Uses of Green Peas - பச்சைப்பட்டாணி பயன்கள்

smilesmile

Friends's of Penmai
Joined
Jun 19, 2012
Messages
245
Likes
367
Location
coimbatore
#1
பச்சைப் பட்டாணியின் சத்துக்கள்
பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோபிலவின், போன்றவை காணப்படுகின்றன
மாமிச உணவுக்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.

கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது. உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது. வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.

மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.


உடல் பலமடையும்
ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நுரையீரல் நோய் குணமடையும்
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும்.


Moderator's Note:This Article has been published in Penmai eMagazine April 2015. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
அன்புள்ள முத்துசெல்வி அவர்களுக்கு முதலில் எங்கள் நன்றி. பச்சை பட்டாணி மிகவும் அதிகமாக மலிவாக கிடைக்கும் இந்த சரியான காலத்தில் இந்த thread மூலமாக எங்களுக்கு மாபெரும் உதவி செய்துள்ளீர்கள். உங்கள் thread வழியாக நாங்கள் பச்சை பட்டாணியின் முழு பயன்பாடுகள் பற்றிய தெள்ளத் தெளிவான அறிவை பெற்றோம். மிக்க நன்றி முத்து செல்வி
 

smilesmile

Friends's of Penmai
Joined
Jun 19, 2012
Messages
245
Likes
367
Location
coimbatore
#3
அன்புள்ள முத்துசெல்வி அவர்களுக்கு முதலில் எங்கள் நன்றி. பச்சை பட்டாணி மிகவும் அதிகமாக மலிவாக கிடைக்கும் இந்த சரியான காலத்தில் இந்த thread மூலமாக எங்களுக்கு மாபெரும் உதவி செய்துள்ளீர்கள். உங்கள் thread வழியாக நாங்கள் பச்சை பட்டாணியின் முழு பயன்பாடுகள் பற்றிய தெள்ளத் தெளிவான அறிவை பெற்றோம். மிக்க நன்றி முத்து செல்வி
Thank u sumi mam!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.