Today's Business NEWS

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திவால் நோட்டீஸ்

ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல்களை முறைகேடாக பயன்படுத்திய இங்கிலாந்தை சேர் ந்த அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள திவால் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து திவால் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. முறையற்ற வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதால் எங்களது வாடிக்கையாளர்கள் வெளியேறினர் என்று கூறியிருந்தது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1,00,001 டாலரிலிருந்து 5,00,000 டாலராகும். ஆனால் நிறுவனத்தின் கடன் 10 லட்சம் டாலர் முதல் 1 கோடி டாலர் வரை உள்ளது என்று தெரிவித்துள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கவில்லை: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கம்

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னே ஓய்வு பெறுவதை அடுத்து அந்த பொறுப்பில் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில் ரகுராம் ராஜன் இதனை மறுத்திருக்கிறார். லண்டனில் நடந்த பல்கலைக் கழக நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தற்போது சிகாகோ பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறேன். நான் பேராசிரியர் மட்டுமே. தொழில்முறை வங்கியாளர் கிடையாது. நான் இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த பதவிக்கும் விண்ணப்பிக்க போவது இல்லை என்றார்.

இந்த ஆண்டு இறுதியில் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த கவர்னர் குறித்த அறிவிப்பை இங்கிலாந்து நிதி அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிநாட்டவர் கவர்னராக வர வாய்ப்பு இருப்ப தாக இங்கிலாந்து நிதி அமைச்சர் பிலிப் ஹாமண்ட் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள முக்கிய வங்கியாளர்கள் குறித்து செய்திகள் வெளியானது. இதில் ரகுராம் ராஜனுக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை இருந்தார். தற்போது அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

தமிழ் ஹிந்து

This is 50th Posts (Today)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
அப்ஸ்டாக்ஸ் செயலியை தமிழில் வெளியிட திட்டம்

டிஸ்கவுண்ட் புரோக்கரேஜ் பிரிவில் செயல்பட்டு வரும் அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் தன்னுடைய செயலியை தமிழில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் ரவிகுமார் மற்றும் ஸ்ரீனி விஸ்வநாத் ஆகியோர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

எங்களது மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 90,000 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் செயலி சேவை உள்ளது. விரைவில் தமிழில் கொண்டு வர உள்ளோம். எங்களுடைய மொத்த வர்த்தகத்தில் 70 சதவீதம் வரை மொபைல் மூலமாக நடக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் சராசரி வயது 41-ல் இருந்து 32 ஆக குறைந்திருக்கிறது. பங்குகள் மட்டுமல்லாமல் மியூச்சுவல் பண்ட்களிலும் முதலீடு செய்ய முடியும் என்று கூறினார்கள்.

இந்த நிறுவனத்தில் ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் முதலீடு செய்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
இ-சிம் சேவை வழங்க அரசு அனுமதி: தொலைத் தொடர்பு துறை புதிய வழிகாட்டுதல் வெளியீடு

தொலைத்தொடர்பு பயனாளிகள் தங்களது சேவை நிறுவனங்களை மாற்றுகையில் புதிய சிம் கார்டு வாங்கத் தேவையில்லை. இ-சிம் கார்டு முறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய சிம் கார்டு வாங்குவதற்கும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய தொலைத் தொடர்புத்துறை இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு ள்ளது.

வாடிக்கையாளர்கள் புதிய செல்போன் இணைப்பு வாங்கும்போது அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு செல்போன் எண்ணை மாற்றும்போது புதிய சிம் கார்டு க்கு பதிலாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவர்களது செல்போனில் இ-சிம்மை நிறுவ வேண்டும்.

மாறிவரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் இவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். உட்பொதியப்பட்ட சந்தாதாரர் அடையாள எண் (e-SIM) அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒரே சேவை நிறுவனம் அல்லது பல்வேறு சேவை நிறுவன சேவைகளை பெறுவது, செல்போன் மூலமாகவே சேவைகளை மேம்படுத்துவதை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். சர்வதேச தரம் மற்றும் சர்வதேச அளவில் அளிக்கப்படும் சேவைகளுக்கு முன்கூட்டியே இதன் மூலம் தயாராக முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் -3 விற்பனையையை தொடங்கியுள்ள ஐந்து நாட்களில் தொலைத் தொடர்புத்துறை இந்த வழிகாட்டுதலை அளித்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் பயனாளிகள் தங்களது செல்போன் சிம் இணைப்பின் மூலமாக இ-சிம் இணைப்பு பெறலாம். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் செல்போன்கள் மூலமும் இந்த சேவையினை அளிக்கிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வான் வழியாக அளிக்கும் சேவைகளில் மொபைல் எண் போர்டபிலிட்டி சேவையை அளிக்க தொலைத் தொடர்பு துறை புதிய நடைமுறை மூலம் அனுமதி அளித்துள்ளது. தவிர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் செல்போன்களை லாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சேவை நிறுவனங்களுக்கு அளித்துள்ள வழிகாட்டுதலில், இ-சிம் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது பொறுப்பினை உணர வேண்டும். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தேவைகளுக்கு ஏற்ப செல்போன்கள் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இ-சிம் குறித்த வழிகாட்டுதல்களில், இ-சிம் மூலம் இயந்திரத்திலிருந்து இயந்திரத்தை (M2M) தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம். குறிப்பாக காரிலிருந்து செல்போனுக்கு தகவல் அளிக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் கார் கண்காணிப்பு மேம்படும்.

