Valentine's day...

Joined
Feb 25, 2016
Messages
31
Likes
28
Location
coimbatore
#1
 1. Valentine's day...
 2. காதல் யாரு மேலயும் வரலாம்தான். அது சக்சஸ் ஆனா, அந்தப் பொண்ணயோ பையனையோ கல்யாணம் பண்ணிக்குவீங்க. அதுவரை, லவர்சா சுத்துன ஜாலியான ஃபீலும், மணிக்க...ணக்குல sms, whatsapp, fb உட்பட chat பண்ண ரொமாண்டிக் ஃபீலும் எக்கச்சக்கமா இருக்கும். அந்த ஃபீலோடயேதான் கல்யாணமும் நடக்கும்.
 3. ஒரு மனுஷனோடயே 24 மணி நேரமும் வாழ்ந்த அனுபவம் இருக்கா? ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலின்னு அப்படி அனுபவம் உங்களுக்கு ஆல்ரெடி அமைஞ்சிருந்தா இது நல்லா தெரியும். கல்யாணத்துக்கு அப்புறம், கணவனோடயோ மனைவியோடயோ இப்படி 24 மணி நேரமும் வாழுறதுல ஆரம்பகாலத்துல எக்கச்சக்க பிரச்னைகள் வரும். லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணாலும் சரி..அரேஞ்ட் மேரேஜானாலும் சரி. ஏன்னா நம்மில் பலர் அடுத்தவங்களுக்கு உட்டுக்கொடுக்கணும்ன்றதையே ஏதோ விரோதமான செயலா பார்க்குறவங்க. உட்டுக்கொடுத்துட்டா மோஜோ இறங்கிரும்னு நினைப்போம். இது ஒண்ணு.
 4. ரெண்டாவதா, நம்ம அதுவரை எப்படியும் ஓரளவு அலங்கோலமான லைஃப்தான் வாழ்ந்திருப்போம். எடுத்தது எடுத்த இடத்துல இருக்காது. குப்பைகள் போடுவோம். நாம எந்த வேலையை செஞ்சாலும் ஹஸ்பெண்டோ வைஃபோ அதை இன்னொரு வாட்டி செஞ்சித்தான் அந்த வேலை முடியும். சுத்தமா இருக்கமாட்டோம். நம்மகூட வாழும் கணவன்/மனைவிக்குப் பிடிக்காத பல பழக்கங்கள் நம்மகிட்ட இருக்கும். போர்வையைக் கூட மடிக்காம எந்திரிச்சி பொணம் மாதிரி நடப்போம். கணவன்/மனைவிதான் அதை செய்யவேண்டி இருக்கும்.
 5. மூணாவதா, கொஞ்ச நாள் வாழ்க்கையிலேயே யாரு அக்ரஸிவ், யாரு சப்மிஸிவ்னு தெரிஞ்சிரும். இதுக்கப்புறம் அதேதான் கடைசிவரை தொடரும். சப்மிஸிவான நபர் மனதளவில் பாதிக்கப்பட்டு வேற வழி இல்லாம உறவைத் தொடர்வார். அக்ரஸிவ் நபருக்கு எப்படியும் எல்லா வேலையும் நடந்துரும். அதுனால அவரு (மனைவியோ அல்லது கணவனோ) ஜாலியா வீட்டுக்கு வந்துபோகும் கெஸ்ட்டா இருப்பார். இதுல மட்டும் இது பெரும்பாலும் கணவனா இருக்க வாய்ப்பு அதிகம்.
 6. நாலாவதா, கொழந்தைகள் பொறந்தப்பறம் மனதளவில் மனைவிக்கு ஒரு சின்ன வெறுமையும், ப்ராக்டிகலான பொண்ணா இருந்தா, இவனே எப்பவும் எஞ்சாய் பண்றானே.. நம்மை இப்படி ஒரு இடத்துல பல மாதங்கள் அடைச்சி வெச்சிட்டானேன்னு ஒரு ஃபீல் இருக்கும். இந்தச் சமயத்துலதான் மனைவிக்கு ஒரு கணவனா நம்ம உதவி தேவைப்படும். கொழந்தை அழும்போது டக்குனு எழுந்து தொட்டிலை ஆட்டிப்பாருங்க. அந்தக் கொஞ்ச நேரம் மனைவி நிம்மதியா தூங்குறது நமக்குத் தெரியும். இதுபோல சின்னச்சின்ன வேலைகளை நாம தொடர்ந்து செஞ்சா அதுதான் உண்மையில் அவங்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபைக் கொடுக்கும். இதைவிட்டுட்டு, கொழந்தைகள் பொறந்தப்புறம்கூட ஒரு முடியைக் கூட ஆட்டாம தின்னுகிட்டும் தூங்கிக்கிட்டும் டைமை நாம கழிச்சா, காதல் என்ற அந்த உறவு படீர்னு அறுந்துடும். It's too difficult to mend it after such a massive breakdown. I mean it.
