Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில ட&

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
சிறு குழந்தைகளைத் தூங்க வைக்கும் முறைகளைப் பார்ப்போம்

1. பிறந்த சில நாட்களுக்கு , குழந்தைகள் , உங்கள் அணைப்பையும் , நெருக்கத்தையும் , அதிகமாகவே வேண்டுவார்கள் . இது , அவர்களுக்கு , உங்கள் வயிற்றில் இருந்தபோது கிடைத்த பாதுகாப்பு உணர்வைப் பெற விரும்புவதால் .

2. ஒரு நாளில் 18 மணி நேரம் வரை கூட தூங்குவார்கள் .மாதங்கள் செல்லச் செல்ல , இது குறையும் .

3. முடிந்தவரை , குழந்தைகளை , தூளியில் தூங்க வைப்பதைத் தவிர்க்கவும் .

4. தூளியில் தூங்கினால்தான் , குழந்தைக்கு அடக்கமாக இருக்கும், நிம்மதியாகத் தூங்குவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் .ஆனால் , படுக்கையில் அப்படியே படுக்க வைத்துப் பழக்கப் படுத்தினால் , அப்போதும் நன்றாகவே தூங்குவார்கள் .

5. தூளிப் பழக்கம் பண்ணுவதால் , சில கஷ்டங்கள் உண்டு .

a. வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது , தூளிதான் வேண்டும் என்று , குழந்தை அடம் செய்யும் . சாதாரணமாகத் தூங்காது .

b. Train, bus, போன்றவற்றில் செல்லும்போது , தூளி கட்டுவது சிரமம் . பிறர் வீட்டுக்குச் சென்றால் , தூளி கட்ட வசதி இல்லாமல் போகலாம் .

c. தூளியில் தூங்கும் குழந்தை , அந்தப் பழக்கத்தை , பல வருடங்களுக்கும் கடைப்பிடிக்கலாம் .

d. மாதங்கள் ஏற ஏற , குழந்தை , அந்தத் தூளியில் இருந்து தானாக , இறங்கி விழுந்துவிட வாய்ப்பு அதிகம் .

6 . குழந்தை தூங்கும்போது , சத்தம் , வெளிச்சம் இவை வராமல் , பார்த்துக் கொள்ளவும் .

7 . குழந்தையை மடியில் வைத்துத் தட்டித் தாலாட்டித் தூங்க வைக்கலாம் .

8. பாட்டுப்பாடி தூங்க வைக்கலாம் . இல்லை பாட்டைக் கேட்க வைத்துத் தூங்க வைக்கலாம் .

9 . உங்கள் வயிற்றில் குழந்தை இருந்தபோது , நீங்கள் அடிக்கடி கேட்ட பாடலை , இப்போதும் கேட்டால், குழந்தைக்கு அது மிகவும் பரிச்சயமான பாடலாக உணர்ந்து , உடனே தூங்கத் துவங்கும் .

10. மடியிலிருந்து , பின்னர் , குழந்தைக்கென்றே பிரத்தியேகமாக உள்ள , படுக்கையை தயார் செய்து , அதில் குழந்தையை விட்டு , நாலா பக்கமும் , தலைகாணியை அண்டக் கொடுக்கவும் .

11. 1 வயது வரை , இரவு நேரங்களில் மட்டும் , குழந்தைக்கு , diaper உபயோகித்தால், disturbance இல்லாமல் , குழந்தை நன்றாகத் தூங்கும் .

12. இல்லாவிட்டால் , நீங்கள் அடிக்கடி எழுந்து , குழந்தை ஈரம் பண்ணிவிட்டதா என்று செக் செய்ய வேண்டும் .

13. அவ்வப்போது , குழந்தைக்குப் பசி எடுத்துக் கொண்டு இருக்கும் . 6 மாதம் வரை , உங்கள் பாலை மட்டுமே புகட்டுவதால் , இரவிலும் அடிக்கடி புகட்ட வேண்டி இருக்கும் .

14. 6 மாதங்களுக்குப் பிறகு , திட உணவு பழக்கப் படுத்துவதால் , பசி கொஞ்சம் மட்டுப் படும் . இரவில் பால் கொடுக்கவேண்டிய அவசியமும் குறையும் .

