Tuberculosis

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
காசநோய்

aatb.jpeg

காசநோய் இந்தியாவில் அதிகம். வறுமையும் சுகாதாரக் குறைவும் முக்கியக் காரணமாகும்.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் என்ற கிருமி தொற்றினால் காசநோய் ஏற்படுகிறது.
பொதுவாக எல்லோருடைய உடம்பிலும் காச நோய் நுண்கிருமி இருக்கும், பாக்டீரியாவின் அளவு அதிகமாகும்போது காசநோய் ஏற்படும்

tb day.jpeg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
இது மைக்கோ பக்ரீரியம் (Mycobacterium tuberculosis ) எனப்படும் ஒருவகைப் பக்ரீரியாவினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது ஒரு பரம்பரை நோயல்ல. Tuberculosis (TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது. சுவாசத்தின் மூலம் தொற்றும். இந் நோய்க்கிருமிகள் பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது

1tb.jpeg

உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள். காசநோய்க்கிருமி தொற்றுக்குள்ளான அனைவருக்குமே காசநோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#3
காசநோயின் அறிகுறிகள்
▪ தொடர்ச்சியாக மூன்று வாரங்களிற்கு மேலான இருமல்.
▪ சளியுடன் இரத்தம் வெளியேறல்
▪ நிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற நோயறிகுறிகளும் காணப்படும்.

TB1.jpg


▪ இரவு நேரக் காய்ச்சல்.
▪ உடல் நிறை குறைவடைதல்
▪ உணவில் விரும்பமின்மை
▪ இரவு நேரத்தில் வியர்த்தல்
▪ களைப்பாகக் காணப்படல்
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
காசநோய்க் கிருமி
பக்ரீரியா
(Mycobacterium tuberculosis) கலமென்சவ்வில் 200இற்கு மேற்பட்ட பிறபொருள் பதார்த்தங்களைக்கொண்டுள்ளது. அதனாலேயே இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் கடினமாக உள்ளது.

mycobacter.jpeg

நுணுக்குக் காட்டியில் கிருமிகள் மெல்லிய நீண்ட வளைவாகத் தனித்தனியே அல்லது கூட்டமாகக்காணப்படும். பக்ரீறியாவின் கலச்சுவர் அதிக கொழுப்பைக்கொண்டது.
நுணுக்கு காட்டி மூலம் பார்க்கையில் செந்நிறமாக இருக்கும்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
காசநோய் – வரலாறு
காசநோய்க்கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழுகின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. சுமார் 10000 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய நாட்டு மனித என்புக்கூடுகளில் இக்கிருமி அவதானிக்கப்பட்டுள்ளது. எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காசநோய்க்கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது.

koch.jpeg

இன் நோயை ஏற்படுத்தும் நோய்க்கிரிமியை றொபேட்கொச்(Robert Koch) என்பவரால் 1882ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் நுணுக்குக்காட்டியால் கண்டறியப்பட்டது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
உலக நாடுகளில் காசநோய்த் தாக்கம்
உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் தாக்கபட்டுள்ளனர் இதில் 10மில்லியன் மக்களிற்குமேல் சளியில் கிருமி காணப்படுகின்றது. உலகில் காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்தில் வசிக்கின்றனர். Aids நோயாளிகளுக்கு காசநோய் பரம்பல் அதிகம் உள்ளதால் ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் காசநோய் பரவி வருகின்றது.

epidmtb.jpeg



தென்கிழக்கு ஆசியாவில் காசநோய்த்தாக்கம் வங்களாதேசம், இந்தியா, பூட்டான், வடகொரியா, இந்தேனேசியா, மாலைதீவு, மியாமார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளிலுள்ளது. யுத்தத்தினால் சீர்குலைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் mdr-tb பரம்பல் அதிகம் உள்ளது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
காசநோய் உள்ளதா என்பதை அறிவது எப்படி?
3 கிழமைகளுக்கு மேல் தொடர்ச்சியான இருமல்
மாலை நேரக் காய்ச்சல்
உடல் நிறையிழப்பு
இருமும் போது இரத்தம் வெளியேறல்
உணவில் விருப்பமின்மை
உறவினர் ஒருவருக்கு காசநோய் இருந்தால்
நண்பர்களுக்கு காசநோய் இருந்தால்
சுவாசிப்பதில் சிரமம்
இரவில் வியர்த்தல்
நெஞ்சு நோவு
உடல் களைப்பு
சலரோக நோய் இருத்தல்
மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையில் சளிப் பரிசோதனையை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
காசநோய் பரவும் விதம்
▪ காசநோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது இருப்பதனால்,
▪ இருமும் போதும்
▪ தும்மும் போதும்
▪ கதைக்கும் போதும்
▪ எச்சில், சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன.

tbtransmsn.jpeg

ஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது. எனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9
காசநோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள்
▪ காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்
▪ எயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.
▪ புகைப்பிடிப்பவர்கள்.
▪ போசாக்கு குறைபாடு உடையோர்.
▪ சனநெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள்.
▪ காற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
▪ மதுபானம், போதைப்பொருள் பாவிப்போர்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10
காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்
1.சளிப் பரிசோதனை

tbsputum test.jpeg
யாராவது ஒருவர் 3 கிழமைகளுக்கு மேல் இருமல் உடையவராயின் சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும். நோயாளி வந்தவுடன் ஒரு மாதிரியும் அடுத்தநாள் அதிகாலை மறு மாதிரியும் வைத்தியசாலையில் மறு மாதிரியும் சளிப்பரிசோதனை செய்யப்படும்.

சளியில் 105/ml என கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டு பிடிக்க முடியும்.

2. ஏனைய முறைகள்

tbljmedium.jpeg
a).வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை அவதானித்தல்.


tbtest1.jpeg




tbtestpositive.jpeg

b). தோற் சோதனை (மாண்டு பரிசோதனை)


tbxray.jpeg
3. CXR நெஞ்சு எக்ஸ்கதிர்படம்


4. இரத்தப்பரிசோதனை
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.