Today's Medical Info

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#1
புகை மூளையை மழுங்கடிக்கிறது

புகைப் பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. நினைவாற்றலையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை “அழுகச் செய்கிறது” என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும் கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
நமது பழக்க வழக்கங்கள் நமது உடல் ஆற்றலை எவ்வாறு பாதிக்கின்றனவோ அதேபோல நமது சிந்தனை ஆற்றல்களையும் பாதிக்கின்றன என்பதை மக்கள் உணரவேண்டும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கிறார். ‘ஏஜ் அண்ட் ஏஜிங்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இவர் களது ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் மூளையின் ஆரோக்கியத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பதை கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

:typing::typing::typing::typing::typing::typing::typing::typing::typing::typing:
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,644
Likes
35,027
Location
mysore
#2
Dear Sir, you have brought out the bad effects of tobacco smoking habit. thanks for your useful medical information
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#3
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

உடற் ப யிற்சி செய்து முடித்தவுடன் கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. உடற்பயிற்சிக்குப் பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகளாக தண்ணீர், புரதம் நிறைந்த உணவுகளைப் பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள். உடற்ப யிற்சியின் போது உட லில் உள்ள குளுக்கோஸா னது எரிபொருளாக மாறுகிறது. எனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.
பாற் கட்டி நீண்ட தூரம் ஓடிய பின்பு சீஸ் உணவுகளை சாப்பிடக் கூடாது. அதில் சாச்சு ரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. இவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சிக்குப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப் பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்பு, உப்பு அதிகமாக இருக்கும். அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.

sport-graphics-gymnastics-670348.gif
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,644
Likes
35,027
Location
mysore
#4
Very good caution you have provided with the categorisation of foods which should not be consumed after exercise. thank you very much sir
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#5
அளவோடு சாப்பிடும் பழக்கம் நிறைவான வாழ்வைத் தரும்

தினசரி உணவு உண்ணும் போது 40 விழுக்காடு அளவு குறைவாகச் சாப்பிட்டால் 20 ஆண்டு ஆயுள்காலம் நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஆரோக்கியம், முதுமை குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
மனிதவாழ்வில் முதுமை என்பது தவிர்க்கமுடியாதது. வயதாக, வயதாக நோய் ஏற்படும். மரபணுக்களின் காரணமாகவும் நோய்கள் ஏற்படுகின்றன.
இதய நோய், புற்றுநோய், நரம்பியல் நோய்களும் மூப்பின் காரணமாக ஏற்பட்டு மரணங்கள் சம்பவிக்கின்றன. சரியான உணவுப்பழக்கம் மூலம் 30 விழுக்காடு வயதாவதையும், நோய் ஏற்படுவதையும் தடுக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினசரி வயிறுமுட்ட உண்டு உடலில் கொழுப்பை அதிகரித்துக் கொள்வதைவிட 40 விழுக்காடு குறைவாக உணவு உண்டு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம். எலிகளைக் கொண்டு நடத்திய சோதனையில் இது நிரூபணமாகியுள்ளது.

sleepy.gif sleepy.gif sleepy.gif sleepy.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#7
Very good caution you have provided with the categorisation of foods which should not be consumed after exercise. thank you very much sir
Thx u..:pray1:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#8

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#9
வயதானவர்களுக்கான உடற்பயிற்சி: நாள் முழுதும் நல்ல மனநிலை ஓங்கும்

உடற்பயிற்சி செய்து வந்தால் கால், கை எல்லாம் ஒரே வலி என்று சிலர் குறைபட்டுக் கொள்வதுண்டு. இந்த வகை வலி ‘நல்ல வலி’. ஏனெனில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி நாளடைவில் பழகப்பழக சரியாகி விடும். அத்துடன் உடலையும் சிறந்த முறையில் வலுவடையச் செய்யும்.
சின்ன வயதிலிருந்தே உடற் பயிற்சி செய்பவர்கள் பொதுவாக நோய் நொடிக்கு அவ்வளவாக ஆளாவதில்லை. அப்படியே ஆளானாலும் வெகு சீக்கிரமே குணமடைந்து பழைய நிலைக்கு வந்துவிடுவர்.
வயதாக ஆக உடலுழைப்பு நமது அயர்ச்சியைப் போக்கும்; வலிகளைக் குறைக்கும்; நமது வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வயதானவர்களுக்கு கடுமையான நோய்களின் பாதிப்பால் வலிகள், தள்ளாமை, சில உறுப்புகள் சரிவர செயல்படாமல் போவது போன்றவை வழக்கமாக ஏற்படு வதுதான். இதனால், சுதந்திரமாக நடமாட முடியாமல் வாழ்க்கை முடங்கிப் போகும். இவற்றிலிருந்து விடுபட அல்லது இவற்றின் தீவிரத்தைக் குறைக்க உடல் செயல்பாடு மிகமிக அவசியம்.

sport-graphics-gymnastics-333215.gif sport-graphics-gymnastics-333215.gif sport-graphics-gymnastics-333215.gif sport-graphics-gymnastics-333215.gif sport-graphics-gymnastics-333215.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,664
Likes
141,412
Location
Madras @ சென்னை
#10
எடையைக் குறைக்க...

ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தால் நமது உடலின் எடை நம்மால் தூக்கி நடக்க முடியாத அளவுக்குக் கூடிவிடும். எப்படியாவது உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டும் என்று நாள்தோறும் எண்ணுவோம். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையுமே முன்னெடுக்கமாட்டோம்.
எதற்கெடுத்தாலும் வாகனத்தில் செல்லும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டொழிக்க வேண்டும். இயன்றவரை அக்கம்பக்கம் செல்லும் வேலைகள் ஏதேனும் இருந்தால் நடந்தே சென்று பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் நடந்துசெல்வதை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அத்துடன், நாம் உண்ணும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்கிறோம்; எந்த மாதிரியான பானங்களை அருந்துகிறோம் என்பதில் கவனம் செலுத்தும் அதேவேளையில், இனிப்புள்ள பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இயன்றவரை சுத்தமான தண்ணீரை அதிகம் பருகும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அதேபோல் உங்கள் சாப்பாட்டு நேரத்தைக் கவனியுங்கள். எந்தெந்த நேரங்களில் என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கட்டுப்பாடு விதியுங்கள். நொறுக்குத் தீனிக்கு அறவே விடைகொடுங்கள்.

graphics-walking-900519.gif graphics-walking-900519.gif graphics-walking-900519.gif graphics-walking-900519.gif graphics-walking-900519.gif
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.