15. குழந்தை நகர் ஆரம்பித்த பிறகு , பகலில் , கட்டிலில் படுக்க வைக்காமல் , கீழே , படுக்கையை தயார் செய்து , படுக்க வைக்கவும் . இல்லாவிட்டால் , அப்படியே பிரண்டு பிரண்டு , கீழே விழுந்து விட வாய்ப்பு உண்டு .இரவில் உங்களுக்குப் பக்கத்தில் படுக்க வைக்கலாம் .

16. எந்தக் காரணம் கொண்டும் , நீங்களே குழந்தைக்கு , தூங்கும்போது வாயில் கையைப் போட்டு சூப்பச் சொல்லவேண்டாம். அப்படி அதுவே சூப்பத் தொடங்கினால் , மெதுவாக , அதை மாற்ற , உங்கள் உடையின் நுனி அல்லது , ஏதாவது விளையாட்டு சாமான் போன்றவற்றைக் கொடுத்து , அந்த எண்ணத்தை மாற்றிவிடவும் .

17. அந்தந்த climate க்கு ஏற்ப , உகந்த ஆடைகளை அணிவித்து , தூங்க வைக்கவும் .அவ்வப்போது , போர்வையை போர்த்தி விடவும் . நகர்ந்து விட வாய்ப்புண்டு .

18. தூங்க வைக்கும்போது , முதுகு பக்கம் , ஆடையில், முடிச்சுப் போடவேண்டாம் . இது உறுத்தும் . அதே போல , ஆடையிலோ , படுக்கையிலோ , எறும்பு , பூச்சி எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் .
19. குளிராக இருக்குமானால் , கைகளிலும் , கால்களிலும் , socks போட்டு விட்டால் , இதமாக இருக்கும் .

20. வயிறு நிரம்பப் பால் கொடுத்து, ஏப்பம் விட்ட பிறகு , தூங்க வைக்கவும் .
 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#2
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &#29

ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ஜெயந்தி, பலருக்கும் மிகவும் உபயோகமா இருக்கும்... நன்றி!
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &amp

Thanks and welcome Karthi and Sumathi
 
kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#4
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &#29

Thanks jayanthi. Really Useful tips pa.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5

Welcome Kirthika
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &#29

சிறு குழந்தைகளைத் தூங்க வைக்கும் முறைகளைப் பார்ப்போம்

1. பிறந்த சில நாட்களுக்கு , குழந்தைகள் , உங்கள் அணைப்பையும் , நெருக்கத்தையும் , அதிகமாகவே வேண்டுவார்கள் . இது , அவர்களுக்கு , உங்கள் வயிற்றில் இருந்தபோது கிடைத்த பாதுகாப்பு உணர்வைப் பெற விரும்புவதால் .

2. ஒரு நாளில் 18 மணி நேரம் வரை கூட தூங்குவார்கள் .மாதங்கள் செல்லச் செல்ல , இது குறையும் .

3. முடிந்தவரை , குழந்தைகளை , தூளியில் தூங்க வைப்பதைத் தவிர்க்கவும் .

4. தூளியில் தூங்கினால்தான் , குழந்தைக்கு அடக்கமாக இருக்கும், நிம்மதியாகத் தூங்குவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் .ஆனால் , படுக்கையில் அப்படியே படுக்க வைத்துப் பழக்கப் படுத்தினால் , அப்போதும் நன்றாகவே தூங்குவார்கள் .

5. தூளிப் பழக்கம் பண்ணுவதால் , சில கஷ்டங்கள் உண்டு .

a. வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது , தூளிதான் வேண்டும் என்று , குழந்தை அடம் செய்யும் . சாதாரணமாகத் தூங்காது .

b. Train, bus, போன்றவற்றில் செல்லும்போது , தூளி கட்டுவது சிரமம் . பிறர் வீட்டுக்குச் சென்றால் , தூளி கட்ட வசதி இல்லாமல் போகலாம் .

c. தூளியில் தூங்கும் குழந்தை , அந்தப் பழக்கத்தை , பல வருடங்களுக்கும் கடைப்பிடிக்கலாம் .

d. மாதங்கள் ஏற ஏற , குழந்தை , அந்தத் தூளியில் இருந்து தானாக , இறங்கி விழுந்துவிட வாய்ப்பு அதிகம் .

