Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
குழந்தைகளைத் தூங்க வைப்பதும் ஒரு கலையாகத்தான் உள்ளது .தெரியாத பெற்றோர்களுக்கு இவை உபயோகமாக இருக்கலாம் .

1. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே அவர்களை உறங்க வைக்கப் பழக்கப் படுத்தலாம் .அதனால் , அந்த நேரம் வரும்போது , தானாக அவர்களுக்குத் தூக்கம் வரத் துவங்கும் .

2. சிறு குழந்தைகளை , மதிய நேரத்திலும் , தூங்க வைப்போம் .இது போல செய்வது ஒரு 2 அல்லது 2 ½ வயது வரை சரியாக இருக்கும் . அதற்குப் பிறகு , மதியம் அவர்கள் அதிக நேரம் உறங்கி விட்டால், இரவில் தூங்கப் படுத்துவார்கள் .அதனால் , மதியம் அவர்களைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைக்க வேண்டும் என்பதில்லை .

3. 2 வயதிலிருந்தே , தூங்குவதற்கு முன் , ஒரு முறை , பற்களை நன்றாக பிரஷ் செய்துவிட்டுப் படுக்கும் பழக்கத்தினைக் கற்றுத் தரவும் . நீங்களும் அவர்களுடன் பிரஷ் செய்தால், தானாக ,இந்தப் பழக்கம் வந்துவிடும் .

4. தூங்கும் அறையை , தூங்குவதற்கு ஏற்ப தயார் படுத்தவும் . வெளிச்சம் இல்லாமல் , சத்தம் வராமல் , படுக்கை , நல்ல மெத்தென்று இருப்பது இவற்றை எல்லாம் , கவனிக்கவும் .

5. சில குழந்தைகள் , கையில் teddy bear போன்ற பொம்மைகளை வைத்துக்கொண்டு தூங்க விரும்புவார்கள் . சிலர் ,கையில் குட்டித் தலைகாணியைப் பிடித்துக்கொண்டு தூங்க விரும்புவார்கள் . அதை ஏற்பாடு செய்யவும் .

6. இரவு உணவைக் கட்டாயம் உண்ண வைக்கவும் . இல்லாவிட்டால் , நடுஇரவில் எழுந்து ,”பசிக்கிறது “ என்று படுத்துவார்கள் .

7. ஒருவேளை , உண்ணாமலேயே , தூங்கி விட்டால் , அவர்களைச் சாய்த்து வைத்துக்கொண்டு, பாலை நிறையக் கொடுத்து விடவும் .

8. தூங்குவதர்க்கு முன் , கட்டாயம் சிறுநீர் கழிக்கச் சொல்ல வேண்டும் .

9. நடுஇரவிலும், நீங்கள் , அலாரம் வைத்துக்கொண்டாவது , ஒரு முறை , குழந்தையைத் தூக்கிச்சென்று சிறுநீர் கழிக்கச் சொல்லவும் . இதனால் , bedwetting கண்டிப்பாக இருக்காது .

10. படுக்குமுன் , உடையை நல்ல லூசாக இருக்குமாறு , பருத்தி உடையை அணியச் செய்யவும் .

11. கதைகள் சொல்லி உறங்க வைக்கலாம் . இதற்க்காகவே , விற்கும் கதைப் புத்தகங்களையும் , உங்களுக்குத் தெரிந்த நல்ல moral கதைகளையும் சொல்லித் தூங்க வைக்கலாம் .

12. இல்லாவிட்டால் , இனிய இசையை , கேட்க விட்டு (இதற்குப் பல உபகரணங்கள் உள்ளன ) தூங்க வைக்கலாம் .

13. சில பெற்றோர்கள் , குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது , வாயில் கையைச் சூப்பச் சொல்வார்கள் . அப்போதுதான் , குழந்தை நன்றாகத் தூங்கும் என்றும் காரணம் சொல்வார்கள் . கண்டிப்பாக இந்தப் பழக்கத்தைத் தவிர்க்கவும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine February 2018. You Can download & Read the magazines HERE.


 
Last edited by a moderator:

rameshshan

Commander's of Penmai
Joined
May 7, 2012
Messages
1,392
Likes
7,248
Location
Bangalore
#2
Retrospective! with experience from yours....very valid jv. All ur points are in-force for my son.
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#4
Super post. Thanks for the tips jayanthi.
Apdiye 2 months baby yavum epdi thoonga veikarathunu solli kodungalan. Day time la thoongitu ngt la thoongama azhara. Enna pa seirathu?
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Super post. Thanks for the tips jayanthi.
Apdiye 2 months baby yavum epdi thoonga veikarathunu solli kodungalan. Day time la thoongitu ngt la thoongama azhara. Enna pa seirathu?

Thanks and Welcome Krithika......

Naan already innoru thread Newborn &infants la potruken, keezha andha link koduthu iruken paarunga.

But, sila kuzhandhaigal, enna reason ne theriyama, atleast for a few months....may be till 1 year.....indha maadhiri, night la mattum thoongama, azhudutte iruppanga......adhuku naama edhuvume seyya mudiyadhu.......naamalum serndhu kashta pattudhaan aganum.....

Anyway.....naan indha below tips la solli irukaradhu ellathayum try panni paarunga.....
.



http://www.penmai.com/forums/newborn-infants/65580-tips-make-infants-sleep.html
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#6
Thanks and Welcome Krithika......

Naan already innoru thread Newborn &infants la potruken, keezha andha link koduthu iruken paarunga.

But, sila kuzhandhaigal, enna reason ne theriyama, atleast for a few months....may be till 1 year.....indha maadhiri, night la mattum thoongama, azhudutte iruppanga......adhuku naama edhuvume seyya mudiyadhu.......naamalum serndhu kashta pattudhaan aganum.....

Anyway.....naan indha below tips la solli irukaradhu ellathayum try panni paarunga.....
.



http://www.penmai.com/forums/newborn-infants/65580-tips-make-infants-sleep.html
Oh k k pa. Ama romba kashtama than iruku. :(
K pa . Naan try panni parkaran. Thanks :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.