Today's Foreign NEWS

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
தீவிரமடைகிறது ஈரான் - இஸ்ரேல் மோதல்

சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் இஸ்ரேவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கோலன் ஹைட்ஸில் பகுதியில் புதன்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடின் அளிக்கும் வகையில் சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ஈரான் படைகள் மீதும், அதன் நிலைகள் மீது 20 ராக்கெட்டுகளை செலுத்தி இஸ்ரேல் நடத்தியதாக தகவல் வெளியாகியது. இதனை இஸ்ரேல் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர், பென்சமின் நெதன்யாகு கூறும்போது, ஈரான் அதன் எல்லையை மீறிவிட்டது. நாங்கள் அதற்கு பதிலடி அளித்தோம். எங்களை காயப்படுத்தியவர்களை பல மடங்கு நாங்கள் காயப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது. எனினும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலியானதாவும், அதில் 8 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
கென்யாவில் அணை உடைந்து 27 பேர் பலி

கென்யாவில் ஒருபுறம் தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், தற்போது கனமழை காரணமாக அணை உடைந்ததில் 27 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கென்யாவின் தென் பகுதியில் உள்ள நகுரா நகரத்தில் பெய்த கனமழை காரணமாக அணை ஒன்று உடைந்தது. இதில் அருகிலிருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் 27 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அணை உடைந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி விரைவாக நடந்து வருகிறது.

கென்ய செஞ்சிலுவை சங்கம் தரப்பில், நகுராவை சுற்றியுள்ள கிராமங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும். கிட்டதட்ட 5,000 குடும்பங்கள் இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 2 லட்சத்து 20,000 மக்கள் கனமழை காரணமாக இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கென்யா அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

கென்யாவில் சமீப காலமாகவே தீவிரவாத தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், சமீபத்திய இயற்கை பேரிடராலும் பெரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் மட்டும் கென்யாவில் 159 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறும்: புதின் தகவல்

சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான செய்தியை சிரிய அரசு ஊடகமான சனா வெளியிட்டுள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் திடீர் ரஷ்ய சந்திப்பில் புதின் இதனை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து புதின் கூறும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கிடைந்த வெற்றிகளையும், பயங்கரவாதத்துக்கு எதிரான சிரிய ராணுவத்தின் வெற்றிகளையும் நாங்கள் தொடர்புப்படுத்தியே பார்கிறோம். விரைவில் வெளிநாட்டுப் படைகள் சிரியா பிராந்தியதிலிருந்து வெளியேறும்” என்றார்.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வந்தனர்.

கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு போர் தீவிரமானது, இதில் சிரிய ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்து பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இன்னும் எஞ்சிய பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

சிரியா உள் நாட்டு போரில் ரஷ்ய படைகளின் உதவியுடன் பஷார் தலைமையிலான அரசு குறிபிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை: விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடந்தப்பட்ட சோதனையில் பல விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நஜீப் பிரதமராக இருந்தப்போது அவரால் நியமிக்கப்பட்ட பொது நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டாலர்கள் கணக்கில் வரவில்லை என்றும் 700மில்லியன் டாலர்களை நஜீப் எடுத்துக் கொண்டதாகவும் எதிர் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை நஜீப் மறுத்து வந்தார்.

இந்தக் குற்றச்சாட்டின் முடிவுகள் மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தன.

நஜீப் ரசாக் தலைமையிலான ‘பரிசான் நேஷனல்’ கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கை மீதான அதிருப்தி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் அந்த கட்சி, மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் மகாதிர் முகம்மது.

இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு சொந்தமான இடங்களில் பிரதமர் மகாதிர் முகம்மது உத்தரவில் சோதனை நடத்தப்பட்டது. இதில், நஜீம் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து மலேசிய போலீஸார் கூறும்போது, "ஆடம்பர பைகள் அடங்கிய 284 பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. நகைகள் அடங்கிய 72 பைகள் மற்றும் ஏராளமான ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப்பட்டன" என்றார்.

