Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,955
Location
Atlanta, U.S
#1அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம்.ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அ
திகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட.காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும்.


காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே... இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.


அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்கு கைகுத்தல் அரிசி சிறந்தது.


நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நமக்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.


இந்த அமிர்தத்தை சாப்பிட்டு பயன் பெறுங்கள் மக்களே....!!


 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
பயனுள்ள தகவல் தேனு.

நாங்க அப்பப்ப Brown Rice ல செய்வோம். அது பழைய சோறு செய்முறைப்படி செய்ரோமான்னு தெரியாது. ஆனா மீதி சாதத்துல தண்ணி ஊத்தி ராத்த்ரி ஓவன் குள்ள வச்சுட்டு(பாக்டீரியா இந்த முறைல வருமான்னு தெரியல) காலையில தயிர் கலந்து, இஞ்சி கொஞ்சம் தட்டி/துருவி போட்டு , மோர் மிளகா வச்சு சாப்பிட்டா, செம்ம. நாங்க சுவைக்காக தான் சாப்பிடறோம். என் கணவருக்கு இது இருந்தா போதும், காலைல.

இதுல அவக்கோடாவும்(இருந்தால்) மசித்து போட்டும் சாப்பிடுவோம்(நல்ல கொழுப்பு சேர்றதுக்கு). பிள்ளைகளுக்கு இது பிடிக்காது. முதலில், நானும் அருவருப்பாக இருப்பதாக அவக்கோடா சேர்க்க மாட்டேன். அப்புறம் ஒரு தடவை ட்ரை பண்ணி பிடிச்சு, நானும் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
JUST A COUNTER ATTACK: MAY BE FOR FUN/TRUE.

பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம் புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை,

பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது,

அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும்.பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன, மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.


பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம்,

கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல.

பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது

அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான். பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில்தேவையான புரதமும் இருக்கும்.

நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும் படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.


இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.
 
Last edited:

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#4
பழைய சோறு என்பது அரிசியை நொதித்தலுக்கு (fermentation) உட்படுத்தலாகும். இவ்வாறு அரிசியை நொதிக்க வைக்க உலகெங்கும் பலவேறு முறைகளை மேற்கொள்ளுகிறார்கள். பொதுவாக அரிசியை நொதிக்க வைக்கும்போது அரிசி கூடுதலான சத்துள்ளதாக மாறுகிறது. அரிசியிலுள்ள ஸ்டார்ச் (starch) நீர்மமாகும் வேதிவினை மூலமாக மால்டேஸ் & குளுகோஸாக மாற்றம் பெற்று பின்பு எதில் ஆல்கஹால் எனும் மதுவாக நொதிக்க வைக்கப்படும். இதனால் அரிசியிலுள்ள மொத்த திடப்பொருட்களை கணக்கில் எடுத்தால் சரக்கரை சத்தின் அளவு குறைந்து, புரதத்தின் அளவு இரட்டிப்பாகிறது. மேலும் அத்தியாவிடய அமினோ அமிலங்களின் அளவு குறிப்பாக லைசினின்,மெத்தயோனின் அளவு 5 மடங்கு வரை அதிகரிக்கிறது. இதனால் அரிசியின் புரத தரம் அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின்களின் அளவும் கூடுகிறது. குறிப்பாக, அரிசியை பாலிஷ் செய்வதால் இழக்கப்படும் தையமின் எனும் B1 யை அரிசி நொதித்தலின் போது நுண்ணியிரிகள் உற்பத்தி செய்கின்றன. சுருக்கமாக நொதித்தலின் போது நுண்ணியிரிகள் சர்க்கரை சத்துக்களை பயனுள்ள சத்தக்களாக மாற்றுகின்றன. இது இட்டி/தோசை மாவு புளிக்கும் போதும் நடக்கிறது. ஆக பழய சோறு புது சோற்றினைவிட சத்து அதிகமுள்ளதே, ஆனால் நொதித்தலின் போது கூடவே உற்பத்தி ஆகும் மது ஈரலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதே கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட கருத்துக்கள் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை குறிப்பாக கீத் ஸ்டைன்கராஸ் எனும் கார்னல் பல்கலை' ஆராய்ச்சியாளரின் கட்டுரையை கொண்டு எழுதப்பட்டுள்ளது. நொதித்தலின் போது சத்து அதிகரிப்பு விகிதம், அரிசியின் தரம், நுண்ணயிரிகள் மற்றும் நொதித்தல் முறை காரணமாக மாறுபடும். நம்மூர் முறையிலும் சத்து அதிகரிப்பதாக பாரதிதாசன் பல்கலை' ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிந்தாக படித்திருக்கிறேன்.

