Valentines's Day Contest

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,055
Location
Coimbatore
#1
அன்பான பெண்மை நண்பர்களே,

உணர்வு பிழம்புகளின் ஓட்டு மொத்த கோர்வையாய் பல யுகங்கள் கடந்து வாழும், வளரும், ஒப்பிலாத உணர்வு காதல். காதல் நமது ஆதி உணர்வு, நாகரிக மாற்றத்தை எதிர்த்து நம்மிடையே எஞ்சியிருக்கும் மரபுகளில் ஓன்று. ஊனை உருக்கி உள்ளொலி பெருக்கும் மொழி காதல்.
free-valentine-039-s-day-lover-039-s-day-wallpaper_1920x1200_89887.jpgஉலகும் முழுவதும் உலவும் காதலை கொண்டாடும் வகையில் பெண்மையில் வேலண்டைன்ஸ் டே' போட்டி இதோ உங்களுக்காக....

​காதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்று பகிர்ந்துகொண்டு, போட்டியில் பங்கு பெறுங்கள். காதல் பற்றிய சிறந்த கருத்துக்களை கூறும் நபருக்கு, பெண்மையில் இருந்து பரிசு அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

"கண்டதும் காதல் கொண்டேன்"

"பார்த்தேன், பழகினேன், பிடித்துவிட்டது, உடனே காதலும் வந்துவிட்டது"

"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, உனக்கும் என்னை பிடித்திருக்கிறது, இனி நாம் இருவரும் காதல் செய்வோம்"


இது தான் காதலா?... இல்லை என்கிறீர்களா...

அது சரி, காதல்ன்னா என்னவென்று இங்கு சொல்லுங்கள்... காதலைப் பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விதிமுறைகள்:
  • ஒருவர், ஒரு முறை மட்டுமே தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும், உங்களது கருத்தை பதிவு செய்ய கடைசி நாள் February 13ம் தேதி.
  • உங்களது சொந்த கருத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும், இணையத்தில் இருந்து எடுக்கக்கூடாது. முழுவதும் கவிதையாகவும் இருக்க கூடாது.
  • காதல் என்ற உணர்வை பற்றி மட்டும் உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
  • சிறந்த கருத்தை பதிவை செய்தவர் பற்றிய விவரங்கள் February 14ம் தேதி அறிவிக்கப்படும்.
Have a look at here to see the winner of the contest.
 
Last edited:
Joined
Feb 3, 2012
Messages
1
Likes
7
Location
erode
#2
kankalaal katta mudiyatha onrai,kaathukalaal ketka mudiyatha onrai,vaarthaikalaal solla mudiyatha onrai, iru managalum unarvathu thaan kathal..
 
Joined
Jan 4, 2012
Messages
1
Likes
6
Location
sivakasi
#3
kadhal enbadhu kadavulaivida melanadhu kadhalal oru sadharana manidhan palarum nimirindhu pakkum alavirkku periavan agalam adhe neram kadhalal oru manidhan irundha idam illamalum pogalam but ellarukkum kadhal varum but adhu endha alavukku avungala thakkudhu adhu dhan marubadum. It is nice feeling, It can give heaven as well as hell.
 
Joined
Feb 11, 2012
Messages
70
Likes
76
Location
Kovai
#6
பார்வை பரிமாற்றத்தில் தொடங்கும் காதல்........அந்த பார்வையை இழந்து போனாலும் கூட பாதை மாறாமல் நிலைத்திருக்க வேண்டும்.குருடனுக்கு கூட காதல் வரலாம்.....ஆனால் குருட்டு காதல் மட்டும் யாருக்குமே வந்துவிட கூடாது.

என்னைப் பொறுத்தவரையில் காதல் என்று நான் உணர்வதை மட்டும் இங்கே உங்களோடு பகிர்கிறேன் தோழிகளே!

என் துணைக்கு எந்த குறைப்பாடு இருந்தாலும் அல்லது வருங்காலத்தில் வந்தாலும் என் காதலில் எவ்வித மாற்றமும் இருக்காது.அதே போல என்னையும் என் குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனமும் குணமும் என் துணைக்கு இருத்தல் வேண்டும்.

என்னால் முடிந்தவரை என்னிடமுள்ள குறைகளைக் களைந்து விட்டுக்கொடுக்க நான் முயற்சிப்பேன்.அந்த முயற்சிக்கு என் துணை சிறிதேனும் மதிப்பளித்து என்னோடு ஒத்துழைக்க வேண்டும்.

