Valentines Day Contest - Penmai!

Penmai

Administrator
Staff member
#1
Valentine's Day 2015 - Poetry contest!

Valentine's Day is fast Approaching.. Though Its just an ordinary day for many, but still it reminds us about the Endless feeling of 'love'. Well, for some, Valentine Day is a very special day to spread the message of love.



Take a moment and give a thought! Yeah Its a Poem Contest indeed for the very special day under the Topic of "நீங்க உங்க காதலை உணர்ந்த அந்த தருணம்... - The Moment when you Realized your Love..."

Here's a chance, Just say it in the form of a poem! Express your special emotions in your special way to your beloved ones. (They may be your lover, spouse, friend, parents, siblings and your kid)

Rules
1. The poem must be in Tamil/English only.
2. A member can submit only 1 entry
3. Should be your own writing.
3. Last Date of Submission - 15 February 2015 11:55 PM IST.

Winner Announcement!
 

saveetha1982

Penman of Penmai
Blogger
#3
அருமையான திரி இளவரசி மேடம்... நான் இதுல ஏதாவது செய்ய முடியுதான்னு பார்க்குறேன்...
 
#13
நான் உணர்ந்த என் சேய்க்கான காதலின் தருணம்....

உனக்கான என் காதல் தோன்றிய தருணம் எப்பொழுது,
என் நினைவலையில் மூழ்கி மீட்டெடுக்கவே முனைகின்றேன்,
என் மணி வயிற்றில் நீ உருவாகியதை அறிந்த கணமா.!!!
ஐந்தாறு மாதங்களில் உன் முதல் அசைவை பரவசத்தால் உணர்ந்த
கணமா!!..


மூச்சடக்கி, உன்னை என்னுள் இருந்து தொப்புள் கொடி அறுத்து பிரித்தகணமா!
முகம் பார்த்து ''ம்ம்மா".. என்று முதல் முறை நீ விளித்த கணமா!
மண்டியிட்டு நின்று தளிர்நடை பயின்று,, ஓடிவந்து என்னைப்பிடித்த தருணங்களா!
இல்லையென்றே தோன்றுகிறது...பின் எப்பொழுது?


உடலைவிட்டுப் பிரிந்தாலும் , என்னுடல் பாகமாக இருந்தபின்,
கல்வி கற்க மூன்று வயதில் எனை பிரிந்து சென்றாயே அப்பொழுதா,
நீ அறிந்ததை மழலை மாறாமல் என்னிடம் ஒப்பித்தாயே அப்பொழுதா,
ஒரு சில நாட்களில் பிணியால் வாடி உணவருந்தாமல் அழுதாயே அப்பொழுதா..
இல்லையென்றே தோன்றுகிறது..பின் எப்பொழுது?

கேள்வியின் நாயகன் நீ!!! என்ன தோன்றும் உன் பிஞ்சு மூளைக்குள்..
எதை சிந்திப்பாய், எதைப்பார்த்தாலும் காட்டருவியாய் கொட்டும் உன் கேள்விகள்..
எல்லாவற்றையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் உன் இடையறாத ஆர்வம்..
இவற்றையெல்லாம் பெருமிதத்துடன் பார்த்த பொழுதா...


எனக்கும் உனக்குமான உரையாடல்களை பார்ப்பவர்கள் ,
எப்படி இவனை சமாளிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுதா,
இன்னும் எத்தனையோ தருணங்கள்.....
உனக்காக என் சுயம் தொலைத்த பொழுதா ,
உன் அறிவை பிறர் வியந்த பொழுதா
படிப்பிலும் விளையாட்டிலும் வியத்தகு வெற்றி பெற்று,
பல பதக்கங்களை பெற்ற பொழுதா...
இல்லையென்றே தோன்றுகிறது...

பின் எப்பொழுது....?????

இருக்கிறது .. இருக்கிறது அந்த ஒரு தருணம்...
எப்பொழுதும் நமக்கான நேரம் ,உனக்கும் எனக்குமான உலகம்..
அதன் நடுவில் நாம் யாரையும் அனுமதித்ததில்லை...

ஆறு ஏழு வயதிருக்குமா உனக்கு...
எல்லா பிஞ்சுகளுக்கும் தோன்றுவதுதான்..
உனக்கும் தோன்றியது, அம்மா நான் எப்படி பிறந்தேன்...???
வழக்கமான கேள்விதான், கடவுள் கொடுத்தார் என்றோ!
விலைக்கு வாங்கினேன் என்றோ!!
பொய்யுரைக்க விரும்பவில்லை நான்..

எதைக் கேட்டாலும்?உனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும்
உண்மையே சொல்லுவேன் நான்..அன்றும் சொன்னேன்!!!

அறிவியலையும், உண்மையையும் விளக்கி ..
சிறு குழந்தைக்குப் புரியவா போகிறது!!,
,இருந்தாலும் , உனக்கான முதல் ஆசிரியை நான்...
நான்....நான் மட்டுமே உனக்கு சொல்லவேண்டும்...
எப்படி என் வயிற்றில் இருந்து வந்தாய் என்று..!!!

அப்பொழுது கேட்டாயே ஒரு கேள்வி,
உன் பிஞ்சு கைகளால் என் வயிற்றை தடவி..
''அம்மா! நான் பிறந்த பொழுது உனக்கு வலித்ததா!!!!
நான் பெரியவனாக இருந்திருப்பேன்..சுச்சூ small என்று.."..