தொலைத் தொடர்பு துறை முன்னரே அறிவித்தபடி எம்2எம் சிம்கள் 13 எண்களைக் கொண்டதாக இருக்கும். இப்போதுவரை இந்த சிம்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. மேலும் ஒருவர் 18 இணைப்புகளை வைத்திருக்கவும் அனுமதிக்கிறது. இதில் 9 சிம்கள் வழக்கமான செல்போன்களில் கார்டு முறையில் பயன்படுத்தலாம். இதர 9 சிம்கள் எம் 2 எம் தொடர்புகளுக்காக வாங்கலாம்.

மேலும், முன்கூட்டியே நிறுவப்பட்ட எம் 2எம் சாதனங்களை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சரிபார்ப்புக்கு ஒத்துழைக்க வேண்டும். எனினும் இந்த சாதனங்களின் முழு பொறுப்பு பயனாளிகளையே சேரும். இந்த சாதனங்களை கைமாற்றும்பொழுது சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
80 டாலரை எட்டியது கச்சா எண்ணெய்: ஜனவரியில் இருந்து 20 சதவீத உயர்வு

கச்சா எண்ணெய் விலை 80 டாலரை தொட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு நவம்பருக்கு பின்னர் முதல் முறையாக 80 டாலர் என்னும் அளவை எட்டி இருக்கிறது. ஏற்கெனவே உற்பத்தி குறைவாக இருக்கும் சூழலில் ஈரானின் ஏற்றுமதியும் குறையும் என்னும் கணிப்பு காரணமாக கச்சா எண்ணெய் அதிகரித்து வருகிறது. ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த பதற்றமான சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் 90 டாலரை எட்டும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச், 100 டாலர்கள் வரை செல்லும் என கணித்திருக்கிறது.

பங்குச்சந்தைகள் சரிவு

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்திய பங்குசந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து முடிவடைகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்து 35149 புள்ளியிலும், நிப்டி 58 புள்ளிகள் சரிந்து 10683 புள்ளியிலும் முடிவடைந்தது.

லிட்டருக்கு ரூ.4 விலை ஏற்றம்?

கர்நாடகா தேர்தலின் காரணமாக 19 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்களால் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த இடைவெளியில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் விலை உயர்த்தப்பட்டாலும் கடந்த நான்கு நாட்களில் 69 பைசா மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஆனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4 வரையும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.4.55 வரை உயர்த்தினால் மட்டுமே எண்ணெய் நிறுவனங்களின் லாப வரம்பு குறையாமல் இருக்கும் என கோடக் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் : ‘ஹாலிடே ஹங்காமா’ 299ரூபாய்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விடுமுறை நாட்களை முன்னிட்டு அடுத்த அதிரடி ஆஃபரை இன்று அறிவித்துள்ளது. ‘ஹாலிடே ஹங்காமா’ என்ற பெயரில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்காக ரூ.399 ரீசார்ஜை ரூ.299-க்கு ஜியோ நிறுவனம் வழங்குகிறது.

அதாவது வழக்கமாக ரூ.399க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த ஹாலிடே ஹங்காமா திட்டத்தின் மூலம் ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தாலே போதுமானது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டியும், நாள்தோறும் 4ஜி வேகத்தில் 1.5 ஜிபி இலவச டேட்டாவும், இலவச அழைப்பு செய்யும் வசதியும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.


ஆனால், ஹாலிடே ஹங்காமா திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்கள் ரிலையன்ஸின் மை ஜியோ ஆப்ஸ் மூலம், போன்பே(PhonePe)செயலி மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும்.