ஊழல் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
இளவரசர் ஹாரி நாளை திருமணம்: இங்கிலாந்தில் உற்சாகம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெக்கன் மார்கல் திருமணம் இங்கிலாந்தில் நாளை நடைபெறுகிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) இங்கிலாந்தில் உள்ள வின்சர் மாளிகையில் ஹாரி மற்றும் மெக்கனின் திருமணம் நடைபெறுகிறது.

அரசு குடும்பம் திருமணம் என்பதால், இங்கிலாந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருமணத்தை பார்பதற்காக வருகை தந்துள்ளனர். இங்கிலாந்து முழுவதும் கடைகளில் ஹாரி மற்றும் மெக்கன் மார்கலின் உருவம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், உடைகள், பொம்மைகள் என் பலவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்வதன் மூலம் இங்கிலாந்து இளவரசியாகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மெக்கன் பெற இருக்கிறார்.

தமிழ் ஹிந்து
18-05-2018
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
கடாபி நிலைதான் கிம்முக்கு ஏற்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து கிம்முக்கு ட்ரம்ப் நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.

அதில் அணுஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. இதற்கு கிம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் லிபியா அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் கிம்முக்கு ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் ட்ரம்ப் கூறும்போது, "கடாபியின் அழிவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அவரை அழிக்க அங்குச் சென்றோம். ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நிலை மீண்டும் ஏற்படும். ஆனால் ஒப்பந்தத்துக்கு சம்மதித்துவிட்டால் கிம் ஜோங் உன் சந்தோஷமாக இருப்பார்” என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.

தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பெரிது உதவின. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
ஈரான் அணுஆயுத ஒப்பந்தம்; சீனா ஜெர்மனி துணை இருக்கும்: ஏஞ்சலோ மெர்கல்

ஈரானின் ஆணுஆயுத ஒப்பந்தத்துக்கு ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் துனை இருக்கும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறியுள்ளார்.

சீனாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனா சென்றடைந்த மெர்க்கல் கிரேல் ஹாலில் சீனா பிரதமர் லீ கெக்கியாங் உடனான சந்திப்பில் இதனை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மெர்க்கலின் இந்தச் சீன சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார, வணிகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஜூன் 12 ஆம் தேதி கிம் - ட்ரம்ப் இடையே நடைபெறும் சந்திப்பு குறித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இதனிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
நாங்கள் ராஷித்கானை விட்டுக் கொடுக்கவில்லை: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி

z-lkjpg.jpg

நாங்கள் ராஷித்கானை விட்டுக் கொடுக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழையும் இரண்டாவது அணிக்கான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன் ரைசர்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சன் ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் ராஷித்கான் ( ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்) முக்கிய காரணமாக விளங்கினார். 10 பந்துகளில் ராஷித்கான் எடுத்த 34 ரன்கள்தான் சன் ரைசர்ஸ் அணியின் கவுரவமான இலக்கை எட்ட வழி செய்தது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் 3 விக்கெட்டுகள், இரண்டு கேட்சுகள், ஒரு ரன் என நேற்றைய போட்டியின் நாயகனாக ராஷித் வலம் வந்தார்.

ராஷித்கானின் நேற்றைய ஆட்டத்தைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது கதாநாயகன் ராஷித்கானை நினைத்து ஆப்கன் முழு பெருமை கொள்கிறது. எங்கள் நாட்டு வீரர்கள் அவர்கள் திறமையைக் காட்ட தளம் அளித்துக் கொடுத்த இந்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஷித் ஆப்கானிஸ்தானின் சிறந்தவற்றை நினைவுபடுத்துகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்கு சிறந்த சொத்தாக இருப்பார். நாங்கள் அவரை விட்டுக் கொடுக்கவில்லை" என்று பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
நிலவின் சுற்றுவட்டப் பாதையைத் தொட்டது சீனாவின் கியூகியோ செயற்கைக்கோள்

நிலவின் இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து பூமிக்கு தெரிவிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சீனாவின் செயற்கைக்கோள், சுற்றுவட்டப்பாதையைத் தொட்டுவிட்டது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கியூகியோ, 400 கிலோகிராம் எடைகொண்ட செயற்கைக்கோள் மூன்றாண்டுகள் செயல்படும்விதமாக வடிவமைக்கப்பட்டது. நிலவின் இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து பூமிக்கு தெரிவிப்பதற்காக கடந்த திங்கள் அன்று சீனாவின் விண்வெளி செயற்கைக்கோள் தளத்திலிருந்து ஏவப்பட்டது.