அந்த ஒரு கணம், என் வலியறிந்து
தாயாக மாறிக் கேட்டாயே.. என் சேயே!!!!!!
அந்த ஒரு கணத்தில்தான்
மரணித்து உயிர்த்தேன் மறுபடியும்!!!!!..
உணர்ந்தேன் உனக்கான என் காதலையும்,,,
எனக்கான உன் காதலையும்..

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine April 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Mary Daisy

Registered User
Blogger
#14
wow. . .. .
suprrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr................... :thumbsup:cheer:

yvlo alagu. . . .

romba romba nala iruku. . .
i lik it. . .. . .

நான் உணர்ந்த என் சேய்க்கான காதலின் தருணம்....

உனக்கான என் காதல் தோன்றிய தருணம் எப்பொழுது,
என் நினைவலையில் மூழ்கி மீட்டெடுக்கவே முனைகின்றேன்,
என் மணி வயிற்றில் நீ உருவாகியதை அறிந்த கணமா.!!!
ஐந்தாறு மாதங்களில் உன் முதல் அசைவை பரவசத்தால் உணர்ந்த
கணமா!!..


மூச்சடக்கி, உன்னை என்னுள் இருந்து தொப்புள் கொடி அறுத்து பிரித்தகணமா!
முகம் பார்த்து ''ம்ம்மா".. என்று முதல் முறை நீ விளித்த கணமா!
மண்டியிட்டு நின்று தளிர்நடை பயின்று,, ஓடிவந்து என்னைப்பிடித்த தருணங்களா!
இல்லையென்றே தோன்றுகிறது...பின் எப்பொழுது?


உடலைவிட்டுப் பிரிந்தாலும் , என்னுடல் பாகமாக இருந்தபின்,
கல்வி கற்க மூன்று வயதில் எனை பிரிந்து சென்றாயே அப்பொழுதா,
நீ அறிந்ததை மழலை மாறாமல் என்னிடம் ஒப்பித்தாயே அப்பொழுதா,
ஒரு சில நாட்களில் பிணியால் வாடி உணவருந்தாமல் அழுதாயே அப்பொழுதா..
இல்லையென்றே தோன்றுகிறது..பின் எப்பொழுது?

கேள்வியின் நாயகன் நீ!!! என்ன தோன்றும் உன் பிஞ்சு மூளைக்குள்..
எதை சிந்திப்பாய், எதைப்பார்த்தாலும் காட்டருவியாய் கொட்டும் உன் கேள்விகள்..
எல்லாவற்றையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் உன் இடையறாத ஆர்வம்..
இவற்றையெல்லாம் பெருமிதத்துடன் பார்த்த பொழுதா...


எனக்கும் உனக்குமான உரையாடல்களை பார்ப்பவர்கள் ,
எப்படி இவனை சமாளிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுதா,
இன்னும் எத்தனையோ தருணங்கள்.....
உனக்காக என் சுயம் தொலைத்த பொழுதா ,
உன் அறிவை பிறர் வியந்த பொழுதா
படிப்பிலும் விளையாட்டிலும் வியத்தகு வெற்றி பெற்று,
பல பதக்கங்களை பெற்ற பொழுதா...
இல்லையென்றே தோன்றுகிறது...

பின் எப்பொழுது....?????

இருக்கிறது .. இருக்கிறது அந்த ஒரு தருணம்...
எப்பொழுதும் நமக்கான நேரம் ,உனக்கும் எனக்குமான உலகம்..
அதன் நடுவில் நாம் யாரையும் அனுமதித்ததில்லை...

ஆறு ஏழு வயதிருக்குமா உனக்கு...
எல்லா பிஞ்சுகளுக்கும் தோன்றுவதுதான்..
உனக்கும் தோன்றியது, அம்மா நான் எப்படி பிறந்தேன்...???
வழக்கமான கேள்விதான், கடவுள் கொடுத்தார் என்றோ!
விலைக்கு வாங்கினேன் என்றோ!!
பொய்யுரைக்க விரும்பவில்லை நான்..

எதைக் கேட்டாலும்?உனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும்
உண்மையே சொல்லுவேன் நான்..அன்றும் சொன்னேன்!!!

அறிவியலையும், உண்மையையும் விளக்கி ..
சிறு குழந்தைக்குப் புரியவா போகிறது!!,
,இருந்தாலும் , உனக்கான முதல் ஆசிரியை நான்...
நான்....நான் மட்டுமே உனக்கு சொல்லவேண்டும்...
எப்படி என் வயிற்றில் இருந்து வந்தாய் என்று..!!!

அப்பொழுது கேட்டாயே ஒரு கேள்வி,
உன் பிஞ்சு கைகளால் என் வயிற்றை தடவி..
''அம்மா! நான் பிறந்த பொழுது உனக்கு வலித்ததா!!!!
நான் பெரியவனாக இருந்திருப்பேன்..சுச்சூ small என்று.."..

அந்த ஒரு கணம், என் வலியறிந்து
தாயாக மாறிக் கேட்டாயே.. என் சேயே!!!!!!
அந்த ஒரு கணத்தில்தான்
மரணித்து உயிர்த்தேன் மறுபடியும்!!!!!..
உணர்ந்தேன் உனக்கான என் காதலையும்,,,
எனக்கான உன் காதலையும்..
 
#18
Dedicated to my Dearest Mom
Unnilirundu uthayamaanen
Unn madiyil thavazhthen
Unn anbil valarnthen
Unn kandipaal sethukapaten
Unn thozhamaiyil natpai maranthen
Unn thol valaivil aaruthal konden
Unn thunaiyaal maruthuvar aanen
Unn thooimaiyaana thaimaiyaal milirginra naan
Indrum endrum un chella magalaaven