வழக்கமாக ரூ.399-க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.100 கேஷ்பேக்காக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரில் இரு முறைகளை ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதில் நாம் செய்யும் ரீசார்ஜில் இருந்து கழித்துக்கொள்ளும் வசதியாகவும், அல்லது ரீசார்ஜ் செய்துவிட்டு கேஷ்பேக் பெற்றுக்கொள்ளும் முறையைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது ரீசாராஜ் செய்யும் போதே, ஹங்காமா திட்டத்தின் கீழ் ரூ.399-க்கு ரூ.299 செலுத்தினால் போதுமானது. அல்லது, ரூ.399 செலுத்திவிட்டால், அடுத்த சில நிமிடங்களில் ரூ.100 உங்களின் ரிலையன்ஸ் ஜியோ வவுச்சருக்கு ரீசார்ஜ் செய்யப்படும்.

வழக்கமாக 84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.399 செலுத்துவதற்குப் பதிலாக ஹங்காமா திட்டத்தில் ரூ.299 செலுத்தினாலே போதுமானது இந்தச் சலுகை இன்று(ஜுன் 1-ம்தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை மட்டுமே என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதில் ரூ.199-க்கு மாதம்தோறும் வாடகைக் கட்டணமாகச்செலுத்தினால், அனைத்து அழைப்புகளும் இலவசமாகவும், வெளிநாடு அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 50 காசுகளும், மாதத்துக்கு 25 ஜிபி அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கும். மேலும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் இலவசமாக அனுப்பிக்கொள்ள முடியும். ஒருவேளை 25 ஜிபி டேட்டாவை ஒருமாதத்துக்கு முன்பாக தீர்த்துவிட்டால், அடுத்து ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ.20 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு

கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு மனஅழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்ததாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு விலை 48 ரூபாயும், மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.34 காசுகளும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இதன்படி டெல்லியில் மானியமில்லாத 14.2கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.698.50க்கும், மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.493.55க்கும் வழங்கப்படும்.

மற்ற நகரங்களில் மானியத்துடன் பெறும் சிலிண்டர் விலை மும்பையில் ரூ.491.31-க்கும், கொல்கத்தாவில் ரூ.496.65-க்கும், சென்னையில் ரூ.481.84-க்கும் விற்பனை செய்யப்படும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. இதற்கு மேல் தேவை உள்ளவர்கள் சந்தையில் உள்ள விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை கொல்கத்தாவில் ரூ.723.50-க்கும், மும்பையில் ரூ.671.50-க்கும், சென்னையில் ரூ.712.50-க்கும் விற்பனையாகும். இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த 16 நாட்களாக தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. அதன்பின் கடந்த இரு நாட்களாக மிகக்குறைந்த அளவு ஒரு காசு முதல் 6 வரை பெட்ரோல், டீசல் மீது விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்று 100ரூபாயை நெருங்குவதால், நடுத்தர மக்களும், சாமானிய மக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருப்பது அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
ஏற்றுமதியாளர்களுக்கான ஜிஎஸ்டியை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோகன்தாஸ் பாய் வலியுறுத்தல்

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.20,000 கோடியை வழங்குவதற்கு அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎப்ஓ மோகன்தாஸ் பாய் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: அற்ப காரணங்களுக்காக ஏற்று மதியாளர்களுக்கு இந்த தொகை நிலுவையில் உள்ளது. இந்த மோசமான சேவை காரணமாக சந்தையில் ஒரு எதிர்மறை சூழல் நிலவுகிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வளர்ச்சியும் குறைந்திருக்கிறது.

தற்போதைய சூழலில் வங்கிகள் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் பெரும்பா லான நிறுவனங்கள் போதுமான நிதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அரசாங்கம் வரியை திருப்பி கொடுக்காததால் ஏற்றுமதி நிறுவனங்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது.

வரி ஆணையத்திடம் இருக்கும் அக்கறையின்மை காரணமாக நிறுவனங்கள் சிரமப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என மோகன்தாஸ் பாய் கூறியிருக்கிறார். ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.14,000 கோடி மட்டுமே என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும் இந்த தொகையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அமைச்சகம் விளக்கம் அளித் திருக்கிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
சென்னையில் ஃபிரூடென்பெர்க் ஆலை

சென்னைக்கு அருகிலுள்ள வல்லம்-வடகல் தொழிற்பூங்காவில் ரூ.210 கோடி முதலீட்டில் ஆட்டோமொபைல் பொருட்கள் தயாரிப்பு ஆலையொன்றை அமைக்க இருப்பதாக ஃபிரூடென்பெர்க் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த ஆலை முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஜார்க் கிராஃப் கூறினார்.

ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனை அதன் முந்தைய ஆண்டைவிட 18.3 சதவீதம் அதிகரித்து ரூ.68,959 கோடியாக உள்ளது. 2017-ம் ஆண்டு இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகரித்து ரூ.2,768 கோடியாக உள்ளது. ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ரூ.3,157 கோடியை இந்த நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஆட்டோமொபைல், மருத்துவம் போன்ற பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப உபகரணங்களையும், சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.