Unusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
பத்துகர விநாயகர்




கர்நாடக மாநிலத்தில் உள்ளது கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயம். இந்தக் கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் பத்துக் கரங்களுடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் இருக்கிறார். மூஞ்சுறு வாகனத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தரும் இவரை வழிபட்டால், இன்னல்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர் களின் நம்பிக்கை.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
புல்லாங்குழல் இசை


நாகர்கோவில் அருகே உள்ளது பாண்டிப்புரம் என்ற இடம். இங்கு அழகிய நம்பி கண்ணன் என்ற திருக் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நடை பெறும் பூஜையின் போது, நாதஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகள் இசைக்கப்படுவதில்லை. மாறாக, கண்ணனுக்குப் பிடித்த, புல்லாங்குழல் மட்டும் இசைக்கப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
சந்திரனை பிறையாக சூடிய இறைவன்



ரு முறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். சந்திரன் தனது சாபம் நீங்க முசிறியில் அருள்பாலிக்கும் சந்திர மவுலீஸ் வரரை ஆராதித்து, தனது சாபம் நீங்கப் பெற்றார். சந்திரனுக்கு சாப விமோசனம் தந்ததால் இத்தல இறைவன் ‘சந்திர மவுலீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அத்துடன் மூன்றாம் பிறை சந்திரனை தனது தலையிலும் சூடியுள்ளார் இத்தல இறைவன்.


சந்திரனை தலையில் சூடியபடி அருள் பாலிக்கும் சிவபெருமான் மூலவராய் கருணை பொழியும் இந்த ஆலயம் முசிறியில் உள்ளது. இறைவனின் திருநாமம் சந்திர மவுலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பூரவல்லி.


ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட நடைபாதை, அடுத்து வாத்திய மண்டபம், கொலு மண்டபம், உற்சவ மண்டபம் அடுத்து மகா மண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் ஒரு நீண்ட சுரங்க பாதை இருந்து, பின்னர் அதை அடைத்து விட்டதாகவும் அர்ச்சகர் கூறுகிறார். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகர்களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க, உள்ளே கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.


ஆலய திருச்சுற்றில் நால்வர், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, விசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.


வடக்குப் பிரகாரத்தில் இறைவியின் ஆலயம் தனியாக உள்ளது. அன்னை கற்பூரவல்லி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அன்னை மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் கீழ் திசை நோக்கி காட்சி தருகிறாள்.


மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த நட்சத்திரக்காரர்கள் பலன் பெறவும், பரிகாரம் பெறவும் அன்னையை வணங்க வேண்டிய முறை உள்ளது. தாமரைப் பூவில் அகல் வைத்து தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பின், அந்த அகல் விளக்கை அன்னை சன்னிதியில் வைத்து வாசனை மலர்களால் அன்னையை அர்ச்சனை செய்து வணங்க, நல்ல பரிகாரம் பெற முடியும் என்கின்றனர் பக்தர்கள். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.


வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடி பூரம், ஆவணி மூலம், சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா, தை பூசம், மாசி மகம் போன்ற நாட்களில் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.


ஐப்பசி பவுர்ணமியில் ஏராளமான பக்தர்கள் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண இங்கே வருகை தருகின்றனர்.


800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இத்தல இறைவன் - இறைவியை ஆராதிப்பதால் கடன் நிவாரணம் பெறலாம் எனவும், புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், தொழிலில் அபிவிருத்தி அடையலாம் எனவும் பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள்.


திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முசிறி என்ற இந்த தலம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
சங்கீத ஞானம் அருளும் மகான்



மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விதங்களிலும் சிறப்பு பெற்ற தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆகும். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கோவில்களில் மும்மூர்த்தி தலமாக இருப்பதோடு, அங்குள்ள காவிரி தீர்த்தம் பிரபலமானது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் நதியின் மத்தியில் அமைந்துள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் ஒரு மகான் தவம் செய்து கொண்டு இருந்தார். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அவரை இழுத்து சென்று விட்டது. வெள்ளப்பெருக்கு அடங்கியதும் மகானை அவரது சீடர்களும், பொது மக்களும் தேடியபோது, அவர் தென்படவில்லை. பல காலம் கழித்து கட்டிடம் கட்ட ஆற்று மணல் எடுக்கப்படும்போது, மண்ணில் புதைந்திருந்த அந்த மகானின் தலைப்பகுதியில் மண்வெட்டி பட்டு, ஏற்பட்ட காயம் காரணமாக ரத்தம் வந்தது. மணல் எடுக்க வந்தவர்கள் பயந்துபோய், ஊர் பெரியவர்களைகூட்டி வந்து அந்த மகானை சுற்றிலும் உள்ள மணலை அகற்றி, அவரது உடலை சுத்தம் செய்தவுடன், யாரிடமும் எதுவும் பேசாமல் அந்த மகான் அமைதியாக நடந்து சென்று விட்டார்.


அந்த மகான் சதாசிவ பிரம்மம் ஆவார். கரூர் மாவட்ட தலைநகர் கரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் காவிரிக்கரை அருகே உள்ள நெரூர் என்னும் ஊரில் அவரது அதிஸ்டானம் எனப்படும் ஜீவசமாதி அமைந்துள்ளது. அவரது குருவான பரமசிவேந்திராள் என்பவர், சிவராமகிருஷ்ணன் என்ற அவரது இயற்பெயரை மாற்றி சதாசிவம் என்னும் பெயரை சூட்டி, சந்நியாசம் கொடுத்து அனுப்பினார். குருவின் உபதேசம் காரணமாக யாரிடமும் அவர் அதிகம் பேசாமல் இருந்தார். அவர் நெரூரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளார்.


ஒரு முறை புதுக்கோட்டை பகுதியில் சதாசிவ பிரம்மம் அறுவடை முடிந்த நெல் வயல்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தார். வயலில் ஆட்கள் வைக்கோல் போரை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த வைக்கோல் குவியல்களுக்கு இடையில் அவர் விழுந்ததை கவனிக்காமல் வைக்கோல் போரை அவர் மீதே பெரிதாக அடுக்கி விட்டனர். கிட்டத்தட்ட, ஒரு வருடம் கழித்து பசுக் களுக்கு தீவனமாக வைக்க எடுக்கப்பட்ட வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் சாதாரணமாக எழுந்து நடந்து செல்ல, மக்கள் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.


இந்த விஷயம் அப்போதைய ராஜாங்க மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம், மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானிடம் சென்றது. அவர் சதாசிவ பிரம்மம் இருக்குமிடம் வந்து அவருடன் பேச முயன்றார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை. அவர் தொடர்ந்து பேச முயன்று கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழிந்த பின்னர், மன்னரின் பொறுமையை அறிந்த சதாசிவ பிரம்மம் அவருக்கு உரிய மந்திரத்தை மணலிலே எழுதி காட்டினார். அதை மனப்பாடம் செய்த மன்னர், அந்த மணலை தன் அங்க வஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் வைத்து பூஜை செய்தார். அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் செய்யப்படுவதாக தகவல் உண்டு.


கரூரில் உள்ள தான்தோன்றிமலை கோவிலில் உள்ள சுயம்பு மூர்த்தமான கல்யாண வெங்கடரமண சுவாமி சன்னிதிக்குள், ஜன வசிய எந்திரத்தை சதாசிவ பிரம்மம் தனது கைகளால் வரைந்து, பூஜை செய்து அங்கு அமைத்து வைத்தார். திருப்பதி செல்ல ஆசைப்பட்டும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக செல்ல இயலாத பக்தர்கள், கரூர் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால், திருப்பதி சென்று வந்ததற்கு சமமான பலன்கள் கிடைப்பதாக ஐதீகம்.


