Top 10 food Items - சுவைச்சுப் பாரு டாப்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
உலக அளவில், வாழ்நாளில் ஒரு முறையாவது ருசி பார்க்க வேண்டிய டாப் 10 உணவு வகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது,

நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்’ பத்திரிகை.

அந்தப் பட்டியலில் நம் மசால் தோசையும் ஒன்று. தோசையுடன் போட்டி போடும்

அந்த உணவு வகைகளைப் பற்றி சில வரிகளில்...
1. பீகிங் டக் (Peking duck) சீனா: மன்னராட்சிக் காலத்திலேயே பிரபலமாக இருந்த உணவு. உறித்த முழு வாத்தின் மீது கொஞ்சம் பூண்டு, இனிப்பு கலந்த மசாலாவைப் பூசி, 270 டிகிரி சூட்டில் ரோஸ்ட் செய்து பரிமாறுகிறார்கள்.
2. எஸ்கர்கோட்ஸ் (Escargots) பிரான்ஸ்: நத்தையை ஓட்டில் இருந்து பிரித்து எடுப்பார்கள். பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் ஒயினைக்கொண்டு பதப்படுத்தி, மீண்டும் அதை ஓட்டுக்குள் வைத்துப் பரிமாறுகிறார்கள்.

இந்த உணவில், புரதச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.
3. மௌஸாகா (Moussaka) கிரீஸ்: ஓட்டோமான் சக்ரவர்த்தியின் ஃபேவரைட் டிஷ்

இது. அடிப்பாகத்தில் ஆலிவ் எண்ணெய் தடவிய எக்பிளான்ட் நடுவில்... தக்காளி, வெங்காயம், பூண்டு, கொஞ்சம் மசாலா சேர்த்த கொத்துக்கறி. எல்லாவற்றுக்கும் மேலாக, பெக்காமல் சாஸ் தடவிப் பரிமாறுகிறார்கள்.

4. மசாலா தோசை (Masala dosa) இந்தியா: இதன் சுவை, நாக்கு நன்கு அறிந்ததே.

5. ஸூச்சினி மலர்கள் (Zucchini Flowers) இத்தாலி: ஸூச்சினி மலர் பார்ப்பதற்கு நம்ம ஊர் பூசணிப் பூவைப் போலவே இருக்கும்.

இதை இத்தாலியின் வாழைப் பூ எனச் சொல்லலாம். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மலர்களின் உள்ளே முட்டை, யாக், ரிகோட்டா, பார்சமன் போன்ற லோக்கல் மசாலாக்களுடன், உப்பு மற்றும் மிளகு தூவி பேக் செய்து, இளஞ்சூட்டில் வதக்கிச் சாப்பிடுகிறார்கள்.

courtesy;''aanandha vikatan
 

srikumarsavi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 24, 2013
Messages
1,530
Likes
6,395
Location
......
#7
லிஸ்ட் ல சிலதை காணோமே.நமக்கு பிடிச்சதா fill பண்ணிக்கலாமா?
(சும்மா ஒரு கற்பனை தான்)
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.