Treatment for Kidney stone - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!(Today i read it in facebook I think it wi

Joined
Aug 11, 2011
Messages
20
Likes
51
Location
Chennai
#1
ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
re: Treatment for Kidney stone - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!(Today i read it in facebook I think i

நல்லதொரு உபயோகமான பகிர்வு ஜோசபின் .

எல்லாருக்குமே இது உப்யோகமாக இருக்கும் . நன்றி
 
Joined
Aug 11, 2011
Messages
20
Likes
51
Location
Chennai
#3
re: Treatment for Kidney stone - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!(Today i read it in facebook I think i

நல்லதொரு உபயோகமான பகிர்வு ஜோசபின் .

எல்லாருக்குமே இது உப்யோகமாக இருக்கும் . நன்றி
thank u jayanthy sis..
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
re: Treatment for Kidney stone - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!(Today i read it in facebook I think i

Dear Josephine, thank you for the very valuable information.
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#5
re: Treatment for Kidney stone - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!(Today i read it in facebook I think i

"சிறுநீரகத்தில் கல்லா? பால் சாப்பிடாதீர்கள். பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அது சிறுநீரகத்தில் கல்லை ஏற்படுத்திவிடும்'' என்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக, ""பால், தயிர், மோர் போன்றவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால்

"சிறுநீரகத்தில் கல்லா? பால் சாப்பிடாதீர்கள். பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அது சிறுநீரகத்தில் கல்லை ஏற்படுத்திவிடும்'' என்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக, ""பால், தயிர், மோர் போன்றவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிடும்'' என்கிறார் சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஆர்.பாரி. சென்னை மலர் மருத்துவமனையில்
""பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்'' என்கிறார் அவர்.
""நமது நாட்டில் சிறுநீரகக் கல் தோன்றும் பிரச்னை அதிகமிருக்கிறது. இதற்குக் காரணம் நமது வெப்பநிலைதான்.
அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது.
வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீ
ர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன.
நமது உணவுமுறையும் கூட இப்போது மாறிவிட்டது.
பீட்ஸô, பர்கர் என்று சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். விலங்குகளின் புரதச் சத்து அதிக அளவில் நமது உடலில் சேர்கிறது.

பழங்கள், காய்கறிகளைத் தேவையான
அளவு சாப்பிடுவது இல்லை.
இவையும் சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணம்.
உடல் உழைப்புக் குறைந்துவிட்டது.
நடப்பதும் குறைந்துவிட்டது.
இரு சக்கர வாகனங்களில் சென்று அலுவலகத்தில் ஏஸி அறையில் வேலை செய்வது என்று வாழ்க்கைமுறை மாறிவிட்டது.
சிறுநீரகக் கற்கள் உருவாக இவையும் காரணம்.
முன்பைக் காட்டிலும் அதிக அளவு இப்போது பெண்களுக்கும் சிறுநீரகக் கல் பிரச்னை ஏற்படுகிறது
. இதற்குக் காரணம் பெண்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டதே. முன்பு பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்
இப்போது படிப்பு, வேலை என்று ஆண்களைப் போலவே அவர்களும் வெளியே செல்வதால், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதில்லை.
உடலுக்குத் தேவையான சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை.
அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னவுடன்,
சிலர் ஒரே நேரத்தில் 1 லிட்டர் தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படி குடிக்கக் கூடாது.
சாப்பாட்டுக்குச் சிறிது நேரம் முன்பும், சாப்பிட்ட பின்பும் இரண்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தலாம். தாகம் எடுக்கும்போதும் இடையிடையே தண்ணீர் அருந்தலாம்.
சிலர் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1 லிட்டர், 2 லிட்டர் என்று தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படிக் குடித்துவிட்டு, அன்றைய நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் சிறுநீரகக் கற்கள் தோன்றும்.
எப்போதெல்லாம் சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாகவோ போகிறதோ, எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நாம் நமது உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
சிறுநீரகத்திலோ, சிறுநீர் பாதையிலோ கற்கள் தோன்றிவிட்டால், அவற்றை அகற்ற நவீன மருத்துவமுறைகள் இப்போது வந்துவிட்டன. சிறுநீர் பாதையில் ஒரு கருவியை நுழைத்து கற்களை நீக்கும் முறையும் உள்ளது.
சிறுநீரகத்தில் துவாரம் போட்டு கற்களை நீக்கும் முறையும் உள்ளது.


சிறுநீரகக் கற்களை நீக்க வாழைத்தண்டு சாறை சிலர் அருந்துவார்கள். சிறுநீரகக் கற்கள் இதனால் உடலை விட்டு வெளியேறுமா? என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
அதே சமயம் வாழைத்தண்டு சாறு அருந்துவதால் உடலுக்கு எந்தக் கெடுதியு
ம் இல்லை. வாழைத் தண்டு சாறு ஒரு சிறுநீர் பெருக்கியாக உடலில் செயல்படுவதால், அதிக அளவு சிறுநீர் வெளியேறும்'' என்கிறார்
டாக்டர் பாரி.

courtesy;'kadhir/dinamani
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.