 7. இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, நம்மில் பலர், காதலி/காதலன்கூட பேசுறதும், chat பண்ணுறதும், சுத்துறதும் காதல்னு நினைக்கிறோம். அதுவும் காதல்தான். ஆனா இதெல்லாம் just the tip of the iceberg மட்டுமே. காதலிக்கும் காலம் தாண்டி, திருமணம்னு ஒரு ஸ்டேஜ்ல கடைசிவரை அந்தக் காதல் போகாம, நம்ம கணவன்/மனைவிக்கு எவ்வளவு சப்போர்ட்டிவா இருக்கோம்ன்றதுதான் காதலின் ஆழத்தை கடைசிவரை முடிவு செய்யும் கருவி. இது ஃபெய்லியராகி, வேற வழியில்லாம, கொழந்தைகளுக்காக கணவன் கூட வாழும் பல பெண்கள் உண்டு.
 8. யெஸ். இந்த விஷயத்துல் பாதிக்கப்படுறது பெரும்பாலும் பெண்களே. ஆண் என்பவன் எப்பவுமே தன்னை ஒரு ஆல்ஃபாவா நினைப்பதால், வீட்லயும் தன்னிஷ்டத்துக்குதான் பெரும்பாலும் வாழுவான். காதலிக்கும்போது எக்கச்சக்க ப்ராமிஸ் பண்ணிருப்பான். ஆனால் அதெல்லாம் அந்த சமயத்துக்காக மட்டும்தான் இருக்கும் (இம்ப்ரஸ் செய்வது.. ஒரு கிஸ் வாங்கப் பார்க்குறது.. அல்லது making love.. இதுமாதிரி அப்போதைய தேவைகளுக்காக)..
 9. இதை உண்மைன்னு நினைக்கும் பல பெண்கள், அந்த ஆணின் மீது வைக்கும் நம்பிக்கை, கல்யாணத்துக்குப் பிறகு படீர்னு உடைஞ்சி சிதறுவதைக் கண்கூடா அனுபவிக்குறாங்க. அது அவங்களுக்கு நிஜம்மாவே பேரதிர்ச்சியா இருக்கும். ஆனா இந்த ஆணுக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவும் எப்படியும் அவனோட வேலைகள் நடந்துரும். அதுனால, மனைவியின் தேவைகள் என்னன்னுகூட சரியா தெரிஞ்சிக்கமாட்டான்.
 10. இது ஒரு பக்கம்னா, நான் நல்லா பார்த்துக்குவேன்னு சத்தியமே செய்யும் நல்லவன் கூட, கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியின் நிஜமான தேவைகள் என்னென்னன்னு தெரிஞ்சிக்காம, நல்லா பார்த்துட்டு இருக்கோம்னு நினைப்பான். ஆனா பெர்சனலா குப்பை போடுறது, சுத்தமா இல்லாததுன்னு இன்னும் பேச்சிலராவே நடந்துக்குவான். தன்னைத்தானே அனலைஸ் செய்யமாட்டான்.
 11. இதெல்லாம் தாண்டி, குழந்தைகளை எப்படிப் பார்த்துக்குறோம்.. மனைவிக்கு ஸ்பேஸ் கொடுக்குறோமா.. சின்னச்சின்ன விஷயங்கள்கூட முக்கியம். அதுதான் காதல். அதுதான் நம்பிக்கை. அதுதான் நிஜமான வேலண்டைன்ஸ் டே.
 12. காதலிக்கிறவங்க அத்தனை பேரும், கல்யாணம் பண்ணிக்கிறவங்ககூட கடைசிவரை நல்ல புரிதல்ல இருந்து, நல்லா பார்த்துகிட்டு, ஒவ்வொரு நிமிஷமும் அடுத்தவங்களுக்காக வாழ்ந்து, விட்டுக்கொடுத்து, நிம்மதியைக் கொடுத்து, ஷாவனிசம் இல்லாம வாழ வேலண்டைன்ஸ் டே விஷஸ். Cheers.
 

smagssb9

Newbie
Banned User
Joined
Aug 6, 2016
Messages
36
Likes
7
Location
chennai
#4
Valentine's day. For loving each other. There is no trust me the relationship must be end.
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.