6 . குழந்தை தூங்கும்போது , சத்தம் , வெளிச்சம் இவை வராமல் , பார்த்துக் கொள்ளவும் .

7 . குழந்தையை மடியில் வைத்துத் தட்டித் தாலாட்டித் தூங்க வைக்கலாம் .

8. பாட்டுப்பாடி தூங்க வைக்கலாம் . இல்லை பாட்டைக் கேட்க வைத்துத் தூங்க வைக்கலாம் .

9 . உங்கள் வயிற்றில் குழந்தை இருந்தபோது , நீங்கள் அடிக்கடி கேட்ட பாடலை , இப்போதும் கேட்டால், குழந்தைக்கு அது மிகவும் பரிச்சயமான பாடலாக உணர்ந்து , உடனே தூங்கத் துவங்கும் .

10. மடியிலிருந்து , பின்னர் , குழந்தைக்கென்றே பிரத்தியேகமாக உள்ள , படுக்கையை தயார் செய்து , அதில் குழந்தையை விட்டு , நாலா பக்கமும் , தலைகாணியை அண்டக் கொடுக்கவும் .

11. 1 வயது வரை , இரவு நேரங்களில் மட்டும் , குழந்தைக்கு , diaper உபயோகித்தால், disturbance இல்லாமல் , குழந்தை நன்றாகத் தூங்கும் .

12. இல்லாவிட்டால் , நீங்கள் அடிக்கடி எழுந்து , குழந்தை ஈரம் பண்ணிவிட்டதா என்று செக் செய்ய வேண்டும் .

13. அவ்வப்போது , குழந்தைக்குப் பசி எடுத்துக் கொண்டு இருக்கும் . 6 மாதம் வரை , உங்கள் பாலை மட்டுமே புகட்டுவதால் , இரவிலும் அடிக்கடி புகட்ட வேண்டி இருக்கும் .

14. 6 மாதங்களுக்குப் பிறகு , திட உணவு பழக்கப் படுத்துவதால் , பசி கொஞ்சம் மட்டுப் படும் . இரவில் பால் கொடுக்கவேண்டிய அவசியமும் குறையும் .

15. குழந்தை நகர் ஆரம்பித்த பிறகு , பகலில் , கட்டிலில் படுக்க வைக்காமல் , கீழே , படுக்கையை தயார் செய்து , படுக்க வைக்கவும் . இல்லாவிட்டால் , அப்படியே பிரண்டு பிரண்டு , கீழே விழுந்து விட வாய்ப்பு உண்டு .இரவில் உங்களுக்குப் பக்கத்தில் படுக்க வைக்கலாம் .

16. எந்தக் காரணம் கொண்டும் , நீங்களே குழந்தைக்கு , தூங்கும்போது வாயில் கையைப் போட்டு சூப்பச் சொல்லவேண்டாம். அப்படி அதுவே சூப்பத் தொடங்கினால் , மெதுவாக , அதை மாற்ற , உங்கள் உடையின் நுனி அல்லது , ஏதாவது விளையாட்டு சாமான் போன்றவற்றைக் கொடுத்து , அந்த எண்ணத்தை மாற்றிவிடவும் .

17. அந்தந்த climate க்கு ஏற்ப , உகந்த ஆடைகளை அணிவித்து , தூங்க வைக்கவும் .அவ்வப்போது , போர்வையை போர்த்தி விடவும் . நகர்ந்து விட வாய்ப்புண்டு .
Really you are genius! What a great tips! Very much helpful to the young mothers! Thank you very much Jayanthy!
 
PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#7
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &#29

Good tips ka .........Thank you
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &amp

Thanks jayanthi. Really Useful tips pa.

கிர்த்திகா, இப்போ மேலும் ஒரு 3 டிப்ஸ் சேர்த்து இருக்கேன் , அதுவும் உபயோகப் படுமான்னு பாருங்க .
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில &amp

Really you are genius! What a great tips! Very much helpful to the young mothers! Thank you very much Jayanthy!
Thanks a lot for your compliments sister......I have given the tips, which all the mothers have followed.....

Good tips ka .........Thank you
Welcome Priya
 
faranaskani

Citizen's of Penmai
Joined
Feb 22, 2012
Messages
551
Likes
504
Location
australia
#10
Re: Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில 

very very useful tips akka
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.