vegetables for 6month baby

Joined
Mar 16, 2015
Messages
3
Likes
4
Location
mumbai
#2
hi. carrots, tomatoes, beetroot, spinach, etc. vegetables rich in iron and vitamins are a good option. you can make a soup of them or simply boil and blend it in a processor for the baby to eat. but start in moderation because the baby takes sometime to adapt to the new diet. hope this helps and yes make sure the vegetables are well washed.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Welcome to Penmai....Saradha.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கறிகாய் உபயோகிக்கலாம்.

காரட் , பீட்ரூட் , பீன்ஸ் , cauliflower, முட்டைகோஸ் ,பப்பாளிக்காய், புடலங்காய் போன்ற எல்லாவற்றையும் உபயோகிக்கலாம் . இவற்றை நன்குக் கழுவி விட்டு உபயோகிக்கவும்.

குக்கரில் நன்கு வேக வைத்து , பின்பு மசித்து கொடுக்க வேண்டும்

முக்கியமான விஷயம்......இது எல்லாவற்றையும் 1 வயது வரை ,மிக நன்றாக மசித்தே கொடுக்க வேண்டும். வேண்டுமானால் மிக்சியிலும் மசிக்கலாம் .




குழந்தைக்கு ஆறு மாதத்திற்குப் பிறகு, சிறிது சிறிதாக , திட உணவு பழக்கப்படுத்தலாம் .

இப்போது , எந்த உணவையும் நன்கு மசித்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் நன்கு ஜீரணமாகும்.

வாழைப்பழம் , வேக வைத்த உருளைக்கிழங்கு (இதில் வேறு எந்தப் பொருளையும் கலக்கக் கூடாது ), மசித்த பருப்பு வகைகள், முன்னர் கூறிய கறிகாய்களை வேக வைத்து, அதை நன்கு மசித்துத் தரலாம் .

ஆப்பிள் பழத்தை நன்கு வேக வைத்து மசித்துத் தரலாம் .

இவற்றுடன் , ராகி கூழ் தரவும் .

இதன் செய்முறை :

கடையில் ராகி 1 கிலோ வாங்கி , அதை நன்குக் கழுவி ,வடிகட்டி , பின்பு ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் , அதைப் போட்டு , நன்கு முடிந்து வைத்து விடவும் . இதை 1 அல்லது 2 நாட்கள் அப்படியே வைத்து இருந்து, பிறகு அந்த மூட்டையைத் திறந்தால், ராகி நன்கு முளை விட்டிருக்கும்.

இப்போது, இதை , ஒரு வெறும் வாணலியில், நன்றாக , பச்சை வாசனை போகும் வரை வறுத்து, ஆற வைத்து , மாவு மிஷினில் கொடுத்து , நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும் .

நன்கு வறுத்து விடுவதால், சீக்கிரம் கெட்டுப் போகாது.

இதை ,முதலில் தினமும் ஒரு வேளை, ஒரு பாத்திரத்தில் , 2 ஸ்பூன் எடுத்து, 3/4 டம்ளர் தண்ணீரில் நன்குக் கரைத்து ,சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை போட்டு ,அடுப்பில் வைத்து, கை விடாமல் கிளறி , சிறிது கெட்டியாக ஆகும் போது (கட்டி தட்டாமல் இருக்க வேண்டும் ), இறக்கி வைக்கவும் .

இதில் வேறு ஒன்றும் கலக்க வேண்டாம் . ஆறிய பிறகு, அப்படியே, ஒரு ஸ்பூன் மூலம் , குழந்தைக்கு ஊட்டி விடவும் .

போகப் போக , உடம்புக்கு ஒத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு, 2 வேளை, இந்தக் கூழைக் கொடுக்கலாம்.

முதலில் எந்த திட உணவை அறிமுகப்படுத்தினாலும் , சிறிதளவே கொடுக்க வேண்டும். அது உடம்புக்குப் பழக நாலு அல்லது ஐந்து நாட்கள் எடுக்கலாம்.


Read more: http://www.penmai.com/forums/health...e-give-me-healthy-foods-ok.html#ixzz3Ucnauzq3
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.