உலகிலேயே முதன்முறையாக நடைபெறும் இம்முயற்சி இது. சீனாவின் லட்சியக் கனவு என்கிறார்கள்.

பூமியிலிருந்து 4,55,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் சுற்றுப்பாதைக்குள்தான் செயற்கைக்கோள் நுழைந்துள்ளது. பீஜீங்கிலுள்ள புவி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வழங்கப்படும் ஒவ்வொரு அறிவுறுத்தலுக்கும் இணங்கி இச்செயற்கைக்கோள் செயல்பட்டு வருகிறது.

நிலவின் மேற்பரப்புக்கு 100 கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டு, தற்போது பூமி-நிலவின் (எல்2) எனப்படும் இரண்டாவது லாக்ராங்கியனைச் சுற்றியுள்ள நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ளதாக சீனா தேசிய விண்வெளி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

நிலவை நோக்கி நிறுத்துவதற்கான ஒரே சாளரம் இதுதான். கியூகியோ குறைந்த அளவே எரிபொருளைக் கொண்டுள்ளது. எனினும் நிலவு ஈர்ப்பு காந்தவிசையினால் எரிபொருள் செலவு பெரிய அளவில் வீணாகப் போவதில்லை. எனினும் செயற்கைக்கோளில் இருப்பு உள்ள குறைந்தபட்ச எரிபொருளோடுதான் அது நிலவின் இருண்ட பக்கத்துக்குச் சென்றாக வேண்டும் என்கிறது சீன செய்தி நிறுவனம் சின்குவா செய்தி நிறுவனம்.

நிலவின் மர்மமான பக்கத்தை ஆராய்ந்து, அச்செய்திகளை பூமியோடு இணைக்கும் விதமாக திட்டமிடப்பட்டு, இத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் திங்கள்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றி 4,55,000 கி.மீ. தூரத்தில் எல்2 புள்ளியைச் சுற்றியுள்ள ஒரு ஒளிவட்டச் சுற்றுப்பாதையை அடைவதற்கு முன்னர் இந்த செயற்கைக்கோள் பல தடவைகள் சுற்றுப்பாதையைச் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சுற்றுப்பாதையில் செயல்படும் உலகின் முதல் தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள் இதுவாகும்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,851
Location
Madras @ சென்னை
சீனாவின் முயற்சிதான் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அழிக்கும் முடிவை முன்னெடுக்க வைத்தது: புதின் பாராட்டு

வரலாற்றில் சீனாவும், ரஷ்யாவும் மிகச சிறந்த கூட்டுறவில் உள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பில் நடைபெற்ற கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது,"ரஷ்யா சீனா இடையே உள்ள உறவை மறுவடிவம் செய்ய தேவையில்லை. சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள கூட்டறவு வரலாற்றில் மிக சிறப்பு வாய்ந்தது.

சீனா எங்கள் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக உள்ளது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சீனாவுடன் 86 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்பை வைத்துள்ளோம். இதில் நாங்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம்.

சமீபத்தில் சீன நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட முடிவுகள், ரஷ்யா சீனா இடையே நிலவும் உறவுகளை நிலைத்தன்மை உடைய தாக்கியுள்ளது. இந்த முடிவுகள் தற்போதைக்கு மட்டுமில்லாமல் எதிர்காலத்துக்கு சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

சீனாவின் முயற்சியிதான் அணுஆயுத அழிப்பது தொடர்பான வடகொரியாவின் முடிவை முன்னெடுக்க உதவி செய்தது என்று பாராட்டு தெரிவித்தார்.

தமிழ் ஹிந்து
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.