Today's Flash 'NEWS'

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
Final (D/N), ICC Under-19 World Cup at Mount Maunganui, Feb 3 2018

Australia Under-19s (Young Cricketers) 216

India Under-19s 220/2 (38.5/50 ov, target 217)

India U19 won by 8 wickets (with 67 balls remaining)

India's players rush out to the field. Fist pumps, roars and screams galore. Australia's players have sunk to their knees in their respective positions. What a tournament this has been for India! They are scrapping with each other to get hold of a stump. Only six of them available though for the 15-plus strong squad.A record fourth World Cup title for India.

Congrats India..

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு

மெக்சிகோ நாட்டில் வெள்ளிக்கிழமை மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டரில் 7.2 ஆக பதிவானது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், "மெக்சிகோ நிலநடுக்கம் முதலில் 7.5 ரிக்டர் எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அது 7.2 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கம் ஆக்ஸாகா மாநிலத்திலிருந்து வடகிழக்கே பினோடேபா என்ற இடத்தில் மையம் கொண்டிருந்தது.

5 மாதங்களுக்கு முன்னதாக மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 370 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் விடிய விடிய சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

:typing:

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
விபத்தில் சிக்கிய ஈரான் விமானம்; 66 பேர் பலி

டெஹ்ரான்: 60 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஈரான் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் 66 பயணிகள் உயிரிழந்திருப்பதாக விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

டெஹ்ரானில் இருந்து யஸ்சூஜ் என்ற பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
:typing:
தினமலர் அலெர்ட் நியூஸ்
18-02-2018 (1.30pm)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
அஜர்பைஜானில் தீ விபத்து; 30 பேர் பலி

பாகு: அஜர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகு பகுதியில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு பல்வேறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அஜர்பைஜான் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

:typing:

தினமலர்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
கியூபா தலைநகர் ஹவானாவில் நடந்த விமான விபத்தில் 107 பேர் பலி?: உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு

கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 107 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அந்த நாட்டின் ஹோல்ஜியூன் நகருக்கு பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி, பணிப்பெண்கள், பயணிகள் உட்பட 107 பேர் இருந்தனர்.

ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பிய சிறிது நேரத்தில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 107 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கணக்கான வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. பழைய விமானம் என்பதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் தீ பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
டெக்சாஸில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய அப்பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவனை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், ‘‘டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாண்டா ஃபே ஹை ஸ்கூல் பள்ளி. இப்பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவர் ஒருவர் வகுப்பு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி அலாரம் ஒலி எழும்பி பள்ளியின் பிற மாணவர்களை எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து பல மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 வயதான மாணவர் டிமிட்ரியஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’கொலை செய்ய பிறந்தவன்’ என்ற வாசகம் அடங்கிய டீ ஷர்ட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

முன்னதாக புளோரிடா மாகாணத்தில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனைக்கு கட்டுபாடுகள் விதிக்க கூறி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
கலவர பூமியானது தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்; தடியடி - கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

z-WhatsApp Image 2018-05-22 at 122406jpeg.jpg

போராட்டக்காரர்களை தடியடி நடத்திக் கலைக்கும் போலீஸார்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடத்தூரிலிருந்து பேரணியாக புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, மற்றொரு போராட்டக் குழுவினர் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். இதனால், அப்பகுதியே வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.

போலீஸ் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு காரணமாக பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் பலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். இதனால், அப்பகுதியே வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.

போலீஸ் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு காரணமாக பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

z-2051aac2-f2ae-4328-afc9-77cade5f0f96jpg.jpg

துப்பாக்கிச் சூட்டில் பலியான வெனிஸ்டா (17)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர்.

மேலும், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் பலியானதாக தகவள் வெளியானது. தற்போது பலியானவர்கள் எண்ணிககி 9 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

வெனிஸ்டா, அந்தோனி, கிளாஸ்டன், வினிதா, ஜெயராம், மணிராஜ், சண்முகம், தமிழரசன், கந்தய்யா இறந்தவர்கள் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் ஆவர். இதில், வெனிஸ்டா 17 வயது மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் தெருத்தெருவாக காவல்துறையினர் சுற்றி வருவதால் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, சோரிஸ்புரம், மடத்தூர் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நோக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கு பெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது.

கடந்த 23.3.2013 அன்று, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதியளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு தற்போது நிலுவையில் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை. 24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் என்னையும், துணை முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது” என முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.