Tulsi for breathing problems - சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்&#2965

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
[h=1]சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்கும்.[/h]

ஐயம் வயிறுளைச்சல் அத்திசுரம் தாகமும்போம்
பையசர மாந்தம் பறங்குங்கான் மெய்யாக
வாயின் அரோசகம்போம் வன்காரஞ்சூடுள்ள
தூயதுளசிதனைச் சொல்.


ஐயம் என்றால் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று, உளைச்சல், சுரம், நீர் வேட்கை, மாந்தம், நாவின் சுவையின்மை இவை அனைத்தையும் துளசி போக்கிவிடும் என்று இப்பாடல் விளக்குகிறது.

துளகி குணமாக்கும் நோய்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் துளசி, கபம் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் பெரும்பங்கு துளசிக்கு உண்டு.

துளசியின் இத்தனை மருத்துவகுணங்களும் கபம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்று தற்போதைய ஆய்வாளர்கள் ஆய்வில் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூக்கில் நீர் வழிதல், தலைவலி, மூக்கடைப்பு, மூச்சுக்குழல் அழர்ஜி, நெஞ்சுச்சளி, மூச்சிவிட சிரமப்படுதல் போன்ற பல சுவாசம் சம்பந்தப்பட்ட கப நோய்களை துளசி கு ணமாக்கும் சக்தி கொண்டது.

பத்து கிராம் அளவு துளசி இலையை எடுத்து கசக்கி சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் சளி தொல்லை எளிதில் தீர்ந்துவிடும்.


ஐந்து கிராம் துளசி இலையை இரண்டு மிளகு சேர்த்த அரைத்து காலைமாலை வேளைகளில் வெந்நீரில் குடித்து வந்தால் காய்ச்சலுடன் கூறிய சளி குறையும். சிறிது துளசி இலைகளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அந்த சாறை சிறிது தேன் சேர்த்து உட்கொண்டால் ஆஸ்துமா, நெஞ்சுசளி, சளியுடன்கூடிய சுரம் குணமாகும். தொண்டை கரகரப்பு, அடைப்பு, போன்ற நேரங்களில் சிறிது துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த பின் அந்த நீரை தொண்டையில் படும்படி கொப்பளித்தால் உடனே குணமாகும்.
 

rajisugu

Commander's of Penmai
Joined
Oct 11, 2011
Messages
2,418
Likes
601
Location
chennai
#2
re: Tulsi for breathing problems - சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்&#

நல்ல பகிர்வுக்கு நன்றி தோழி .
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
re: Tulsi for breathing problems - சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்&#

நல்ல பகிர்வுக்கு நன்றி தோழி .
நன்றி தோழி ....
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#4
re: Tulsi for breathing problems - சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்&#

Thanks for the information
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
re: Tulsi for breathing problems - சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்&#

good sharing friend.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.