//நொதித்தலின் போது சத்து அதிகரிப்பு விகிதம், அரிசியின் தரம், நுண்ணயிரிகள் மற்றும் நொதித்தல் முறை காரணமாக மாறுபடும். நம்மூர் முறையிலும் சத்து அதிகரிப்பதாக பாரதிதாசன் பல்கலை' ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிந்தாக படித்திருக்கிறேன்.//

இதெல்லாம் குக்கரில் வேக வைத்த சோற்றிலும் இருக்குமா ? மண் பானை அல்லது அலுமினிய பானையில் அடுப்பில் வைத்து வேக வைத்து வடிக்கப்படும் சோறு மறுநாள் பழைய சோறாக மாறும் போது விரலால் நசுக்கினால் கரையும், குக்கரில் செய்த சோற்றின் பழைய சோறு நசுங்கும் ஆனால் கரையாது. தோசை இட்லியை விட பழைய சோற்றில் சத்துக் குறைவே, மேலும் காலை உணவாக சாப்பிடும் பொழுது மந்தத் தன்மையையும் தூக்கம் மட்டும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

கம்பங்கூழ், கேழ்வரகு ஆகியவற்றின் பலன்கள் பழைய சோற்றில் கிடையாது.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#5
டியர் தேனு ,


மேலே போட்ட போஸ்டுகள் இணையத்தில் சுட்டது.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பள்ளி படிப்பு முடியும்வரை தினமும் பழையசோறு காய்ந்த நார்த்தங்காய் /மாவடு ஊருகாய் .(வெங்காயம் தள்ளுபடி) தான் காலை உணவு.அதுவும் அலுமினிய தட்டில் அக்கா தருவார்கள்.(பண்டிகை/அமாவாசை /விரத நாட்கள் தவிர்த்து)

அம்மா கையால் பழையசோறு கிடைக்காது (குடும்ப ஆசாரம் கருதி பழைய சாதம் வைத்திருக்கும் ஈய சட்டியை அம்மா தொடமாட்டார்கள்)

பள்ளிபடிப்பு முடிந்து சென்னை வந்த பிறகு தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது இஷ்டம் போல இட்லி /தோசை அதுவும் ஹோட்டலில் தான்.

அது ஒரு கனா காலம்/பொற்காலம்

திருமணத்துக்கு பின் ....... மிலிட்டரி ரூல் தான்
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#7
நன்றி தேனு பகிர்வுக்கு.

எங்கள் வீட்டில் என் கணவர், நான், என் மகன் உள்பட பழைய சாதத்தை ஒதுக்க மாட்டோம். எல்லோருமே சாப்பிடுவோம். என் கணவர் கோடை காலத்தில் காலையில் வெறும் பழையது மட்டுமே சாப்பிடுவார்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#9
பழையது + எரிச்சகுழம்பு சூப்பர் காம்பினேஷன் தெரியுமா!!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,955
Location
Atlanta, U.S
#10
பயனுள்ள தகவல் தேனு.

நாங்க அப்பப்ப Brown Rice ல செய்வோம். அது பழைய சோறு செய்முறைப்படி செய்ரோமான்னு தெரியாது. ஆனா மீதி சாதத்துல தண்ணி ஊத்தி ராத்த்ரி ஓவன் குள்ள வச்சுட்டு(பாக்டீரியா இந்த முறைல வருமான்னு தெரியல) காலையில தயிர் கலந்து, இஞ்சி கொஞ்சம் தட்டி/துருவி போட்டு , மோர் மிளகா வச்சு சாப்பிட்டா, செம்ம. நாங்க சுவைக்காக தான் சாப்பிடறோம். என் கணவருக்கு இது இருந்தா போதும், காலைல.

இதுல அவக்கோடாவும்(இருந்தால்) மசித்து போட்டும் சாப்பிடுவோம்(நல்ல கொழுப்பு சேர்றதுக்கு). பிள்ளைகளுக்கு இது பிடிக்காது. முதலில், நானும் அருவருப்பாக இருப்பதாக அவக்கோடா சேர்க்க மாட்டேன். அப்புறம் ஒரு தடவை ட்ரை பண்ணி பிடிச்சு, நானும் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.பிரவுன் ரைஸ்ல நல்லா இருக்குமா....? நானும் ட்ரை செய்து பார்க்கிறேன் ... ஆனா நீங்க ஏன் அதை ஓவன்ல வைக்கிறீங்க..?
சூப்பர்... மோர் மிளகாய் சரியான காம்பினேஷன்... எனக்கும் பிடிக்கும்.

அவக்கோடா இதுல சேர்க்க மாட்டேன்... நாங்க அதை வேற மாதிரி செய்வோம்..! அவக்கோடா பச்சையா அப்படியே சேர்த்துப்பீங்களா...?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.