Today's Info. - 2

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர்

2018 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 94.26 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 73.10 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 87.65சதவீதத்துடன் 15-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
வடசென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 39 அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு செய்யும் வசதி

வடசென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 39 அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் பெற புதிதாக பதிவு செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள ஆதார் விவரங்களை மாற்றிக் கொள்ளவும் அஞ்சல் துறை புதிய வசதியைத் தொடங்கியுள்ளது.

இதில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது. ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களை மாற்றுவதற்கு ரூ.30 கட்டணமாக செலுத்த வேண்டும்.

வடசென்னை கோட்டத்தில் உள்ள பூங்கா நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர், அண்ணாநகர் மேற்கு மற்றும் கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவக் கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை, பூக்கடை, பிளாக்கர்ஸ் சாலை, புனித ஜார்ஜ் கோட்டை, ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை உயர் நீதிமன்றம், ஐசிஎப் தொழிற்சாலை, பெரியார் நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மண்ணடி, எம்இஎஸ், மிண்ட் பில்டிங், பெரம்பூர் பாரக்ஸ், பெரம்பூர், ரிப்பன் பில்டிங், ராயபுரம், செம்பியம், ஷெனாய் நகர், சவுகார்பேட்டை, தண்டையார்பேட்டை பஜார், தண்டையார்பேட்டை, வெங்கடேசபுரம், வேப்பேரி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை வடக்கு, சர்வதேச பல்கலைக்கழக மையம் ஆகிய இடங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை வடகோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
27சி பேருந்து எண் 72சி ஆக மாற்றம்

மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தி.நகரில் இருந்து கோயம்பேடு வழியாக திருவேற்காடு செல்லும் வழித்தட எண் 27சி-யை பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு பயணிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றுமுதல் இந்த வழித்தட எண் 72சி-ஆக இயக்கப்படும். இந்தத் தடத்தில் சாதாரண, விரைவு, கொகுசு என 32 சர்வீஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி: இன்று முதல் 5 நாட்கள் நடக்கிறது

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பள்ளி மாணவர் களுக்கான இலவச யோகா பயிற்சி இன்று தொடங்குகிறது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பள்ளி மாணவர் களுக்கு இலவச கோடைக்கால யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை தினமும் பகல் 11 மணி முதல் 12 மணி வரை பயிற்சி நடக்கிறது. ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

படிப்பில் ஆர்வம் ஏற்பட, தன்னம்பிக்கை வளர, சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி மேம்பட, தேவையற்ற பயங்கள் நீங்க (தேர்வு பயம் உட்பட), மன அழுத்தம் நீங்க, உடல் ஆரோக்கியம் மேம்பட, பார்வை கோளாறு நீங்க இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-26222516 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் ஹிந்து
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,249
Likes
83,831
Location
Bangalore
1527321137044.png


ஒருவரின் அனுபவம் :


பஸ்ஸில் தினமும் சென்றால் நிச்சயம் உங்களது கண்களில் தட்டுப்படும் இதை போன்ற பிட் நோட்டீஸ்கள்...

இதைப் பார்த்ததும் சகஜமாக கடக்க முடியவில்லை. அது எப்படி 8 வது படித்தாலும் வீட்டில் இருந்தபடியே 10000 சம்பாதிக்கலாம்?

இது எப்படி என கண்டு பிடிக்க எண்ணினேன்.....

முதலில் இதைப்போன்ற 10 நோட்டீஸ்களை திரட்டி வந்து அனைத்து நோட்டீஸ்களில் உள்ள நம்பர்களுக்கும் தொடர்பு கொண்டேன்.....

அதில் பாதி எண்கள் உபயோகத்தில் இல்லை. சில எண்கள் ஆப் செய்து வைக்க பட்டிருந்தது, இரண்டு நம்பர்கள் உபயோகத்தில் இருந்தது.

கால் செய்து வேலை தேடி கொண்டு இருப்பதாகவும், நோட்டீஸை பஸ்சில் பார்த்து தொடர்பு கொள்கிறோம் என கூறியதும், நமது விவரங்களை கேட்டனர், கேட்ட பின்னர் சென்னையில் அசோக் பில்லருக்கு ஸ்டாப்க்கு வாருங்கள் என்று சொன்னார்கள்....


