VRI Corner

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,117
Likes
4,083
Location
India
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்மாதிரியான அரசியல்வாதி: ஐநா சபை பொதுச் செயலர் புகழாரம்

1535516736078.png

இந்தியாவின் முன்னாள் பிரத மர் அடல்பிகாரி வாஜ்பாய் முன் மாதிரியான அரசியல்வாதியாக திகழ்ந்தவர் என்று ஐக்கிய நாடு கள் சபை பொதுச் செயலர் அந்தோ னியா குத்தேரஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நியூயார்க்கில் ஐ.நா. சபை சார்பில் அண்மையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் வாஜ்பாயை தான் சந்தித்த நிகழ்ச்சியை குத்தேரஸ் நினைவு கூர்ந்தார்.



பின்னர் அவர் கூறியதாவது: வாஜ்பாய், அனைவருக்கும் முன் மாதிரியான அரசியல்வாதியாக வும், தலைவராகவும் திகழ்ந்தார். இந்தியாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் அமைதி, வளர்ச்சி ஏற்பட சுயநலமின்றி பாடுபட்டவர் அவர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பெரு, இஸ்ரேல், நைஜீரியா, பாலஸ் தீனம், சுவிட்சர்லாந்து, பாகிஸ் தான், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர், பிரதிநிதிகள் கலந்துகொண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இந்தத் தகவலை ஐ.நா பொதுச் செயலருக்கான செயலர் அதுல் காரே தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படுவதற்கு வாஜ்பாய் பெருமளவில் பாடு பட்டார் என்றும் சார்க் நாடு களிடையே பிராந்திய ஒத்துழைப்பு ஏற்படவும், வளர்ச்சி ஏற்படவும் முக்கிய ஆதரவாளராக இருந்தார் என்றும் பாகிஸ்தான் பிரதிநிதி, அந்த புத்தகத்தில் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா வுக்கான இந்திய தூதர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கான இரங்கல் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் இந்திய, அமெரிக்க அதிகாரி கள், தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,117
Likes
4,083
Location
India
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் புறப்பட்டார் மோடி

1535604425163.png

வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டின்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,004
Likes
22,092
Location
Germany
அயோத்தி நிலம் தொடர்பாக
ஈராக் தலைவர் திடீர் உத்தரவு


'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, ராமர் கோவில் கட்டுவதற்கு ஒப்படைக்கக் கூடாது' என, ஈராக்கைச் சேர்ந்த, ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர், சிஸ்தானி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உத்தர பிரதேசத்தில் உள்ளது அயோத்தி. இங்குள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹிந்து கடவுளான ராமர் பிறந்த இடம் என, ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.அதே நேரத்தில், அந்த இடத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், அந்த இடம் தங்களுக்கே சொந்தம் என, முஸ்லிம்கள் தரப்பில் கூறபடுகிறது.


இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், 26 ஆண்டுகளில் முதல் முறையாக, வெளிநாட்டைச் சேர்ந்த, முஸ்லிம் அமைப்பின் தலைவர் கருத்துதெரிவித்துள்ளார்.


ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவராகக் கருதப்படும், அயதுல்லா அலி அல் - சிஸ்தானி, 'பத்வா' எனப்படும் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், 'சர்ச்சைக்குரிய இடத்தை, ராமர் கோவில் கட்டுவதற்காக ஒப்படைக்கக் கூடாது' என, கூறியுள்ளார்.

இந்த உத்தரவு குறித்து, உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாவது: பாபர் மசூதி வழக்கு மனுதாரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என, எங்களுக்கு தொடர்ந்து நெருக்குதல் வருகிறது. அதன் ஒரு பகுதி தான், சிஸ்தானியின் இந்த உத்தரவு.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே, உ.பி., ஷியா வக்பு வாரியம் செயல்படும். இதுபோன்ற உத்தரவுகளுக்கு அடிபணியமாட்டோம்.



எங்கள் சமூக தலைவரின்இந்த ஆலோசனையை ஏற்கப் போவதில்லை.இந்தப் பிரச்னையில், அவருக்கு தவறான தகவல்களை சிலர் கொடுத்து உள்ளனர். ராமர் கோவில் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை யாக உள்ளது. அதை மதிக்கும் அதே நேரத்தில், நாட்டின் வளர்ச்சியை நாங்கள் பார்க்கிறோம்.

ஹிந்துக்களின் உரிமையில், முஸ்லிம்கள் தலையிடக் கூடாது. உலகெங்கும் உள்ளவர் கள் எதிர்த்தாலும், உ.பி., ஷியா வக்பு வாரியம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,117
Likes
4,083
Location
India
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு

1536043649858.png

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.

இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.

கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.

கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,117
Likes
4,083
Location
India
சிறுமி ஷெரின் மேத்யூ மரணம் எதிரொலி: வளர்ப்புப் பெற்றோர், உறவினரின் இந்தியக் குடியுரிமை ரத்து




அமெரிக்காவில் வளர்ப்புத் தந்தையால் இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது வளர்ப்புப் பெற்றோர் மற்றும் உறவினர்களின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரக தலைவர் அனுபம் ரே இதுகுறித்துக் கூறும்போது, ''வெஸ்லி மேத்யூஸ், அவரின் மனைவி சினி மற்றும் வெஸ்லியுடைய பெற்றோர்களின் ஓசிஐ அட்டைகளை (வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கான இந்தியக் குடியுரிமை) ரத்து செய்கிறோம்.

அத்துடன் மேத்யூஸ் குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களான மனோஜ் டி ஆபிரகாம் மற்றும் நிஸ்ஸி டி ஆபிரஹாம் ஆகியோரின் இந்தியக் குடியுரிமைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இதுதொடர்பான விசாரணையில் கொலையின் போதும் கொலைக்குப் பிறகும் மேத்யூஸ் குடும்பத்துடன் ஆபிரஹாம் குடும்பத்தினர் தொடர்பில் இருந்தனர். இதுதொடர்பாக இவர்கள் வழக்கு தொடர்ந்தால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திக்க நேரிடும்.

சின்னஞ்சிறு குழந்தை ஷெரினை இந்தியா மறக்காது. மத்திய அரசு பராமரித்துவரும் தவறிழைத்தோர் பட்டியலில் (Blacklist) மேத்யூஸ் மற்றும் ஆபிரஹாம் குடும்பத்தைச் சேர்க்க, தூதரகம் பரிந்துரை செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?
அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது, பேச்சு குறைபாடுடையவர்) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, வெஸ்லியும் அவரது மனைவி சினியும் கைது செய்யப்பட்டனர்.ஷெரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக ஷெரினின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இந்நிலையில் ஷெரினின் வளர்ப்புப் பெற்றோர் மற்றும் உறவினர்களின் இந்தியக் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செயய்ய உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,117
Likes
4,083
Location
India
அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது

கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
2016 ம் ஆண்டில் 11.72 லட்சமாக இருந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017 ம் ஆண்டில் 5 சதவீதம் குறைந்து 11.14 லட்சமாகி உள்ளது. அமெரிக்காவிற்கான தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் (என்டிடிஓ) வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதை ஏப்ரல் மாதத்தில் என்டிடிஓ, தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இந்நிலையில் 2017 ல் அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்த விபரத்தை மட்டும் என்டிடிஓ வெளியிட்டுள்ளது.

2016 வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது தனிநபர், வர்த்தம், தொழிலதிபர் உள்ளிட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2022 வரை அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் என்டிடிஓ தெரிவித்துள்ளது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.