useful tips

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
முக ஒப்பனை செய்து கொள்வதெப்படி, தலையலங்காரத்தை எந்த ஸ்டைலில் மாற்றிக் கொள்ளலாம், கண்கள், கைகளை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்துக் கொள்ளும் பெண்கள், ஏனோ கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதுடன் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதும் இல்லை.
'கால்கள் வேதனைப்பட்டால் உடல் முழுவதும் வேதனைப்படும்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் பெண்களுக்கு அப்படி என்ன தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பெண்களது கால்கள், ஆண்களின் கால்களை விட நான்கு மடங்கு அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குதியுயர்ந்த செருப்புக்களை அணிவதாலும் நின்றபடி சமைக்கும் சமையல் அறைகளும், நடையை குறைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளுமே இதற்குக் காரணமாகின்றது.
எனவே பெண்கள், கால்களின் பராமரிப்பிற்கென்று அதிக கவனம் எடுத்துக் கொள்வது என்பது மிக மிக அவசியமாகிறது. அழகிய பாதங்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் அளவிற்கு சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாதப் பராமரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பது அவரவர் பயன்படுத்தும் செருப்புகள்தான்.
அண்மைக் காலமாக பெரும்பாலான பெண்கள் நாகரீக செருப்புக்கள் மற்றும் தாங்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களிலேயே அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
நீங்களும் அவ்வாறே என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் செருப்புகளை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுங்கள். இவை கால் விரல்கள் கோர்த்த நிலையில் இருப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டுள்ளனவா என்றும், இவற்றைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லாதவாறு இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். குதிங் காலுக்கும், ஆர்ச் போன்ற வளைவைப் பெற்றிருக்கும் கால்களின் மையப் பகுதிக்கும் சரியான பக்க வலுவை நீங்கள் வாங்கப் போகும் காலணி அல்லது பாதங்களில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கோளாறுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
மிகுந்த அழுத்தத்தினால் ஏற்படும் கால் ஆணி, கால் காய்ப்பு.
பூஞ்சாளத் தொற்றினால் ஏற்படும் பழுப்புநிறப் புள்ளிகள்.
பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு.
கால் விரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.

சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள் வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும். சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடை காலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
கால் பாதங்களுக்கு வலிமையூட்டும் சில பயிற்சிகள்:
வெறுங்காலுடன், கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். அதன் பின்னர் ஒரிடத்தில் அமர்ந்துக் கொண்டு கால் விரல்களை மேலேயும், கீழேயும் முறையே தூக்கி, கீழே இறக்கி பயிற்சி செய்யுங்கள். இது போல் குறைந்தது 50 தடவை செய்து வந்தால் சோர்வடைந்த கால்கள் புத்துணர்வு பெறும்.
உள்ளங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலிமை பெற, வசதியான நிலையில் (தரையிலோ, நாற்காலியிலோ) அமர்ந்து கொள்ளுங்கள். விரல்களை ஒன்று சேர்த்து உள்ளங்கால்களை அகலமாக விரித்து பின்னர் பழைய நிலைக்குக் கொண்டு வந்து மறுபடியும் விரித்து இவ்வாறாகத் தொடர்ந்து 30 முறை செய்து வந்தால் கால்கள் நல்ல பலம் பெறும்.
கால்களில் மென்மையைப் பராமரிக்கவும், பாத விரல்களில் வலிமையைப் பாதுகாக்கவும், விரும்புவோர், ஒரு பென்சிலை தரையிலிருந்து எடுக்கும் பயிற்சியைப் பின்பற்றலாம். ஒவ்வொரு காலிலும் தனித் தனியாக இப்பயிற்சியைக் குறைந்தது பத்து தடவைகள் மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.


செருப்புக்களும் சில வேளைகளில் கால் பாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கால்களுக்கு செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது, அவை கூர்மையான முனைகள் இல்லாதவாறிருக்க வேண்டும். ஏனெனில் கூரிய முனைகள் கொண்ட செருப்புகள், பாதங்களில் மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து காய்ப்புக்கள், மற்றும் எலும்புக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். கால் பாதங்களின் அசைவிற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாதங்கள் நுழைவதற்குத் தகுந்த அளவு இடம் பற்றாமல் இருந்தால் அது கால்களைச் செருப்புக்களின் முனைப்பக்கம் நோக்கி நகரச் செய்து பெருந் தொந்தரவைத் தரும்.
இதோடு மட்டுமன்றி, கால் விரல்கள் மடங்கிப் போவதுடன் காய்ப்பு மற்றும் கால் விரல்களில் கோளாறுகளும் ஏற்படலாம். எனவே நீங்கள் வாங்கப் போகும் காலணி எதுவாக இருப்பினும் அதிக கவனமுடன் தேர்ந்தெடுப்பது நல்லது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.