அங்குசென்றதும் ஒரு எலெக்ட்ரிக்கல்ஸ் பெயரை சொல்லி அந்த ஸ்டாப்பில் வந்து இறங்குங்கள் என்று சொன்னார்கள்...அங்கும் சென்றேன்.
(அது ஒரு திருமண மண்டபம், பெரும்பாலும் இவர்கள் ஒரு பொது இடத்தில் தான் இப்படியான விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.பெண்களும் அப்போது தான் நம்பி வருவார்கள் என்று அப்படி ஒரு யுக்தி)

அங்கே என்னை போன்றே பல மக்கள் குவிந்து இருந்தனர். 10 மணிக்கு மிக நாகரீகமாக உடையணிந்து 10 பேர் ஆண்களும்,பெண்களும் கொண்ட குழு வந்தனர்.

ஒரு கலந்தாய்வு போல ஆரம்பித்தனர், ஒவ்வொருவரும் தனித்தனி டேபிள் போட்டு அமர்ந்து இன்டர்வியூ போல பேசி உங்களுக்கான வேலை உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் வேலை இது, நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து தந்தால் போதும் என்று சொல்லி resumeம் பெற்று கொண்டனர். அதன் பின்னர் உங்களுக்கான வேலையை நாங்கள் பதிவு செய்கிறோம் அதற்கான அட்மிஷன் பீஸ் என 500 ரூபாய் கட்ட சொன்னார்கள்.

இப்போது சுதாரித்துக் கொண்டு, நண்பர்களில் ஒருவர் மட்டும் பணத்தை கட்டி அவர்கள் குடுத்த ஆஃபர் லெட்டரை, மற்றும் கம்பெனி முகவரி, விசிட்டிங் கார்டு அனைத்தையும் வாங்கி வந்தோம்.

மேலும் இந்த இடத்திற்கு சிலர் சென்றபோது 500 ரூபாய் பெற்றுக்கொண்டு MLM class எடுக்கப்பட்டது...பிறகு 12000 ரூபாய் கட்டி ஒரு பொருள் வாங்கி MLMல் சேர்ந்து கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.

இதில் இருக்கும் விபரீதம் என்னவென்றால் இவர்களிடம் மாட்டி கொள்ளும் நமது விவரங்கள் அடங்கிய Resume, அதை வைத்து நம்மை சிக்கலில் சிக்க வைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இது ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறது என அறியப்பட்டது இது போலீசுக்கு தெரிந்தே நடக்கிறது.எனவே நீங்கள் complaint கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள்.

எனவே இனி இதைப்போன்ற நோட்டீஸ்களை பார்த்தால் உஷாராக இருங்கள்!!!
வேலையில்லா திண்டாட்டம் இவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது என்பது வேதனை தரும் விஷயம் தானே..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,249
Likes
83,831
Location
Bangalore






''தினமும் நாங்கள் பணிக்குச் செல்லும்போது வாட்டர் பாட்டிலில் எங்களின் தேவைக்காகத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இப்போது கடுமையான வெயில் வாட்டுகிறது.

ஒரு நடைக்கு குறைந்தது 1.30 மணி நேரத்துக்கு மேல் பல குக்கிராமங்கள் வழியாக எங்கள் பேருந்து செல்லும். எல்லா கிராமத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் அரசுப் பேருந்தில் பயணிப்பார்கள்.

அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது. பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கவும் முடியாது.


அதனால் பல நாள்கள் பலபேர் தாகத்தில் தவித்திருக்கிறார்கள்.

நாங்கள் பாட்டில்களில் வைத்துள்ள தண்ணீரை எடுத்து குடிக்கும்போது சார் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என அப்பாவியாகக் கேட்பார்கள். நாங்களும் கொடுப்போம்.

அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை வந்தது. எல்லோரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம்.

இருவரும் எங்கள் துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணிகள் குடிக்க தண்ணீர் வைத்து வருகிறோம்.

