Top 10 Serial Stories of Penmai - 2015

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,919
Location
nederland
#21
Top 10 Serial Stories of Penmai - 2015

At times we have to recognize and thank our Beloved Members and Contributors to our threads. Top 10s' of Penmai - 2015!! - In this regard, on 2015 in testimony hereof, and by virtue vested on us/also by Members. They Perceived the pleasure in sharing their skills with us..

We hereby Announce the "Top 10 Serial Stories of Penmai - 2015!" to the following:

PS: The list is given in Alphabetical Order of Stories Name.

Story

Author

அலை மீதிலாடும் உள்ளங்கள்

@Madhivadhani

ஆத்தங்கரை மரமே

@saveetha1982

இனிக்கும் நிஜங்கள்

@jash - Saradheya

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே..

@rosei

சஹி Weds சஞ்சு!

@naanathithi - Ushanthy

நீயெனை நீங்காதே அன்பே

@ramyaraj

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

@vennila chandra

மாயவனோ! தூயவனோ!!

@sarayu_frnds

முகிலினமே முகவரி கொடு

@umasaravanan

விழியோரக் கவிதைகள்

@ramyas



Hearty Congratulations & a heartfelt thanks to all for Your Contribution & enthusiasm! Thank you for the good participation as Well.. Hope You all can contribute the Same in this year too... Cheers Friends!!

Members please join with us to congratulate Our Besties..
ஹைய்ய்ய்....இது உண்மையா ???

மிக்க மிக்க மிக்க சந்தோசமா இருக்கு !

பெண்மை,

என் எழுத்தை வாசித்த ஒவ்வொரு வாசகர்கள் ,


தம் கருத்துக்கள் மூலம் என் எழுத்த்தை மெருகேற்றியவர்கள் ,

அனைவருக்கும் மிக்க மிக்க மிக்க நன்றிகள் பலபல .



எல்லோரும் எடுத்துக்கோங்க..


ஏனைய எழுத்தாளர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,919
Location
nederland
#24
ஹாய் ஹாய் ...

காலையில் இங்கு வந்து பார்த்தும் அவசரம் அவசரமாக ஒரு போஸ்ட் போட்டுவிட்டு ஓடி விட்டேன்.

எவ்வளவு அவசரம் என்பது போஸ்டில் உள்ள எழுத்துப் பிழையைப் பார்த்தாலே தெரியும்.(எவ்வளவு விழுந்தாலும் ஒட்டவில்லை என்று காரணம் சொல்லிச் சமாளிப்போமே!;);))


இரண்டு வருடங்களுக்கு முதல் நான் எழுதிய முதல் குறுநாவல்; அதை பெண்மையில் பதிந்ததும், அதை வாசித்தவர்கள் சொன்ன கருத்துக்களும், கிடைத்த அழகிய ரிவ்யுக்களும்...

அந்த நிமிடம் என்னுள் நிறையவே சந்தோசத்தைத் தந்த மாதிரி நிறையவே யோசிக்கவும் வைத்தது .

வாவ் , சூப்பர் , வெரி நைஸ் ,கதையை வாசித்தவர்கள் இந்த வார்த்தையைச் சொன்ன போது உண்மையாகவே நான் மிகவும் யோசிக்கத் தொடங்கி விட்டேன் .

தொடர்ந்து சொல்லச் சொல்ல என் யோசனை அதிகரித்தது.

இந்த வாவ், சூப்பர் , வெரிநைஸ் எல்லாம் என் எழுத்துக்கு உண்மையில் பொருந்தி வருமா ??

முகத்துக்கு நேரே சொல்ல முடியாது என்பதால் , போனால் போகட்டும் என்று சொல்லுகிறார்களோ!

மனதில் எந்நேரமும் சுழன்று கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு, கொஞ்சம் கொஞ்சமாக இன்றுவரை விடைகான முயன்று கொண்டிருக்கிறேன் .

முதல் கதையிலிருந்து இன்றைய கதை வரை உள்ள முன்னேற்றம் அதன் மூலம் கிடைத்தே!


