Unusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
மிட்டாய் அபிஷேகம்!தி
ருச்சியில் இருந்து பழநி செல்லும் வழியில் திண்டுக்கல்லை அடுத்துள்ளது ஒட்டன்சத்திரம். இங்கே கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீகுழந்தை வேலப்பர். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கு நடைபெறும் மிட்டாய் அபிஷேகம் விசேஷமானது. அபிஷேகத்துக்குப் பிறகு, பக்தர்களுக்கு மிட்டாயை பிரசாதமாக தருவார்கள்.

பள்ளி- கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், புதிதாக பள்ளி- கல்லூரிகளில் சேருபவர்கள், நேர்முகத் தேர்வில் தேர்வானவர்கள் இங்குள்ள ஸ்வாமிக்கு மிட்டாயை நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றிக்கடனாகவும், வளமான எதிர்காலத்துக்காகவும் இப்படியரு பிரார்த்தனையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
பலவித முருகன்

கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடு மலைப்பேட்டை சாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில் பன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும் போர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

சென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில் இருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர். இங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று, முருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

திருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி மலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார் கந்தக் கடவுள்.

திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் திருத்தலம். இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி மற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே தோற்றத்தில் அருள்கிறார்.

பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும். ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது குமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும். இந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
மழலை வரமருளும் படிப்பாயசம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது ஆயக்குடி. இங்கே கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு விசேஷ அர்ச்சனை- ஆராதனைகள் செய்து பழப் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வேண்டுதல் விரைவில் பலிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், குழந்தை வரம் அருளும் குமரன் இவர் என்று உள்ளம் சிலிர்க்க கூறுகிறார்கள் பக்தர்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
வினைகள் தீர்க்கும் வில்வ மரம்

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் ரோடு, தனக்கன் குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதிகாமாட்சி அம்மன் திருக்கோயில். இங்குள்ள வில்வ மரம் தெய்வ சாந்நித்தியம் மிகுந்தது என்கிறார்கள். இதைத் தொட்டு வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கும், பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
பலவித முருகன் உருவங்கள்
1527237111287.png
கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடுமலைப்பேட்டை சாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில் பன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும் போர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

சென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில் இருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர். இங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று, முருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

திருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி மலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார் கந்தக் கடவுள்.

திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் திருத்தலம். இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி மற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே தோற்றத்தில் அருள்கிறார்.

பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும். ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது குமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும். இந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
லிங்கத்தில் யானை உருவம்
1527481576966.png

இங்குள்ள ஐராவதீஸ்வரர் கோவிலின் கருவறையில் அருள்பாலிக்கும் லிங்கத் திருமேனியில் யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஐரா வதம் யானை, இத்தல இறைவனை வழிபட்டதால், அந்த யானையின் முகம் சிவலிங்கத்தின் மீது பதிந்திருப்பதாக கூறப்படுகிறது.

முருகருக்கு சிம்ம வாகனம்

சென்னை அருகே உள்ள பொன்னேரி அடுத்துள்ளது ஆண்டார்குப்பம். இங்கு அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, அதிகாரத் தோரணையுடன் இருப்பது போல் காட்சி தருகிறார். இடுப்பில் கை வைத்திருப்பது போல் அருளும் இந்த முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றங்களில் ஒருவராக திகழ்கிறார். பொதுவாக முருகப்பெருமானுக்கு மயில்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் சிம்ம வாகனம் மயிலைத் தாங்கியபடி இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.


மிளகாய் வற்றல் மாலை

சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலம் என்ற இடத்தில் பிரத்யங்கிரா தேவி ஆலயம் இருக்கிறது. இந்த அன்னைக்கு மிளகாய் வற்றல் கொண்டு மாலை தொடுத்து சாத்தி வழி படுகிறார்கள். அத்துடன் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றியும் தங்களது வேண்டுதலைச் சொல்லி தரிசனம் செய்கிறார்கள்.


