Unave marundhu - உணவே மருந்து

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
ஆரோக்கியமாக வாழ வழிகள்

* நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!


* தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

* மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

* ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
 
Last edited by a moderator:

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
* பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

* சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

* சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

* வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
 
Last edited by a moderator:

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

* சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

* சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

* பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

* அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
* தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

* பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

* கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சரளா
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#9
[h=1]சுடச் சுட காபி எப்போது குடிக்கலாம்?[/h]

காபி குடிப்பது நல்லதா கெட்டதா என்பது பற்றி அநேக வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கிறோம். இந்த விவாதம் ஒரு புறம் இருந்தாலும் சோம்பல் போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலி போக்கவும் என விதவிதமான காரணங்களுக்காக காபியைக் குடித்துக்கொண்டுதானிருக்கிறோம்.

அவ்வளவு எளிதாக காபியைத் துறக்க இயலாதவர்கள்தான் பெரும்பாலானோர். காபி குடிப்பது என்பது ஆரோக்கிய சூழல் என்பதைத் தாண்டி அரட்டை போல் அது ஒரு வழக்கமாகிவிட்டது. அதிலிருந்து எல்லோராலும் எளிதில் விடுபட முடியாது என்பதே யதார்த்தம்.அதெல்லாம் சரி, காபி குடிப்பது நமது உரிமைதான். ஆனால் கண்ட கண்ட நேரத்தில் காபி குடிப்பதைவிட அதற்கென இருக்கும் சில குறிப்பிட்ட நேரம் மட்டும் காபி குடிப்பதைப் பற்றி யோசிக்கலாம் அல்லவா? அது என்ன காபி குடிப்பதற்கு உகந்த நேரம்?

காபி குடிப்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மில்லர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார். அவர் அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பெதெஸ்டா என்னுமிடத்தில் அமைந்திருக்கும் உடல்நல அறிவியல் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றைச் சேர்ந்தவர்.

அவர் நடத்திய ஆய்விலிருந்து காலையில் எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை காபி குடிப்பது நல்லதல்ல என்பது தெரியவந்துள்ளது. அது ஏன் அந்த நேரத்தில் காபி குடிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தையும் அவர் சொல்கிறார். நமது அன்றாட நடவடிக்கைகளுக்காகஉடம்பில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கார்ட்டிசால்.
இந்த ஹார்மோன்தான் நமது சுறுசுறுப்புக்கும் விழிப்புணர்வுக்கும் காரணம்.
இது காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை தான் நன்கு சுரக்குமாம். ஆக அந்த நேரத்தில் நாம் சுறுசுறுப்பு பெறுவதற்காக காபி குடிப்பது வீணான செயல். மேலும் அந்த நேரத்தில் நாம் காபி குடித்தால் அது இந்த ஹார்மோன் செயல்பாட்டிலும் சிக்கலை ஏற்படுத்தும்.
கார்ட்டிசால் அதிகமாகச் சுரப்பது நல்லதல்ல. அது சுரக்கும் நேரத்தில் காபி குடித்தால் காபியில் உள்ள கேஃபின் வேதிப்பொருள் கார்ட்டிசாலின் சுரப்பு வீதத்தை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே அந்த நேரத்தில் காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.மேலும் கார்ட்டிசால் சுரப்பு மிகக் குறைவாக இருக்கும், காலை 9.30-11.30 மணிக்குள்ளும், மாலை 1.30-5.00 மணிக்குள்ளும் காபி அருந்துவதால் சிக்கல் இல்லை என்று மில்லர் கூறியுள்ளார்.அறிவியல்பூர்வமான ஆய்வு செய்து காபி அருந்தும் நேரத்தை அவர் சொல்லிவிட்டார். அதைக் கடைபிடிப்பதும் புறக்கணிப்பதும் நமது பாடு.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.