Today's Cine Info

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
சென்னை எம்ஐடியில் நடிகர் அஜித்துக்கு புதிய பதவி


தமிழ் சினிமாவின் ‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் இப்போது என்ன செய்கிறார் என்பதை தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பிஸியாக உதவி செய்து கொண்டிருக்கிறார்.
எதற்காக தெரியுமா? ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காகத் தான். இந்த போட்டியின் இறுதிச்சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் எம்ஐடி யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் உதவிபுரிவதற்காக ‘ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸர்’ எனும் புதிய பதவியை நடிகர் அஜித் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பள்ளி மாணவராக இருக்கும்போதே ஏரோ மாடலிங்கில் விருப்பம் கொண்ட அஜித், ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது நமக்கு தெரியும். அதனால், அவர் இந்த புதிய சவாலை ஏற்றுக்கொண்டதில் அவ்வளவு ஆச்சரியம் இருக்காது.
எம்ஐடியின் தாக்‌ஷா (Dhaksha) எனப்படும் டீம் உடன் தான் கடந்த வியாழன் முதல் அஜித் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார். ஒருமுறை எம்ஐடிக்கு வந்து இந்த போட்டிக்காக உதவுவதற்கு அஜித் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1,000 ரூபாய். கோடிகளில் புரளும் அஜித், இதனால் வரும் வருமானத்தை எம்ஐடியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளார்.
எம்ஐடியின் ஏரோஸ்பேஸ் ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குநரான துணை பேராசிரியர் கே.செந்தில்குமார் இதுகுறித்து கூறுகையில், “தனியார் நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், அரசாங்கம் தான் இந்த போட்டிக்கு நிதி அளிக்கிறது. இந்த போட்டிக்கு சென்ற 100 நாடுகளில் 55 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகிறோம். இந்த துறையில் அஜித்தின் திறமை மற்றும் அனுபவத்தால் எங்களின் எண்ணம் வலுப்பெறும்” என்கிறார்.
மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள், தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியை பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவால்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
பெண்கள் அடுப்பங்கரைக்குத்தான் போகணுமா?’ - விவேக்கின் ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு

விவேக் போட்ட ட்வீட்டால், ‘பெண்கள் அடுப்பங்கரைக்குத்தான் போகணுமா?’ என நெட்டிசன்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
நடிகர் விவேக், “அன்பான மாணவர்கள் மற்றும் குழந்தைகளே! உங்கள் விடுமுறையை சந்தோஷமாகக் கழியுங்கள். விளையாடிய பிறகு நிறைய தண்ணீர் பருகுங்கள். பெண் குழந்தைகள் கிச்சனுக்குச் சென்று அம்மாவுக்கு உதவியாக இருப்பதோடு, சமையலை கற்றுக் கொள்ளுங்கள். ஆண் குழந்தைகள் அப்பாவோடு அலுவலகம் சென்று, குடும்பத்துக்காக எப்படி உழைக்கிறார் என்று பாருங்கள். உறவு வலுப்படும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்துக்கு, நெட்டிசன்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘இன்னும் பெண்கள் அடுப்பங்கரைக்கும், ஆண்கள் வேலைக்கும்தான் செல்ல வேண்டுமா? நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’, ‘சினிமாவில் மட்டும் பகுத்தறிவு, பெண்ணுரிமை பேசினால் போதாது, வாழ்ந்து காட்டணும். பழைய பஞ்சாங்கமா இருக்காதீங்க...’, ‘பாலின பாகுபாடு குற்றம்’ என்றெல்லாம் அவர் பதிவுக்குப் பதில் அளித்துள்ளனர். அதேசமயம், அவருடைய கருத்துக்கு நிறைய பேரிடம் ஆதரவும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், “நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். மதிப்புமிகு பெற்றோர்கள் புரிந்துகொள்வர். அவசரப்பட்டு எதிர்மறை மற்றும் கொச்சை விமர்சனம் வைப்போரையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவம், அவர்கள் புரிதல் அவ்வளவே.
இதன் பொருட்டு அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம். அவரவர் கருத்து அவரவர்க்கு. ஏனெனில், நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதமானவர்; அன்புமயமானவர். நான் நேசிக்கும் மாணவச் செல்வங்களுக்கு என் மாலை வணக்கங்கள். ஏலே டோண்ட் ஒர்ரி; பீ ஹேப்பி” என தன் ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் விவேக்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்பட ஷூட்டிங் தொடக்கம்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சிவா ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாகும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அத்துடன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘சீம ராஜா’ முடிந்தபிறகு ரவிக்குமார், எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பார் சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டது.
ஆனால், அதில் எம்.ராஜேஷ் முந்திவிட்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையோடு இன்று தொடங்கியிருக்கிறது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் என்கிறார்கள். ஆனால், அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
ரஜினியின் 40 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ. 65 கோடி சம்பளம்

அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் ரஜினி முதல் கட்டமாக அரசியல் பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில் மே 9 ம் தேதி இசை, ஜீன் 7 ம் தேதி ரிலீஸ் என்று தொடங்கியுள்ள ‘காலா’ படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் கடந்த முறை ‘கபாலி’ படத்துக்கு செய்ததைப் போல விமான விளம்பரம் உள்ளிட்ட விஷயங்களில் முன்னணி செல்போன் சிம்கார்டு நிறுவனம் இணைகின்றன. அந்தப் பணிகளையும் மேற்பார்வையிட்டு உடனடியகா அடுத்து கார்த்திக் சுப்பராஜ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகளில் இறங்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்புதிய படத்துக்கு மொத்தம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினிகாந்த், படத்துக்கு சம்பளமாக ரூ.65 கோடி பேசியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
சாவித்ரியின் 120 வித ஆடைகள்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்துக்காக நூற்றுக்கும் மேலான ஆடைகளை பயன்படுத்துகிறார், கீர்த்தி சுரேஷ். ‘‘காதணி, நெக்லஸ், வளையல் இப்படி சின்ன சின்ன அணிகலன்கள் விஷயத்தில் கூட பெரிய மெனெக்கடல்களை கொண்டு வந்திருக்கிறோம். படத்தின் 80 சதவீத காட்சிகள் நடிகை சாவித்ரி மேடம் திரைக்கு வெளியே அவரது வாழ்க்கை சார்ந்த விஷயங்கள்தான் படமாக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்படும். குறிப்பாக ஆடைகள் விஷயத்தில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 120-க்கும் மேலான காஸ்டியூம்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன். என்னுடைய கேரியரில் திரும்ப அமையாத ஒரு கதாபாத்திரமாகத்தான் இதைப் பார்க்கிறேன்!’’ என்கிறார், கீர்த்தி சுரேஷ்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ ட்ரெய்லர் தள்ளிவைப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியானதை முன்னிட்டு, இன்று வெளியிடப்படுவதாக இருந்த விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இது எடுக்கப்படுகிறது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.


ப்ரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த 17-ம் தேதி இதன் மோஷன் போஸ்டர் வெளியானது. திருநெல்வேலி டு டெல்லி என என மோஷன் போஸ்டரே எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று (மே 26) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். இதனால், தமிழகம் முழுவதும் சோகம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் சோகத்தில் பங்கெடுக்கும் வகையில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

“இது கொண்டாட்டத்திற்கான நேரமல்ல. விக்ரம் மற்றும் ‘சாமி’ படத்தின் ரசிகர்களின் அனுமதியோடு ட்ரெய்லர் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம். ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம். இதுபோன்ற சூழ்நிலைகள் இனிமேல் ஏற்படாமல் இருக்க இன்னும் அதிகமாகப் பிரார்த்தனை செய்வோம்” என தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
முதல் பார்வை: செம

z-6W3B6771-1JPG.jpg

மாமனாருக்குத் தெரியாமல் அவர் மகளை மணம் முடித்து இறுதியில் அவரை சமாதானம் செய்தால் அதுவே 'செம'.

காய்கறி, மீன், கருவாடு என கிடைத்த பொருட்களையெல்லாம் விற்கும் வேலை செய்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ். ஒரு நள்ளிரவில் குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டில் 3 மாதத்துக்குள் ஒரு நல்லது நடக்கவில்லை என்றால் ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் நல்லது நடக்கும் என்று சொல்லிவிட்டுப் போகிறார். இதனால் பதறிப்போகும் அம்மா சுஜாதா மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பதில் தீவிரம் காட்டுகிறார். பார்க்கிற பெண்கள் எல்லாம் வேண்டாம் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக மறுக்க, அர்த்தனா பினு வீட்டில் மட்டும் சம்மதம் சொல்ல, ஜீ.வி.பிரகாஷ் தேவதையே தனக்கு மனைவியாகக் கிடைத்துவிட்டதாகக் கொண்டாடுகிறார். சுற்றமும் நட்பும் சூழ பூ வைக்கப் புறப்பட்ட பிறகு அங்கு தடை ஏற்படுகிறது. அர்த்தனா பினுவின் தந்தை நிச்சயதார்த்தை திடீரென்று நிறுத்த, ஜீ.வி.யின் அம்மா தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இந்த சூழலில் அந்த நிச்சயதார்த்தம் என்ன ஆனது, அம்மா சுஜாதாவைக் காப்பாற்ற முடிந்ததா, ஜீ.வி.யாரை திருமணம் செய்துகொள்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது 'செம'.

குடும்பப் பாங்கான கதையைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முகம் சுளிக்கும் காட்சிகள் வைக்காமல் கண்ணியம் காத்திருக்கும் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்தை வாழ்த்தி வரவேற்கலாம்.

அச்சுபிச்சு காமெடிப் படம், அடல்ட் காமெடிப் படம் என்று இல்லாமல் ஓட்டப்பாதையில் உறுத்தல் இல்லாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவரின் அந்த அக்கறையைப் பாராட்டலாம். ஆனால், நடிப்பில் ஜீ.வி. எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. வருத்தப்படுவதை வார்த்தைகளில் கூட சரியாக வெளிப்படுத்தவில்லை. அம்மா மீதான அன்பையோ, காதலின் ஆழத்தையோ, பிரச்சினைகளுக்கிடையே இருக்கும் சூழலின் தீவிரத்தையோ உணர்ந்து நடிக்காமல் ஜாலிப் பையனாகவே வந்து போகிறார்.

