True Friendship - உண்மையான அன்பு இருந்தால் ...

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#1
எனக்கு என்னுடைய இளங்கலை கல்லூரியில் சில தோழிகள் இருந்தனர்.. எப்பவுமே ஒரு க்ரூப்பா இருப்போம். அதில் ஜூனியர்களும் அடக்கம். அந்த juniorகளில் ஸ்ரீ என்ற ஒரு தோழி மட்டும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பாள். அனைவரிடமும் ஒரே மாதிரி இருந்தாலும், அவள் மீது எனக்கும் கொஞ்சம் அன்பு அதிகம்தான். வெளிப்படுத்தியதில்லை நான் அவளிடம், மற்றவர்கள் முன் தனியே தெரியும் என்பதால்.அவளிடம் என்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்ததும் இல்லை ,அவளுமே அப்படிதான் . இப்படியே நாட்கள் செல்ல நான் படித்துமுடித்து வெளியே வந்துவிட்டேன். உடனடியாக முதுகலையும் சேர்ந்துவிட தினமும் பேசுவது குறைந்து குறுஞ்செய்தி வழியே பேசிக்கொள்வோம் அனைவருமே அப்போது watsapp உம் இல்லை க்ரூப்பும் இல்லை.

ஒன்றிரண்டு பேர் மட்டும் தினமும் பேசிக்கொண்டோம். அப்போது ஸ்ரீயுடன் அவ்வளவாக பேசவில்லை..நாட்கள் செல்ல செல்ல மெசஜ்களும் குறைந்தது, எனக்கு திருமணம் வேறு முடிவாகிவிட கிடைக்கும் நேரத்தில் அவருடன் பேசவே சரியாக இருந்தது.

அப்போது நான் என்னுடைய முதுகலை பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருந்தேன்... என்னுடைய அந்த ஜூனியர் தோழிகளுக்குள் ஏதோ சண்டை ஆரம்பித்தது, ஆம், அந்த ஸ்ரீயை பற்றி சில தவறான செய்திகளை சிலர் பரப்பிவிட அது அந்த group உள்ளே வெடித்தது, என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இரண்டாக பிரிந்தனர் அந்த தோழிகள், ஸ்ரீயை பற்றி கூறிய அந்த நபரும் அதே க்ரூபில் தான் இருந்திருக்கிறாள் , அது ஸ்ரீக்கு தெரியவில்லை, அவளை உண்மை என்று நம்பி மற்றவர்களை தவிர்த்தாள் .

என்னிடம் பேசிகொண்டிருந்தவர்கள் கூறியதை நான் ஸ்ரீயிடம் கேட்க அவளோ என்னிடம் எப்படி நிருபிக்க என்று தெரியாமல் தவித்து இருக்கிறாள் போலும், எதுவுமே கூறாமல் கோபத்தில் என்னிடமும் பேசவில்லை அவள், என்னுடன் இருந்தவர்கள் கூட அவளை பற்றி அவதூறு கூற, உண்மை எதுவென்று தெரியாமல் நானும் அதை விட்டுவிட்டேன்.. என்னிடம் பேசுபவர்களிடம் மட்டும் பேசிக்கொண்டேன்.

அவளது முகப்புத்தகத்தை பார்க்க நேரிடும் போதெல்லாம் அவளிடம் பேசும் ஆவல் எழும்தான், என்னுடன் இருந்தவர்களுக்கு செய்யும் துரோகம் என்று அவளது நட்பை நானும் விட்டேன். மற்றபடி எனக்கும் அவளுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமே இல்லை.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#2
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

நான்கு வருடங்கள் ஓடிவிட்டது , சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தில் ,"நம்முடன் இருந்த யாரையும் எதற்காகவும் இழக்கக்கூடாது ," என்பதை நன்றாக அறிந்துகொண்டேன். (நமக்கு நடக்கும்போது தானே புரியும் .ஹிஹி....அது வேற கதை :tape:) அதன் விளைவாக முன்பு பழகிய நீண்ட நாட்களாக பேசாமல் விட்ட , அனைவரிடம் பேசினேன்.

சிலரை அறிந்தோ அறியாமலோ காயப்படுத்தியிருப்போம், தவறு யார்மீது இருந்தால் என்ன, நட்பு வேண்டும் என்றால் அதெல்லாம் பார்த்துகொண்டு இருக்கமுடியுமா??? அப்படி பேச நேரிடும்போது அனைவரிடமும் முன்புபோல பேசமுடிந்தபோது மிகவும் மகிழ்ச்சி....