நாங்களும் அந்தத் தண்ணீரை பயன்படுத்திய மாதிரி ஆச்சு; நாலு பேருக்கு நல்லது செஞ்ச மாதிரியும் ஆச்சு'' என்றவர்கள் தொடர்ந்தனர். ''கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்படி செய்து வருகிறோம். இனி கோடை காலம் மட்டும் இல்லாமல் எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம்''

-அரசு பேருந்து டிரைவர் செல்வராஜ் கண்டரக்ட ர் முத்தமிழ் செல்வன்
(தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கும் செல்கிறது 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து).
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 499 மதிப்பெண்கள் பெற்று நொய்டா மாணவி முதலிடம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைந்தது. கடந்த 2011 முதல் 2017 வரை 7 ஆண்டு காலமாக 10-ம் வகுப்புத் தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படவில்லை.

மாணவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான வருடாந்திரத் தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். இந்த ஆண்டிலிருந்துதான் முன்பு இருந்ததைப் போன்று கட்டாய பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பொருளாதாரவியல் பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்தது. இதனால் அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது.

இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், நாடு முழுவதும் 83.01 சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவியர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மாணவியர் தேர்ச்சி 78.99 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு இது, 88.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்சவா, 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், cbse.nic.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்கள் ரோல் எண், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழ் ஹிந்து
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
கொந்தளிப்பான கடல்; மணல் புயல்!’ - தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தனுஷ்கோடி கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன. இதனால் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதேபோல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த பகுதியால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இம்மாதம் 31-ம் தேதி வரை நீடிப்பதால் கடலோரப் பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தை மூழ்கடிக்கும் வேகத்தில் சுமார் 20 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சமுனை கடல் பகுதிக்குச் சென்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் கம்பிப்பாடு கடற்கரை பகுதி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸார் அனுமதிக்கின்றனர். மேலும், காற்றின் வேகத்தால் கரையோர மணல்கள் புழுதி புயலாக மாறி சாலையில் செல்வோர்மீது வீசுகிறது. மேலும், சாலையில் குவிந்துவரும் மணல் திட்டுக்களால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்
சென்னை



மெட்ரோ ரயிலில் இன்றும் (மே 29) இலவசமாக பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்தில் தற்போது 35 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மக்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ட்ரல்–விமான நிலையம், சின்னமலை– டிஎம்எஸ் இடையே இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 4 நாட்களாக மக்கள் ஆர்வமாக குடும்பத்தோடு வந்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
முதல் நாளில் 50,000 பேரும், 2-ம் நாளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும், 3-ம் நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 84 ஆயிரம் பேரும் பயணம் செய்துள்ளனர். 4-வது நாளான நேற்றும் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர். 4 நாட்களுடன் இலவச சேவை முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5-வது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “மெட்ரோ ரயில் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வசதியாக இருக்கிறது. கோடை விடுமுறை மே 31 வரை இருப்பதால், இன்னும் ஓரிரு நாட்களுக்கு இலவச பயணம் அனுமதித்தால், பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பயணம் செய்து மகிழ்ச்சியடைவார்கள்” என்றனர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானது: 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன.
சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது.

நாடு முழுவதிலும், 16,38,552 மாணவ, மாணவியர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி நிறைவு பெற்றது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 86.07 மாணவ ர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.32% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 97.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
500க்கு 499 மதிப்பெண்களை 4 மாணவர்கள் பெற்றுள்ளனர். மாணவர்களின் விவரம் ப்ரகர் மிட்டல் (குருகிராம்) ரிம்சிம் அகர்பால்( பிஜ்னோர்), நந்தினி கர்க் (ஷம்லி) ஸ்ரீலஷ்மி (கொச்சின்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவை அறிய : http://cbseresults.nic.in/ என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
 
Thread starter Similar threads Forum Replies Date
Sriramajayam Fitness 47
Sriramajayam Sports 689
Sriramajayam Media Talk 1334
Sriramajayam Health 3123
Sriramajayam General Discussions 9983

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.