அர்த்தனா பினு நாயகிக்கான பங்களிப்பை மிகச் சரியாகச் செய்கிறார். தந்தை மீதான பாசத்தையும், கணவர் மீதான காதலையும் இயல்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். சில இடங்களில் தன் வருகையால் ரசிக்க வைக்கிறார்.

படத்தின் முதல் பாதியை ஒற்றை ஆளுமையாக இருந்து காப்பாற்றுகிறார் 'யோகி' பாபு. சந்தர்ப்ப சூழல் பார்க்காமல் அவர் பேசும் வசனங்களில் மட்டும் சில சமயங்களில் சிரிக்க முடிகிறது.

ஜீ.வி.பிரகாஷின் அம்மாவாக சுஜாதா பொருத்தமான பாத்திர வார்ப்பு. கோவை சரளாவையும், மன்சூர் அலிகானையும் வீணடித்திருக்கிறார்களே என்று யோசிக்கும்போது ஒரே ஒரு காட்சியில் ஸ்கோர் செய்து கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. ஜீ.வி.பிரகாஷ் இசையில் சண்டாளி, நெஞ்சே நெஞ்சே பாடல்கள் ஓ.கே.ரகம். பின்னணி இசை படத்துக்குப் பொருத்தம். பிரதீப் ராகவ் பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். இழுவை அதிகம்.

'கல்யாணத்துக்கு அப்புறம்தான் பிரச்சினை வரும், உன் பையனுக்கு பிரச்சினைக்குள்ளதான் கல்யாணம் நடக்கும்', 'பாட்டுப் புத்தகமா வர்றதை விட பாடப் புத்தகத்துல நம்ம சுயசரிதை வரணும்', 'முகூர்த்த நாள்ல கல்யாணம் பண்றது பெரிய விஷயம் இல்லை, முகூர்த்தம் இல்லாத நாள்ல கல்யாணம் பண்றதுதான் புதுசு' என வசனம் எழுதியிருக்கிறார் பாண்டிராஜ். அது எந்தவிதத்திலும் படத்தில் எடுபடவில்லை.

பெண் கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞனின் அவஸ்தையை, தவிப்பை இயக்குநர் சொல்லத் தவறி இருக்கிறார். பக்கத்து வீட்டுப் பெண்கள் பேசும் உரையாடல்கள் எரிச்சலை வரவழைக்கின்றன. படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் சில காட்சிகள் துருத்தி நிற்கின்றன. கதாபாத்திரங்களை இயக்குநர் கையாண்ட விதம் முதிர்ச்சியற்றதாக உள்ளது. பக்குவம் இல்லாத விவரணைகள் சோர்வையும் அலுப்பையும் தருகின்றன. படம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியாமல் தடுமாறும்போது ஒரு அதிர்ச்சியை!? வைக்கிறார்கள். இரண்டாம் பாதியிலும் அந்த வைத்தியத்தைப் பரிசோதித்திருக்கிறார்கள். அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா

z-ajith viswasamjpg.jpg

‘விசுவாசம்’ படத்தில் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா எனத் தகவல் கிடைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.

‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித், இந்தப் படத்தில் இளமைத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இதில், அஜித்துக்குத் தாய்மாமனாக நடிக்கிறாராம் தம்பி ராமையா. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து ஏற்கெனவே வெளியான ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் தம்பி ராமையா. அதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் படம் முழுக்க வரும் அளவுக்கு மிகப்பெரிய வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
ரஜினியின் மகன்களாக நடிக்கும் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி

z-sananth reddy bobby simha rajinikanthjpg.jpg

பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் ‘காலா’ மற்றும் ‘2.0’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படம், அடுத்த மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். ஜூன் 4-ம் தேதி முதல் டேராடூனில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதற்காக ஜூன் ஒண்ணாம் தேதியே படக்குழுவினர் இங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட குழு இங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்; திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களில் நடித்தவர். ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு கிடைத்தது. சனந்த் ரெட்டி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மெர்க்குரி’ படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
இமயமலையில் ரஜினி படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்துக்கான லொக்கேஷன் இறுதி செய்யும் வேலைகளில் படக்குழு தீவிரம் செலுத்தி வருகிறது. ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் முக்கிய காட்சிகள் இமயமலை அடிவாரத்தில் உள்ள டேராடூன், பாட்னா, டார்ஜிலிங் பகுதிகளில் நடக்கவுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாள ராக திருநாவுக்கரசு ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘மெர்க்குரி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படப்பிடிப்புக்காக சில வாரங்கள் இமயமலைப் பகுதியில் தங்கவுள்ள ரஜினிகாந்த், ஓய்வு நேரத்தில் இம்முறையும் தனி ஹெலிகாப்டர் மூலம் இமயமலையில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.