VRI Corner

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
புதிய சட்டத்தின் கீழ் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு

1529733692304.png

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையா மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.

நிதி மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி, வழக்கு விசாரணை முடிந்த பின்னரே முறைகேட்டில் ஈடுபட்டவரின் சொத்துகளை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்ய முடியும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்தின்’ படி தப்பியோடிய குற்றவாளியின் அனைத்து சொத்துகளையும் உடனடியாக பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

எனவே இந்த சட்டத்தின்படி மல்லையாவை ‘தப்பியோடிய குற்றவாளி’ என அறிவித்து, மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை கோர்ட்டில் புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.

அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு கோர்ட்டு அனுமதி அளித்தால், புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் நபர் மல்லையாவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
Indian-origin hotelier in car park row with Heathrow Airport
An Indian-origin hotel tycoon in Britain is locked in a legal battle with Heathrow Airport over his plans to build a multi-storey car park on land he owns at the facility.

In a row that could have implications for expansion of the hub, Surinder Arora issued a UK High Court claim against the west London airport over his plans to build a 2,077-space, nine-storey car park on the land he owns at Heathrow, the Sunday Times reported.

However, Heathrow Airport Ltd claims it alone is entitled to build these spaces.

Under local planning rules, a maximum of 42,000 car parking spaces are allowed at the airport, but Arora said the 42,000 cap referred to the airport site as a whole - of which his land is a part. So, he said, he should be allowed to build car park spaces.

According to the report, a planning application has been pending with Hillingdon Council since 2015. Unable to secure approval for his car park, Arora was allowed to build a smaller version - 1,000 spaces and five storey - on the site, which opened in 2017.

Arora now wants to expand this by adding another four floors and undercut parking charges at Heathrow - which are among the most expensive in the world.

According to the daily, Heathrow Airport guards its car parking rights "jealously". Earning money from drivers, they allow it to reap returns from airline passengers by adding the value of the car parks to its asset base, currently worth 15.8 billion pounds.

The Times report said the row was about "more than just car parking" and was a "proxy for Arora's broader battle with the airport on whether competition should be allowed".

Arora wants the right to build the third runway at Heathrow and has backing from airlines including British Airways for his cut-price plan. Heathrow, however, claims the right to develop the runway is its alone.

The hotel tycoon, with an estimated fortune of 349 million pounds in the recent Sunday Times Rich List, is understood to have hired two top barristers to fight his parking case.

Another bidder, Heathrow Hub, whose plan is to stretch and extend Heathrow's existing northern runway, is also challenging the airport's dominance, the Times said.

Heathrow acknowledged Arora's claim last week, saying: "We believe this is entirely without merit and will respond accordingly."
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி மனு - அமலாக்கத்துறை தாக்கல் செய்தது

1529994549031.png
ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இவ்விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. நிரவ் மோடி இங்கிலாந்து, பெல்ஜியம் உள்பட எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாடு கடத்திக்கொண்டு வருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்

1530440060470.png


சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.

ஊழலற்ற ஆட்சிக்காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை.ஆனால் இவர் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கினார். அத்துடன் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவும் ஒப்புதல் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட டிரைவிங் லைசென்சு (உரிமம்) பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

இளவரசர் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் டிரைவர் பணிக்காக சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெறுகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்! - இன்டர்போல் அதிரடிபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதை திருப்பிச்செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு, இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்ததாக சி.பி.ஐ-யிடம் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நீரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது சி.பி.ஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறது. இதனிடையே, நீரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றனர்.

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான விலை உயர்ந்த 9 சொகுசுக் கார்கள், பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நீரவ் மோடியை இந்தியா கொண்டுவர முயன்று வருகின்றனர் அதிகாரிகள். அதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்டுள்ளது இந்தியா.1530522168406.png


இந்நிலையில், நீரவ் மோடியை எளிதில் பிடிக்கும் வகையில், இன்டர்போல் அமைப்பு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதனால், இன்டர்போல் அமைப்பின் பட்டியலில் உள்ள சர்வதேச நாடுகளுக்குள் அவர் சென்றால், அந்நாட்டு போலீஸார் நீரவ் மோடியைக் கைதுசெய்ய முடியும். அந்த நோட்டீஸில், நீரவ் மோடியில் பெயர், வயது, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
உடுக்க உடை இல்லாமல் 8 நாளாக தவிக்கிறோம் - வில்லிவாக்கம் பக்தர் பேட்டி

நேபாளத்தில் தவிக்கும் 23 பேரில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளனும் ஒருவர். இவர் அங்கிருந்தபடியே செல்போனில் அளித்த பேட்டி வருமாறு:-

நேபாளத்தில் சிமி கோட் பகுதியில் சென்னையை சேர்ந்தவர்கள் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறோம். கடந்த 5 நாட்களாக இங்கு சாலையோர கடைகளில் ஒரே அறையில் அனைவரும் படுத்துள்ளோம்.8 நாட்களுக்கும் மேலாக ஒரே உடையைதான் நாங்கள் அணிந்துள்ளோம். மாற்று உடை கூட எங்களிடம் இல்லை. இந்தியாவை சேர்ந்த சுமார் 100 பேர் இதே போன்று தவித்து வருகிறார்கள். நேபாளத்தில் மோசமான வானிலை காணப்படுகிறது.

எனவே அங்கிருந்து எங்களை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதே நிலை நீடித்தால் நாங்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவோம். எனவே உடனடியாக நாங்கள் இங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே நேபாளத்தில் தவிக்கும் 23 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘நேபாளத்தில் தவிப்பவர்கள் பத்திரமாக உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
'மானசரோவர் யாத்திரை'' - மீட்பு உதவி எண் அறிவிப்பு..