மூன்றாவது கதையை எடிட் பண்ணிக் கொண்டிருக்கும் போது, உண்மையாகவே என் வாசகர்கள் நிரம்பவும் பொறுமைசாலிகள் என்றுதான் எனக்குத் தோன்றியது !:bigsmile::bigsmile:

எழுதுகிறேன் என்று நான் செய்யும் சேட்டைகளைப் பொறுத்து , தம் நேரத்தைச் செலவழித்து வாசித்து ,மனம் திறந்து தம் கருத்துச் சொல்பவர்கள்; (பெயர்கள் குறிப்பிட்டு யாரையுமே தவறவிட எனக்கு விருப்பம் இல்லை. என் கமெண்ட்ஸ் திரிக்கு வரும் ஒவ்வொருவருக்கும்.)

கமெண்ட்ஸ் திரியில் சொன்னால் சரியில்லையோ என்று நினைத்து 'பிஎம்'மில் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள்;(அதற்கெல்லாம் அவசியமே இல்லை, வெளிப்படையாகவே சொல்லாம்)

உங்களால் தான் எழுதுவதில் நான் என் நேரத்தைச் செலவிடுகிறேன் .

நீங்கள் சொல்லும் கமெண்ட்ஸுக்கு நியாயம் செய்யவேண்டும் என்று நினைத்தே, ஒவ்வொரு எழுத்தையும் எழுதுகிறேன்.

அதில் ஓரளவேனும் முன்னேறிச் செல்கிறேன் என்று நினைக்கிறேன் .

உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் . தொடர்ந்தும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன் .

சைலன்ட் ரீடர்ஸ் ..நீங்களும் என் செல்லங்கள் தான்; என்ன, என்னைக் கோபப்படுத்துவதையே பார்ட் டைம் வேலையாகச் செய்றீங்க! அது தெரிந்தும் நானும் பாருங்க...சரி சரி விடுங்க விடுங்க...உங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் .

முதல் கதையிலிருந்து, கதை முடிந்ததும் பொறுமையாக வாசித்து கமெண்ட்ஸ் சொல்வது மட்டும் இல்லாது, யோசித்து யோசித்து நிறைய திருத்தங்கள் சொல்லும் ஜெயந்தி..உங்களுக்கும் என் அன்பும் நன்றிகளும் .

(பிறந்தநாளை மறந்துபோனேன் ஜெயந்தி. வயது போகுதில்லையா அதுதான்..ஹா..ஹா .

மனமார்ந்த பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயந்தி!

உங்க திரெட்டில் போட்டிருக்கிறேன். என்மாதிரி பிந்திய வாழ்த்துச் சொல்பவர்களுக்காக அந்தப் பக்கம் கொஞ்சம் இடைக்கிடை எட்டிப் பாருங்க ஜெயந்தி .)

அன்றிலிருந்து இன்றுவரை எபியைப் போட்டுவிட்டு, "ஹப்பாடா போட்டுவிட்டேன்!" என்று ஆசுவாசமூச்சு (இதிலிருந்து ஒவ்வொரு எபியும் போட எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று சொல்ல வருகிறேன் .சரியா :p:p)விடும் முன்னர் ஒரு லைக் விழுந்திருக்கும்!

அந்த லைக்கின் உரிமையாளினி கார்த்திம்மா ...செல்லமே மிக்க நன்றிடா...என்ன உதவி என்றாலும் அடுத்தநிமிடம் செய்து தருவதற்கும் சேர்த்து சரியா..

என் நான்காவது கதையின் கமெண்ட்ஸ் மூலம் அறிமுகமாகி, அன்றிலிருந்து, உன்னிப்பாக கதையை வாசித்து கமெண்ட்ஸ் + திருத்தங்கள் சொல்வது மட்டும் இல்லாமல் ,

பத்துத்தரம் திருப்பிப் பார்த்தாலும் அத்தியாயத்துக்கு சுமாராக பத்து எழுத்துப்பிழை என்று கண்சிமிட்டுவதை தவிர்க்க முடியாது நான் திண்டாட, அதைப் பார்த்துச் சொல்லும்(அட அதற்குப் பிறகும் அங்க இங்க எழுத்துப் பிழை இருக்கும் ...எடிட் பண்ணும் போது வருமா இல்லையா.ஹி..ஹி) தர்சி கோகு...எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது .

கதையெழுதும் பொழுது எழுத்துப் பிழை வருவது ஒருபுறமென்றால் , எழுத்துப் பிழையில்லாமல் கமெண்ட்ஸ் போடுபவர்களுக்கு பதில் போடும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால் உங்களை என்ன செய்யலாம் ...நித்திரையில் போட்டேன், அவசரத்தில் போட்டேன் என்று சாட்டுச் சொல்லாதீங்கக்கா, இப்படி எழுத்துப் பிழைவிட்டால் வெட்கம்கா..என்று மிரட்டல் விடும் தர்சி...(அப்படியும் திருந்துகிறோமா என்பது வேறுகதை.. )நன்றிகள் பல பல .

