசதிக்கேற்ற பரிசுகளை கொடுங்கள். இதனால், அவர்கள் சந்தோஷப்படுவதோடு, உங்களுக்கும் சந்தோஷம் ஏற்படும்!



 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Hi Sumathisrini, very useful tips to make our life pleasant and tension free. Thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
மிக மிக அவசியமான பகிர்வு . நன்றி சுமதி
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#5

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,993
Location
Atlanta, U.S
#6
அத்தனையும் உண்மை...
ஆனா சில விஷயங்கள் நம்மால் பின்பற்ற முடியலை....இனிமே ட்ரை பண்ணுறேன்...!!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#8
மிக மிக அவசியமான பகிர்வு . நன்றி சுமதி
அத்தனையும் உண்மை...
ஆனா சில விஷயங்கள் நம்மால் பின்பற்ற முடியலை....இனிமே ட்ரை பண்ணுறேன்...!!
nalla arivurai.........thanks sumathi............
Good morning, thanks & welcome friends :).
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.