To have a perfect Human Relationship -மனித உறவுகள் சீராக இருக்க ‪A to Z....!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S
#1


Appreciation - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்


Behavior - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்


Compromise - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்


Depression - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்


Ego - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்


Forgive - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்


Genuineness - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்


Honesty - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
கௌரவமாகக் கருதுங்கள்



Inferiority complex – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்


Jealousy - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.


Kindness - இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்


Loose talk - சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்


Misunderstanding - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்


Neutral - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்


Over expectation -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்


Patience - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்


Quietness -அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்


Roughness - பண்பில்லாத வார்தைகளையும் தேவை இல்லாத
மிடுக்கையும் காட்டாதீர்கள்



Stubbornness - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்


Twisting - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை
இங்கேயும் சொல்வதை விடுங்கள்



Underestimate - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்


Voluntary -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று
காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்



Wound - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்


Xerox - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்


Yield - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன்
கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை



Zero - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும் .


 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.