ஜீவசமாதி அடையும் காலத்தை உணர்ந்த சதாசிவ பிரம்மம், தனது சீடர்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, மைசூர் மகாராஜாக்களை அழைத்தார். இப்போது அவர் ஜீவ சமாதி இருக்கும் இடத்தில், குகை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, ஜீவசமாதி குகை அமைக்கப்பட்டது. சீடர்களை அழைத்து, குகைக்குள் அவர் இறங்கிய பின்னர் விபூதி, உப்பு, மஞ்சள், செங்கற்பொடி ஆகிய வற்றை போட்டு குகையை மூடிவிடச்சொன்னார். அவ்வாறு மூடிய பின்னர் 7 நாட்கள் கழிந்த பிறகு, அங்கே ஒரு வில்வ மரம் முளைக்கும் என்றும், 11 நாட்கள் கழித்து காசியில் இருந்து வரக்கூடிய வெண்மையான சிவலிங்கத்தை, ஜீவசமாதிக்கு முன்புறமாக 12 அடிகள் தள்ளி கிழக்கு பக்கத்தில் கோவில் அமைத்து விடவும் தெரிவித்து விட்டு, குகைக்குள் சென்று அமர்ந்து ஜீவ சமாதி அடைந்து விட்டார்.


அதன்படி 8-ம் நாளில் வில்வம் துளிர்விட, 12-ம் நாள் காசியிலிருந்து சாது ஒருவர் மூலம் சிவலிங்கம் வந்து சேர்ந்தது. சதாசிவ பிரம்மம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில் மானா மதுரையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள சிவன் கோவில் பின்புறம் சூட்சும உடல் வடிவத்திலும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் காரண உடல் வடிவத்திலும் ஐக்கியமானதாக வரலாறு. நெரூரில் உள்ள அவரது ஜீவசமாதி கிட்டத்தட்ட 220 ஆண்டுகளாக அமைதியான முறையில் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளித்து வருகிறது.


மிகச்சிறந்த சங்கீத ஞானம் கொண்ட அவர் இயற்றிய பல கீர்த்தனங்கள் தற்போது சங்கீத உலகில் பிரபலமாக உள்ளன. ‘மானச சஞ்சரரே’, ‘பிபரே ராமரசம்’, ‘பஜரே ரகு வீரம்’ என்ற கீர்த்தனைகள் பலருக்கும் அறிமுகமானவை என்பதோடு, சங்கீத ஞானம் பெற விரும்புபவர்கள் அவரது ஜீவ சமாதியை நாடி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,205
Likes
3,170
Location
India
[h=2]ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் உப்பு லிங்கம்[/h]



ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.


அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.


‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,205
Likes
3,170
Location
India
[h=2]முருகன் வித்தியாசமான வடிவத்தில் காட்சி தரும் ஸ்தலங்கள்[/h]
திருவக்கரை முருகன் :


திருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம்.


திருவிடைக்கழி குமரன் :


தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம். இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. தாயாருக்கு அருகில் முருகப்பெருமானின் ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ என்ற இறை வடிவத்தை வைத்துள்ளனர். இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.


தங்கக் குடங்கள் :


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்ெசந்தூர். இந்தக் கோவிலின் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ‘ஓம்’ என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்திருப்பதை அறிய முடியும். இந்த ஆலயத்தில் தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது.


இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருக்கும். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.


கல்யாண முருகர் :


சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில் சென்னையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிறுவாபுரி என்ற திருத்தலம். இங்கு சிறுவாபுரி முருகன் அருள்பாலித்து வருகிறார். இத்தல இறைவனின் பெயர் ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்பதாகும். இவர் கல்யாண முருகராக இருப்பது விசேஷமான ஒன்றாகும். இதுவும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப் பெற்ற தலம் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை வழிபாடு செய்தால், சொந்த வீடு கனவு நனவாகும் என்கிறார்கள்.


ஆண்டார்குப்பம் முருகன் :


ஆண்டார்குப்பம் என்ற இடத்தில் அதிகாரத் தோரணை கொண்ட வடிவத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு மட்டுமின்றி, அவரது படைப்புத் தொழிலையும் எடுத்துக் கொண்டார். அதிகாரத்தைக் கையில் எடுத்த ஆண்டார்குப்பம் முருகன், தம் அடியவர்களுக்கும் அதிகாரம் நிறைந்த பதவிகளை வழங்குவதாக ஐதீகம். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஆனந்த தாண்டவர்!

யிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருத்தலம், ஆனந்த தாண்டவபுரம். ஆனந்த மாமுனிவருக்காக இறைவன் நடனத் திருக்கோலம் காட்டியருளிய ஊர் என்பதால் இப்பெயர்.