என் துணையின் மீது எந்நாளும் நம்பிக்கை வைத்திருப்பேன்.ஆனால் அதையும் மீறி எனக்குள் சந்தேகங்கள் வந்தால் அதை என் துணையிடமே கேட்டு தெளிவடைய முயற்சிப்பேன்.இதே எண்ணம் என் துணைக்கும் இருந்தால் மனம் மகிழ்வேன்.

எந்த பிரச்சனை வந்தாலும் எந்த துன்பம் வந்தாலும் எந்த சந்தோஷம் நிகழ்ந்தாலும் நானும் என் துணையும் அதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

என்னிடம் கோபம் வந்தால் அதை வெளிப்படையாக என்னிடமே காட்டிவிட வேண்டும்.மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு மருகக்கூடாது.

என் துணைக்காக உயிரையே கொடுக்கவும் சித்தமாக இருக்கும் எனக்காக, என் துணை செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்............போக்குவரத்து நெரிசலிலும்,நெடுஞ்சாலை விரைவு பயணங்களிலும் அவரின் உயிரை எனக்காக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இயற்கையாய் ஏற்படும் நிகழ்வுகளை தடுக்க அவராலோ என்னாலோ முடியாது.ஆனால் நிமிட நேர அவசரத்தில் நடக்கும் இது போன்ற தவறுகளை எனக்காக.....என் காதலுக்காக அவர் விட வேண்டும்.ஏனென்றால் அவர் உயிர் மற்ற எல்லாவற்றையும் விட எனக்கு பெரிது.

கண்ணே மணியே என்பதைக் காட்டிலும் இந்த சிறு சிறு எண்ணங்களும் பரிமாற்றங்களுமே காதலின் பலமான அஸ்திவாரம் என்பது என் கருத்து.
 
Last edited:

muthuselvi

Citizen's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
653
Likes
162
Location
chennai
#7
kadal kadalithal mattum puriyum sugam............. love will win when both parents accepted...lovers should understand this..........true love never hurts anyone.....kathiruthal kooda sugam endru puriyum kadal valimayanadu.
simple to say nee naan, naane neee.
 
Joined
Feb 13, 2012
Messages
1
Likes
5
Location
Coimbatore
#9
பெண்மையின் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்...

காதல், அன்பு, பாசம் இவை அனைத்திற்கும் ஆங்கிலத்தில் ஒரே அர்த்தம் தான்... ஆனால் இவை வெளிப்படுத்தப்படும் தருணங்கள் மட்டும் வேறுபடுகின்றது.. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான அன்பு, பாசம், காமம் இவை மூன்றின் அலாதியான, ஆர்ப்பரிக்கும், உண்மையான வெளிப்பாடே காதல்!!!
 

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#10
உலகம் சொன்ன முதல் உண்மையும், பொய்யும் இதுவே இந்த காதல்!!!

ஒலி கூட்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மொழியும், இலக்கணமும் படைபதற்கு முன்னாள் விழி கூட்டங்கள் ஒன்று சேர்ந்து எழுதி படைத்த காவியம் காதல்!!!

கடவுளின் கூடாரத்தில் கிசுகிசுத்த ரகசியங்கள் பிரபஞ்ச வெளியில் கசிந்தபோது அது காதல் எனப்பட்டது ஆம் கடவுள் காதலிதான், காதல் மொழி பேசினான். மனிதனை படைப்பதற்கு முன்னாள் அவன் முழு நேர தொழிலே காதல்!!!

அந்த பெருந் தெய்வங்களும், குட்டி தேவதைகளும்
காதலால் பேசினார்கள்
காதலை பேசினார்கள்
காதலில் பேசினார்கள்!!!

கடவுள் - கடவுள்
கடவுள் - மனிதன்
மனிதன் - கடவுள்
மனிதன் - மனிதன்
காதலால் பேசினார்கள்.

காதலும் புரட்சியும் ஒன்று தான்
இவை இரண்டும் உரச, உரச.
பேச, பேச பற்றிக்கொள்ளும்!!!

பல யுக புரட்சிகளை உருவாக்கியது காதல்.
பல தேசங்களின் எல்லை கோடுகளை நகர்தியது காதல்
காதல் சித்தாந்தங்களை உருவாக்கியது
பல தத்துவங்களை பெற்றெடுத்தது காதல்.

ஆறறிவின் அரைகுறையை உணர்த்துவது காதல், ஏழாம் அறிவின் எல்லை கோடு காதல்!!!

காதல் எதையும் வேற்றுமை பாடுதுவதில்லை, சில நேரங்களில் அவை உணர்வுகளை ஒருமையில் சேர்கிறது!!!

ஆகவே காதல் செய்வீர்!!!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.