1530674361335.png

நேபாளத்தில் இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு கடந்த ஜூன் மாதம் 1300-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றனர். இதில் பலர் திரும்பிய நிலையில், தற்போது அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக, தமிழர்கள் உள்பட 700 பேர் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை, மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக உதவி எண்கள்: 977-9851107006, 977-9851155007, 977-9851107021, 977-9818832398. (தமிழில் விபரம் கேட்கலாம் : 977- 9808500642) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அமைச்சர் டி.ஜெயக்குமார், ''தமிழக பக்தர்களை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். தமிழக பக்தர்கள் பற்றிய விவரங்களை உறவினர்கள் தெரிந்துகொள்வதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுகிறவர்கள் கட்டுப்பாட்டு அறையின் 011 21610285 மற்றும் 011 21610286 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். உதவி வரவேற்பு அதிகாரி ஆர்.பாண்டியன் மொபைல் எண் 98685 30677, உதவி தொடர்பு அதிகாரி ஆர்.முத்து பாட்ஷா -9682 19303 ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
அமெரிக்க நீர்வீழ்ச்சியில் ஆனந்த நீச்சல் அடிக்க முயன்ற இந்திய மென்பொறியாளர் பலி

1530676648156.png

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் எல்க் ரிவர் என்ற நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது ஆபத்து நிறைந்த வரலாறை கொண்டது. கடந்த வருடங்களில் பலருக்கு தீவிர காயம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இங்குள்ள பாறைகளில் இருந்து நீருக்குள் குதித்து நீந்தி சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதற்காக வருபவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பாறைகள் மற்றும் வலிமையான நீரோட்டம் ஆகியவை ஆபத்தினை விளைவிப்பவை.

இந்த நிலையில், சார்லொட்டி பகுதியில் வசித்து வந்தவர் கோகிநேனி நாகார்ஜுனா (வயது 32). ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்த இவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

எல்க் ரிவர் நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்ற நாகார்ஜுனா கரையில் இருந்து நீருக்குள் குதித்துள்ளார். பின்னர் நீரின் அடியில் சென்று நீந்தியுள்ளார். இந்த நிலையில் நீரோட்டத்தில் அவர் இழுக்கப்பட்டு உள்ளார்.

இதனை எதிர்த்து அவர் கடுமையாக போராடியுள்ளார். ஆனால் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். அதன்பின் 2 மணிநேரம் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 6 வாரங்களில் பலியான 2வது நபர் இவர் ஆவார். ஓஹியோ பகுதியை சேர்ந்த 26 வயது நிறைந்த தாமஸ் மேக்கேர்டில் என்பவர் மே 20ந்தேதி பாறையில் இருந்து குதித்து நீந்த முயற்சித்துள்ளார். ஆனால் வலிமையான நீரோட்டத்தில் இழுக்கப்பட்ட அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு பலியானார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
'இந்தியாவுக்கு வர மாட்டேன்': ஜாகிர் நாயக் திட்டவட்டம்

1530742557567.png

சர்ச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர், ஜாகிர் நாயக், தான் இந்தியா திரும்பப்போவதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த, சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக், வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பேச்சால் துாண்டப்பட்ட, வங்கதேசத்தை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 2016ல், தாக்குதல் நடத்தி, பலரை கொன்றனர். அதன் பின், ஜாகிர் நாயக்கை கைது செய்ய, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து, அவர், மலேஷியா நாட்டுக்கு தப்பியோடினார். அங்கு, புத்ரஜயா நகரில், அவர் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஜாகிர் நாயக், இந்தியா திரும்பி வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுபற்றி, மலேஷியா அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜாகிர் நாயக், இன்று இரவு மலேஷியாவை விட்டு வெளியேறுகிறார். விமானம் மூலம், அவர் இந்தியா செல்வார் என நம்புகிறேன்' என்றார். ஆனால், இந்த தகவலை, ஜாகிர் நாயக் மறுத்துள்ளார்.

'இந்தியாவுக்கு திரும்பி செல்லும் எண்ணம் இல்லை. இந்தியாவில் உள்ள அரசு, நியாயமானதாக உள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டால், அப்போது நிச்சயமாக இந்தியா செல்வேன். அதுவரை, அங்கு செல்ல மாட்டேன்' என, ஜாகிர் நாயக் கூறியதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க மறுத்து வரும், மலேஷிய அரசு, 'ஜாகிர் நாயக்கை கைது செய்து ஒப்படைக்கக் கோரும், 'ரெட் கார்னர் நோட்டீசை' பெற, இந்தியா தவறி விட்டது' என, தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, மலேஷியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு பின், நஜீப் ரசாக் தலைமையிலான அரசு வெளியேறியது. அங்கு புதிய அரசு அமைந்துள்ளதால், ஜாகிர் நாயக் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
நேபாளத்தில் மீட்கப்பட்ட 16 பேர் சென்னை திரும்பினர்

1530768995889.png

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமையில் 23 பேர் கடந்த மாதம் நேபாள நாட்டில் உள்ள கைலாய மானசரோவர் யாத்திரை சென்றனர்.

அங்கு பலத்த மழை பெய்ததால் கடுமையான குளிர், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் குழுவாக சென்றவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். இதனால் சென்னையில் இருந்து சென்றவர்கள் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மீட்க நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, நங்கநல்லூர் சுப்பிரமணியம் உள்பட 4 பேர் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை திரும்பினர். 7 பெண்கள் உள்பட 19 பேரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிறிய ரக விமானங்கள் மூலமாக நேபாள அரசு உதவியுடன் 19 பேர் கொண்ட சென்னை குழுவினர் மீட்கப்பட்டு லக்னோவுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தீனதயாளன் உள்பட 3 பேர் டெல்லி சென்றனர். மீதமுள்ள 16 பேர் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி உற்சாகமாக வரவேற்றனர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.