அப்போது தோன்றியது," ஸ்ரீ நமக்கு என்ன செய்தாள்??? அவளுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை??? அவளிடம் பேசிப்பார்த்தால் என்ன?? என்னுடன் இருந்த அவளை பற்றி தவறாக கூறியவர்கள் எனக்கே இப்போது துரோகம் இழைக்கும்போது அவர்களுக்காக இத்தனை நாள் ஏன் நான் ஸ்ரீயை விட்டேன்??? "இது என் மனசாட்சி

இன்னொரு மனம் ," ஓஹோ இப்போ இவங்களோட பேச இல்லைன்னு அவகிட்ட பேசப்போறியா??அவங்க இல்லன்னா இவளா??? " என கேட்டது...

உண்மையில் குழம்பித்தான் போனேன்...

யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது, பின்பு வழக்கம்போல என் கணவரிடம் கொட்டிவிட்டேன், அவர் கூறியது ," பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணத்தான் யோசிக்கணும். பேசணும்னு முடிவெடுத்துட்டா உடனே பேசிடணும் , இவ்ளோ நாள் மத்தவங்களுக்காக பேசாம நீ இருந்ததே தப்பு,நாலு வருஷத்துக்கு முன்னால உன் முதிர்ச்சி அப்படித்தான் இருக்கும்... அவங்க இல்லைனா இவள்ன்னு ஏன் யோசிக்கிற??? பேசிப்பாரு உண்மையான அன்பு இருந்தால் , பேசமுடியும், இல்லைனா மனசார சாரி கேட்டுடு உனக்கு ப்ரீயா இருக்கும் " என்று சொன்னார்.

எவ்ளோ உண்மை இல்ல??? யோசிக்கவே இல்லை உடனடியாக அவளுக்கு facebook message பண்ண , அது அவளுடைய others folder இல் சென்று விழுந்தது, சுத்தம். அடுத்து google plus பார்க்க,அதிலும் அனுப்ப முடியவில்லை.

இறுதியாக அவளிடம் இருந்த வந்த பழைய மின்னஞ்சல்களை புரட்டி அவளுக்கு அனுப்பினேன்...


Me:
Hiiii srree... h r u
Sree: Hi sujiiiiiiiiiiiii I'm good, hru

Me: Very fine dear miss u so much ma
sree: Me too sujiiiiiiii. I dint expect dat you'll message me... Missed you alot.. Love you

 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#3
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

இதுக்கு மேல என்ன வேணும்???? உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே அது நம்மை விட்டு எத்தனை ஆண்டுகள் கழித்து என்றாலும் அப்படியே கிடைக்கும்.

உள்ளே ஒன்று வைத்து நம்மிடம் அன்பாக பொய்யாக இருந்தால் அது எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் ஒரு நாள் கடவுள் காண்பித்து விடுவார்.
 

femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#4
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

Sabba mudiala... Itha kochu pattalathoda attooliyangal..

Ithu ellam oru sandai... Ithuku annavayum torture panniruka...

Enaku ennathu ellamo tongue slipping...

Unmai naan apurama thaniya kavanichikiren..

Happy cuty naughty yetti dreams...
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#5
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

Sabba mudiala... Itha kochu pattalathoda attooliyangal..

Ithu ellam oru sandai... Ithuku annavayum torture panniruka...

Enaku ennathu ellamo tongue slipping...

Unmai naan apurama thaniya kavanichikiren..

Happy cuty naughty yetti dreams...
heheheheheh kavani kavani
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

உண்மைதான் சுஜி . உண்மையான அன்பு என்றும் தோற்காது .

அந்த ஸ்ரீயோட இப்போதைய சந்தோஷத்தை நினைச்சுப் பாருங்க .

ஆனா கடைசிவரை , அவங்க எதுக்கு மனக்கஷ்டப்பட்டாங்க , அதை நீங்க /உங்களால் தீர்த்து வைக்க முடிஞ்சுதா , இதெல்லாம் தெரியாமையே உங்களோட இந்தக் கதையை முடிச்சுட்டீங்களே ...ஒரு நல்ல கதை பாதில முடிஞ்ச ஒரு ஃபீல் வருது எனக்கு .:confused1:

ஒருவேளை பொதுவில் சொல்லக்கூடிய விஷயமாக இருந்தால் அதை நீங்க தீர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முறையை இங்கே சொன்னா , அதே போல பாதிக்கப்பட்டவங்களுக்கு உபயோகமா இருக்கலாமே :idea:
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#8
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

இதுக்கு மேல என்ன வேணும்???? உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே அது நம்மை விட்டு எத்தனை ஆண்டுகள் கழித்து என்றாலும் அப்படியே கிடைக்கும்.

உள்ளே ஒன்று வைத்து நம்மிடம் அன்பாக பொய்யாக இருந்தால் அது எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் ஒரு நாள் கடவுள் காண்பித்து விடுவார்.
True Sujji..

ini avangalai tight aa pidichu vachukkonga. GBU :)
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#9
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

Nice sharing, Suji.
Unmaiyaana natpu (anpu) endrume azhiyaathu.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
Re: உண்மையான அன்பு இருந்தால் ...

Very nice! thank you!
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.