VRI Corner

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

1527072438984.png


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். அபிமன்யு மாதிரி தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வகுப்பறையில் முதல் மார்க் எடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அபிமன்யு வீடு திரும்ப வில்லை. இதனால் அச்சமடைந்த அபிமன்யு பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அபிமன்யு மாதிரி தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வகுப்பறையில் முதல் மார்க் எடுத்துள்ளார். இதனால் மற்ற மாண்வர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படும் என எண்ணி எங்காவது சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். மிகவும் நன்றாக படிக்கும் அபுமன்யு வீட்டை விட்டு கண்டிப்பாக செல்ல மாட்டன் என அவர் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காணாமல் போன அபிமன்யுவை வெஸ்ட் மிட்லண்ட் போலீசார் கெனில்வொர்த் நகரில் கண்டுபிடித்தனர். பின்னர் அபிமன்யு அவரது குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
மே-29 ல் பிரதமர் மோடி இந்தோனேஷியா,சிங்கப்பூர் பயணம்

பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி முதல் ஜூன்-2 வரை இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து கூறப்படுவதாவது: வரும் 29ம் தேதி இந்தோனேஷியா செல்கிறார் தொடர்ந்து சிங்கப்பூரில் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிகழச்சியிலும் கலந்து கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்த உள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
வேதாந்தா நிறுவனத்தை பங்குச்சந்தையில் இருந்து நீக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.‘போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது. பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரசு சாரா அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன’ என தொழிலாளர் கட்சி தலைவர் ஜான் மெக்டோனல் கூறியுள்ளார்.

மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்ட சீக்கிய டிரைவர் உயிரிழந்தார்

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தின் மான்ரோ பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் வாழ்ந்து வந்துள்ளார், இவர் அப்பகுதியில் சரக்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், மே 12-ம் தேதி புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்ற வாலிபர் இவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ராபர்ட் வைத்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்ட ஜஸ்பிரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரீத் சிங், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் மீது கொடூரமான கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
இந்திய வம்சாவளி பெண்ணின் உயிர் தியாகத்தால் சாத்தியமான சட்டபூர்வ கருக்கலைப்பு

1527504308758.png
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, இந்த கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

‘ஆறு வருட போராட்டத்திற்கு பின்னர் இந்த சட்டத்தை நீக்க அரசு முன்வந்துள்ளது. சவிதாவின் ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்’ என அவரது பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் - புறப்பட்டு சென்றார் மோடி

1527587683882.png

சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

30-ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
மலேசியா சென்றடைந்தார் மோடி - பிரதமர் மகாதிர் முகம்மது உடன் சந்திப்பு

1527749669416.png


இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப், பிரதமர் லீ லூங் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

1527834648823.png

அரசு முறை பயணமாக இந்தோனேசியா நாட்டுக்கு முதலாவதாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மலேசியா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.


இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப் மற்றும் பிரதமர் லீ லூங் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஜோகனஸ்பர்க் சென்றடைந்தார் சுஷ்மா சுவராஜ் - தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஆலோசனை

1528052074925.png

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை (4-ம் தேதி) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து நேற்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

இன்று ஜோகனஸ்பர்க் நகரை சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை மந்திரி லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
Indian-American boy wins Spelling Bee contest

Highlights

  • 14-year-old Karthik Nemmani won the prestigious Scripps National Spelling Bee
  • He won $42,000 in cash and prizes after correctly spelling 'koinonia'Karthik Nemmani , a 14-year-old Indian-American boy, on Friday won the prestigious Scripps National Spelling Bee, taking home more than $42,000 in cash and prizes after correctly spelling "koinonia" to become the 14th champion from the community in 11 consecutive years.

An eighth-grader from McKinney, Texas, Karthik won the spelling competition after numerous rounds against Naysa Modi, another Indian-American student, underscoring the overwhelming dominance of Indian-Americans in the competition.

Karthik and Naysa were the last two standing of the initial 516 spellers.

"I had confidence, but I didn't think it would really happen," he said, adding that he knew he would correctly spell the word, meaning Christian fellowship or communion, as soon as he heard it.

Karthik received $40,000 and a trophy from the Scripps Bee, a $2,500 cash prize (and a complete reference library) from Merriam-Webster, trips to New York and Hollywood as part of a media tour, and a pizza party for their school, the Washington Post reported.

Forty-one spellers advanced to the finals yesterday out of a field of 516, by far the largest in the 93-year history of the competition at the Gaylord National Resort & Convention Center in Maryland to battle it out for the title of champion.

The 16 finalists ranged in age from 11 to 14 and included nine girls and seven boys.

Karthik said he went 20 rounds toe-to-toe with Naysa in their local Bee, only to be invited to the National Spelling Bee through the RSVBee programme - where they would again square off on stage, the Spelling Bee said in a statement.

"It's pretty cool to be on stage. It's what I've been dreaming of for years now," he was quoted as saying by the statement.

It's a lot of work, Karthik said, but worthwhile.

"I had confidence," he said. "I wouldn't say I expected it. It was a dream come true."

When not spelling, Karthik likes to play tennis and watch the Chicago Bulls and the Denver Broncos. He also likes robotics and is looking forward to getting some rest, it said.

Another Indian-American, Atman Balakrishnan, the 12-year-old son of 1985 champion Balu Natarajan, did not advance to the finals.

Karthik also continued a longtime trend by becoming the 14th champion or co-champion of South Asian descent the bee has had in 11 consecutive years.

The National Bee is a high-profile, high-pressure endurance test as much as a nerd spelling match and spellers spend months preparing for it.

The stress of competing against the dictionary was etched on many spellers' faces as they took their turn at the microphone and in front of the television cameras.


The spellers come from all over the US, plus one from Canada. And several had appeared at the national bee in previous years.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.