Today's Medical Info

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#21
மூளை நன்கு செயல் பட என்ன சாப்பிடலாம்......

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.


மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.*

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.*

இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

brainAnimation.gif brainAnimation.gif brainAnimation.gif brainAnimation.gif
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#22
MUST READ AND SHARE.....

The main causes of Liver Damage are:
1. Sleeping too late and waking up too late are the main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
8. Consuming overly done foods also add to the burden of liver. Veggies should be eaten raw or cooked 3-5 parts. Fried veggies should be finished in one sitting, do not store.
9.Consumption of Alcohol

Must share please...........
:typing:
:typing::typing:
:typing:
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#23
ரத்த உற்பத்திக்கு உதவும் அற்புத கனி

மாதுளை யில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப் பிட் டால் இத யத் திற் கும், மூளைக் கும் மிகு தி யான சக்தி கிடைக் கிறது. பித் தத்தைப் போக் கு கிறது இருமலை நிறுத் து கிறது.
புளிப்பு மாதுளையைப் பயன் படுத் தினால் வயிற் றுக் கடுப்பு நீங் கு கிறது. ரத்த பேதிக் குச் சிறந்த மருந்தா கிறது. தடை பட்ட சிறுநீரை வெளி யேற் று கிறது. பித் த நோய் களை நிவர்த்தி செய் கிறது. குடற் புண் களை ஆற் று கிறது. எந்த வகையான குடல் புண்ணை யும் குண மாக் கு கிறது.
மாதுளம் விதை களைச் சாப் பிட் டால் ரத் தவி ருத்தி ஏற் படும். சீத பே திக் குச் சிறந்த நிவா ர ணம் அளிக் கும். தொண்டை, மார்பு, நுரை யீ ரல், குட லுக்கு அதி க மான வலிமையை உண்டாக் கு கிறது.
ஆண் தன்மை யில் பலவீ னம் உள் ள வர் கள் மாது ளம்ப ழம் சாப் பிடுவ தால் மிகுந்த சக்தியை பெறலாம். மாது ளம்ப ழத்தைச் சாப் பிட் டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.

eating-grapes.gif eating-grapes.gif eating-grapes.gif eating-grapes.gif eating-grapes.gif

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#24
சமையலுக்குச் சுவையும் மணமும் சேர்க்கும் புதினாக்கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்தது.

அடிக் கடி புதினா கீரையைச் சாப் பிட்டு வந்தால் உட லி லுள்ள ரத்தம் சுத் த மா கும். புதிய ரத்தம் உற் பத் தி யா கும்.
எக் கா ர ணத் தினா லா வது வயிற் றுப் போக்கு ஏற் பட் டி ருந்தால், அந்தச் சமயம் புதினாத் துகை யலைச் சாப் பிட் டால் வயிற் றுப்போக்கு நின் று வி டும்.
சிறு குழந்தை களுக்கு உணவு செரிமானம் ஆகாமல் வயிற் றுப் போக்கு வாந்தி ஏற் படு வ துண்டு.
இதற் குப் பல வகையான மருந் து கள் உண்டு என்றா லும் புதினாக் கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக் கிறது.
கருத் த ரித்த இரண்டா வது மாதம் முதல் காலை வேளையில் சில பெண் களுக்கு வாந்தி உண்டா கும். சில சமயம் ஆகாரம் உண்ட வு டன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல் ஏற் படும். இதை மசக்கை வாந்தி என்று கூறு வார் கள். தினசரி இப்படி இருக் கும். 2, 3 வாரங்களுக் குப் பின் இது தானே மாறி வி டும். சில பெண் களுக்கு பிர ச விக் கும் வரை வாந்தி சாயந் திர வேளை களில் ஏற் படும்.
இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன் படு கிறது. புதினா துவையல், புதினா சாற்றில் தயாரித்த சூப் போன்றவற்றை கர்ப்பிணிப் பெண்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
புதினாக் கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக் க வும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும்.

graphics-pregnant-085748.gif graphics-pregnant-085748.gif graphics-pregnant-085748.gif graphics-pregnant-085748.gif
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#26

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#28
மிக்க நன்றி...
:thumbsup
:thumbsup:thumbsup​


உபயோகமான தகவல்கள் சார்... நன்றி.
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#29
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...

animal-graphics-chickens-732193.gif
animal-graphics-chickens-732193.gif animal-graphics-chickens-732193.gif


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#30
​Very very useful informations......keep sharing Visu.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.