பெண் வடிவில் கருடன்

சென்னை சவுகார்பேட்டையில் உள்ளது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தில் பெண் வடிவில் கருட பகவான் இருந்து அருள்பாலிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாக பார்க்கப்படுகிறது.


மூன்று முக தேவி

ஹரித்துவாரில் உள்ள பிர்வபர்வதத்தில் மானசாதேவி கோவில் அமைந்துள்ளது. நினைத்ததை நடத்தித் தருபவள் இந்த அன்னை. பிர்வபர்வதத்தின் உச்சியிலிருந்து ஹரித்துவாரின் அழகைப் பார்த்து ரசிக்கலாம். மானசாதேவி ஒரு வடிவமாக மூன்று முகங்களுடன் காட்சியளிக்கிறார். பார்வதி, சரஸ்வதி, லட்சுமி என மூன்று முகத்தோற்றம் இந்த அன்னைக்கு. இங்கே வரும் பக்தர்களுக்கு, பொட்டு வைத்து, முதுகில் தட்டி ஆசி வழங்குகிறார் அர்ச்சகர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
மூன்று முழமும் முப்பது முழமும்!


புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாயில் என்ற திருத்தலத்தில் உள்ள நந்தியும் அங்கு அருள்பாலிக்கும் மூலவர் லிங்கமும், பெரிய உருவத்தினர். ஸ்வாமியின் லிங்க பாணத்துக்கு மூன்று முழமும், ஆவுடையாருக்கு முப்பது முழ அளவிலும் வஸ்திரம் தேவைப்படுமாம். இதையொட்டி ‘மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று’ என்ற சொல் வழக்குக்கு உரிய தலமாக இவ்வூர் சிறப்பு பெற்றுவிட்டது!


பதினாறும் அருளும் ரம்பாபுரி நாதர்!


திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர், 16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம். இவரைத் தரிசித்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
திருஞானசம்பந்தர் மணவிழா...
1528864522069.png


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், வைகாசி மூலத்தைக் கடைநாளாகக்கொண்டு திருஞானசம்பந்தர் விழா பத்து நாள்கள் கொண்டாடப்படும். நிறைவு நாளில் திருஞானசம்பந்தர் வீதி உலா கண்டபின்னர், கருவறைக்கு முன்னுள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கே ஞானபூரணியாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் திருமண விழா நடைபெறும். அதன் பின்னர், உள் பிராகாரத்தை வலம்வந்து ஜோதியில் கலக்கும் ஐதீக விழா நடைபெறும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
சப்த தாண்டவங்கள்!

நடராஜரின் தாண்டவக் கோலங்களில் ஏழு தாண்டவங் களை `சப்த தாண்டவங்கள்' எனச் சிறப்பிப்பார்கள். அவை:

தில்லை: ஆனந்த தாண்டவம்
மதுரை: சந்தியா தாண்டவம்
திருப்புத்தூர்: கெளரி தாண்டவம்
குற்றாலம்: திரிபுர தாண்டவம்
திருவாலங்காடு: காளிகா
தாண்டவம்
நெல்லை: முனி தாண்டவம்
இவைபோக, இருண்ட காடுகளில் சம்ஹார தாண்டவம் ஆடுகிறாராம் பரமன்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
வெள்ளியம்பலம்...

சிவபெருமான் ஆடும் ஐம்பெரும் மன்றங்களில் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சி உடனாய சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா மண்டபத்தின் வடபகுதியில் உள்ளது. இதில் பெருமான் நெடிய திருமேனியுடன் கால்மாறி ஆடும் கற்பகமாகக் காட்சியளிக்கிறார். இவர் ஆடிக்கொண்டிருக்கும் சபையைத் தவிர மற்றைய நான்கு தலங்களிலுள்ள சபைகளை நினைவூட்டும் வகையில் அமைந்த பெரிய மண்டபங்களும் மதுரையில் உள்ளன.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.