Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#1
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது.
சைவ உணவுகளிலேயே புரோட்டீன் அதிகளவில் நிறைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இப்போது பருப்புக்களின் கைகளையும் அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், போலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.







பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.




பச்சை பயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.







கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் போலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.







மைசூர் பருப்பு

மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும்.

மேலும் ப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.







சுண்டல்

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், போலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.









கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் போலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.







உளுத்தம் பருப்பு

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.

மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.






(பிரெண்ட்ஸ்...இதை எங்க போடணும் என்பது எனக்கு சரியா தெரியலை...ஒரு குத்து மதிப்பா இங்க போட்டு இருக்கேன்....சரியான இடம் என்றால் ஓகே...இல்லனா இதுக்கு பொறுப்பானவங்க இடத்தை மாற்றிவிடுங்க....

முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்...இது இணையத்தில் நான் சுட்ட தகவல்...)
 
Last edited by a moderator:

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

தனியா அருமையான தகவல் ...சுட்டலும் நல்ல விஷயத்தை
சுடலாம்னு யாரோ சொல்லிருகங்க பா..:whistle:
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,988
Location
Atlanta, U.S
#3
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்....
நன்றி நிது...
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#4
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

Nitha , Thanks for sharing this info .......:thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

பருப்பின் விவரங்களுக்கு மிக்க நன்றி நிதா
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

Hi Nitha, wonderful information you have shared! thank you!
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#7
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

நிதா தகவலுக்கு நன்றி,சுட்டாலும் நல்ல பழம்தான்.
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#8
re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்க

நிதா,

சுட்டாலும் சூப்பரா தானே சுட்டிருக்கீங்க :thumbsup
தகவலுக்கு மிக்க நன்றி :)
 

danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#9
Re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்&#2

தனியா அருமையான தகவல் ...சுட்டலும் நல்ல விஷயத்தை
சுடலாம்னு யாரோ சொல்லிருகங்க பா..:whistle:
அப்போ இனி அடிக்கடி சுட்டுட வேண்டியதுதான்.....
 

danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#10
Re: Types of Dals & Their Health Benefits - பருப்பில் அப்படி என்னதான் இருக்&#2

தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்....
நன்றி நிது...
நீ தெரிஞ்சு என்ன பண்ண போற...அண்ணாக்கு காட்டு...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.