கதை முடிந்த பிறகு, ஒவ்வொரு எபியாக பொறுமையாக வாசித்து, உன்னிப்பாக ஆராய்ந்து கேள்விகளால் என்னைத் திணரடிக்கும் தேவி....இதயம் நிறைந்த நன்றிகள் பல பல ..


நம்பெண்மை ..நாளாந்தம் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றாள்.

அதில் ஒவ்வொரு வருடமும் எவ்வளவோ கதைகள் முற்றுப் பெறுகின்றன.

அதில் பத்துக் கதைகளை மட்டும் சிறந்தவை என்று தெரிவு செய்து போடும் பொழுது...அந்தப் பத்தில் ஒருவராக இருப்பவர் மனம் நிறைந்து போவார். தம் உழைப்புக்கு கிடைத்த பாராட்டு என்று ஆனந்தம் கொள்வார் இல்லையா..

எனக்கு ஓர் சிறு ஆசை!

அதை கதை எழுதுபவர்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.


இப்படி முதல் பத்து கதைகளை தெரிவு செய்யும் பெண்மை குழு முடிவெடுக்க முடியாது திண்டாட வேண்டும். (பெண்மை குழுவே நோ முறைப்பு...)

இப்போ என்ன செய்வது? இதைத் தேர்வு செய்தால் இதுவும் நன்றாகத் தானே இருக்கு என்று தடுமாற வேண்டும் .

அது, இங்கு எழுதும் ஒவ்வொருவராலும் நிச்சயம் முடியும் .

நிச்சயம் முயலவேண்டும் என்பது என் ஆசை.

அடுத்த வருடம் இந்தத் திரியில் அதை அவர்கள் கூறவேண்டும்.

என்ன எல்லோரும் அதற்குத் தயாரா ??

நிச்சயம் எல்லோரும் தயாராகத்தான் இருப்பார்கள் .

பெண்மையின் வாசகர்களே!

நான் மேலே சொன்னதை நிறைவேற்ற நீங்கள் தான் உதவ வேண்டும்.

குறை நிறைகளைத் தயங்காது பகிர்ந்து கொண்டு எழுதுபவர்களை ஊக்குவியுங்கள்.


இதைப் பொறுமையாக வாசித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.



 
Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,702
Likes
151,042
Location
Madurai
#25
Hahhahahaa... @rosei எப்போதும் போல் உங்களது பதிவை ரசித்தேன் க்கா.. அதிலும் நீங்க எழுத்தாளர்களுக்கு வைத்த கோரிக்கை ஹஹஹா :love: நீங்கள் சொல்லிருப்பது உண்மையும் கூட.. கதைகள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமில்லை, மற்ற categoryயிலும் Top 10 எடுப்பது கடினம் தான்.. கதையென்று வரும்போது சொல்லவா வேணும்? அதிலும் நம் எழுத்தாளர்கள் Imaginationல் எவரெஸ்டை எட்டியவர்கள்.. :)

இனி வரும் வருடங்களில் இன்னும் சிரமமான பணியாக இந்த தேர்வு இருக்குமாயின், அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியே :) ஆர்வத்தோடும் ஆவலோடும் காத்திருக்கிறோம் :)

அப்புறம் நன்றியெல்லாம் சொல்லி வேறு படுத்தாதீங்க கா.. உதவி என்பதை விட பிடித்த காரியமாகவே செய்கிறோம் :) Cheers!! All the Very Best :love:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#28
வாழ்த்துக்கள் நண்பர்களே.

 

Attachments

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,280
Location
bangalore
#29
My heartiest congratulations to all the Writers..:) May you shine brighter in the days to come.. Wishing you all good luck for the years ahead.. Cheers!!Hi 5
​Congrats to all the Writers.
Adadaaaaa :)

Namma area kulla nam makkal :) Congrats to all writersss :cheer::cheer:
@naanathithi @vennila chandra extra congrats makkasss Hi 5Hi 5
அனைத்து தோழமைகளுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....


Thank you so much Friends for all your wishes :)




 
Last edited:

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,280
Location
bangalore
#30

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.