Ulundhu products for Teenage girls -பூப்பெய்தும் பெண்குழந்தைகள் உள்ள &

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#1
[h=1]பெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக்க....![/h]


[h=1][/h]பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான

ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல

குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை தாக்குப்

பிடிப்பதற்கான பலத்தைக் கொடுக்குது. இந்த சமயத்துல

முழு உளுந்துல செஞ்ச பலகாரங்களை நிறைய சாப்பிடக்

கொடுக்கணும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக்

காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி

செஞ்சு கொடுப்பாங்க! இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற

அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!

சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா?

ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி

எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு,

வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும்.

அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும்.

ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா

அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு

எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே

‘எந்திரத்துல’ பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).


அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி

கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும்.

இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு,

பாகு காய்ச்சிக்கணும்.

களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய்

ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும்.

கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு

சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா,

அவ்வளவு ருசியா இருக்கும்.


நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த

களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல

வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.


அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப்

போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம்.

பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது

வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால

பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே

இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S
#2
Re: பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்காக!!

பெண்களுக்கு தேவைப்படும் பகிர்வு.... நன்றி மலர்...
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#3
Re: பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்காக!!

பெண்களுக்கு தேவைப்படும் பகிர்வு.... நன்றி மலர்...
you are welcome thenu..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
Re: Ulundhu products for Teenage girls -பூப்பெய்தும் பெண்குழந்தைகள் உள்&#299

அவசியம் தரப்பட வேண்டிய உணவு இது . பகிர்வுக்கு நன்றி மலர் .
 

bhuvijai

Friends's of Penmai
Joined
Nov 24, 2013
Messages
124
Likes
372
Location
Arakkonam
#5
Re: Ulundhu products for Teenage girls -பூப்பெய்தும் பெண்குழந்தைகள் உள்&#299

Udambuku romba nalladhu thanks for sharing
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
Re: Ulundhu products for Teenage girls -பூப்பெய்தும் பெண்குழந்தைகள் உள்&#299

lovely sharing. thank you malar mam
 

jayanthi.s

Citizen's of Penmai
Joined
May 4, 2011
Messages
702
Likes
634
Location
TN
#8
Re: Ulundhu products for Teenage girls -பூப்பெய்தும் பெண்குழந்தைகள் உள்&#299

Thaks Malar, if missed can it be given at delivary time?
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#9
Re: Ulundhu products for Teenage girls -பூப்பெய்தும் பெண்குழந்தைகள் உள்&

அவசியம் தரப்பட வேண்டிய உணவு இது . பகிர்வுக்கு நன்றி மலர் .
Thank u sis
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.