இங்கே அருளும் நடராஜப் பெருமான், தம்முடைய ஒரு காலின் கட்டைவிரலை ஊன்றி, மற்றொரு காலை நாசிக்கு நேராக உயரத் தூக்கியவண்ணம் ஆடல் கோலம் காட்டுகிறார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஆன்மிக வழிபாட்டு அரிய தகவல்கள்

1523936547640.png

ஆதி பைரவர் தலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.

தனியாக முருகப்பெருமான்

கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத் தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

நெற்றிக்கண் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங் கலம் என்ற ஊர். இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

வடுவுடன் சிவபெருமான்

குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.

வடுவுடன் சிவபெருமான்

குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.

தாம்புக்கயிறு துலாபாரம்

கேரள மாநிலம் திருச்சூர்- எர்ணாகுளம் சாலையில் உள்ளது திருக்கூர் என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள், தங்களின் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்ப தாக வேண்டிக்கொள்கிறார்கள். நோய் நீங்கியதும் தாம்புக் கயிறு துலாபாரம் கொடுக்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறு கோவில் மண்டபத்தில் கட்டி தொங்கவிடப்படுகின்றன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஒரு பீடம்.. இரண்டு லிங்கம்..
1525234347114.png

யிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூரில் பரசுராமருக்கு அருளிய பரசு ராமலிங்கம் மற்றும் ஜமத்கனி முனிவருக்கு காட்சி தந்த ஜமத்கனீஸ்வரர் ஆகிய இருவரும் ஒரே ஆவுடையார் (பீடம்) மீது இரண்டு பாணங்களாக காட்சி தருகின்றனர். ஒரே பீடத்தில் இரண்டு லிங்கம் இருப்பது காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாக உள்ளது.

நெற்றிக்கண்ணுடன் அம்பாள்

பெரம்பலூரை அடுத்த தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் அம்பாளுக்கு நெற்றியில் ஒரு கண் உள்ளது. இந்த அம்மனை, ஜன்னல் வழியாக தரிசனம் செய்யலாம்.

பஞ்சமுக பைரவர்

திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாத்தய்யங்கார்பேட்டை. இந்த ஊரில் பஞ்சமுக பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் கைநழுவிப்போன சொத்துகள் கூட வந்து சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,205
Likes
3,170
Location
India
வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் வைகாசி விசாக நன்னாளில், அவரின் மகிமையைச் சொல்லும் சில திருத்தலங்களின் சிறப்புகளைத் தெரிந்துகொள்வோமா?

* கையில் தாமரை ஏந்திய முருகனை ஆவூர் தலத்தில் காணலாம். கனககிரி திருத்தலத்தில் முருகப் பெருமான், கிளி ஏந்திய நிலையில் தரிசனம் தருகிறார். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் இருக்கும் வேலவனை தரிசிக்கலாம்.

* கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில் வேலாயுதமும், தேவியர் இருவரும் இன்றி தனித்து அருளும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

* வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.

* திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடை யான்பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய தலங்களில் வில்லுடன் காட்சி தருகிறார் முருகப் பெருமான். வில்- அம்பு ஏந்தி, வேட்டைக்குச் செல்வது போல் முருகன் காட்சி தரும் தலம் திருவையாறு.



* செம்பனார்கோவிலில், ஜடா மகுடத்துடன்- தவக் கோலத்தில் அருள்புரிகிறார் முருகப்பெருமான். புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணூர் எனும் தலத்தில், ஜப மாலையுடனும், சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.

* திருச்சி- உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவ நாதர் கோயிலில், தனிச் சந்நிதி கொண்டிருக்கும் முருகப்பெருமான், ஆவுடையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

* குடந்தையில் உள்ள வியாழ சோமநாதர் ஆலயத் தில்... காலில் பாதரட்சையுடன் காட்சி தருகிறார் கந்தப் பெருமான்.

* நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள வேளிமலை குமாரகோவிலில், வள்ளிதேவியுடன் மட்டுமே காட்சி தருகிறார் முருகப் பெருமான்; அருகில் தெய்வானை இல்லை. முருகனுக்கும் வள்ளிக்கும் இடையே காதல்வேள்வி நடந்த இடம் என்பதால் இவ்வூருக்கு வேள்வி மலை என்றும் பெயர் உண்டு
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.