VRI Corner

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

1524227068582.png



இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை அவர் சந்தித்து பேசினார்.

இதற்காக டவுனிங் தெருவுக்கு மோடி சென்ற போது, அவர் செல்லும் வழியில் திரண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர், உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதில் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.

அப்போது காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் பின்னர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டது.

இந்த சம்பவங்களை படம் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் பிடித்து தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

பிரதமர் மோடியுடன் இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் இந்த போராட்டம் குறித்து கூறுகையில், ‘இந்த போராட்டம் மற்றும் தேசியக்கொடி கிழிப்பு சம்பவம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர்களும் வருத்தம் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் எச்சரித்து இருந்தோம். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது கிழிக்கப்பட்ட தேசியக்கொடி மாற்றப்பட்டு விட்டது’ என்றார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், அவரை வரவேற்கும் வகையிலும் நேற்று முன்தினம் காலையில் டவுனிங் தெருவில் ஏராளமான இந்தியர்கள் குழுமி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
பிரிட்டனில் தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

1524227163438.png


பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார்.

லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கத்துவா, உன்னாவ் கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.

அப்போது காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் கத்திரிக்கோல் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டது.

இந்த சம்பவங்களை படம் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் பிடித்து தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த எதிர்பாராத சம்பவத்துக்கு பிரிட்டன் அரசின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்த ஆஜ் தக் தொல்கிக்காட்சி பெண் நிருபர் லண்டன் போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். ஸ்காட்லான்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடிவரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினரையும், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று போராடிவரும் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பினரையும் ஒருங்கிணைத்து லண்டனில் வாழும் பாகிஸ்தானியரான பீர் லார்ட் முஹம்மது என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் எங்கள் நாட்டு தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பிரிட்டன் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,474
Likes
3,101
Location
India
நிரவ் மோடி மீது ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு!

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், போலி உத்தரவாத கடிதம் அளித்து சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி வழக்குப்பதிவு செய்வதற்கு முன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர்.


பண மோசடி செய்துவிட்டு ஹாங்காங்கில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை, தங்களிடம் ஒப்படைக்க வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஹாங்காங் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.


இந்நிலையில், நிரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹாங்காங் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. நிரவ் மோடிக்கு சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் உள்ள கோர்ட்களில் வழக்கு தொடரவும் அந்த வங்கி முடிவு செய்துள்ளது...!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
ஷங்காய் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் சுஷ்மா சுவராஜ்

1524337507914.png

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியையொட்டி கடந்த ஆண்டில் சீனா சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனையடுத்து, இந்திய ராணுவம் அங்கு படைகளை அதிரடியாக குவித்தது. இதற்கு பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறிய சீனா தங்களது ராணுவத்தினரையும் எல்லையில் குவித்தது.

இருநாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் போர்ப்பதற்றத்தை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் கருத்து மோதல்கள் பதற்றத்தை மேலும் வலுவாக்கின.

பின்னர், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்கி பேசினர்.

இதனால் போர்பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையில், இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று ஷங்காய் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தின்போது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை சந்திக்கும் சுஷ்மா, தோக்லாம் எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் மங்கோலியா நாட்டுக்கு செல்லும் அவர் அங்கு இருநாட்கள் தங்கி இருந்து இந்தியா-மங்கோலியா இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,474
Likes
3,101
Location
India
வினாடி-வினா போட்டி: அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

1524414490426.png

அமெரிக்காவில் ஜார்ஜியாவை சேர்ந்தவர் துருவ் கவுர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஐவி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஜியோ பார்டி கல்லூரி சாம்பியன்ஷிப்புக்கான வினாடி-வினா போட்டி நடந்தது. அதில் துருவ் கவுர் மற்றும் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் துருவ் கவுர் வெற்றி பெற்றார்.


அவருக்கு ரூ.66 லட்சம் (1 லட்சம் டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகையை எப்படி செலவழிப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை என துருவ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் உயர் நிலைப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில் மாநில சாம்பியன்ஷிப் பட்டம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
மோடி - ஜின்பிங் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும்: சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

1524534679588.png

பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி அண்டை நாடான சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்து பேசுகிறார். மத்திய சீனாவில் உள்ள வுகன் நகரில் இந்த சந்திப்பு நடக்கிறது.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் நிருபர்களிடம் கூறுகையில், “இரு தலைவர்களும்(ஜின்பிங்-மோடி) சந்தித்து பேசுவது ஆக்கப்பூர்வமானதாக அமையும். மேலும் இரு நாடுகளின் உறவில் நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இந்த மாற்றம் இப்பிராந்தியத்தில் மட்டுமின்றி உலகிலும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் அமையும்” என்று குறிப்பிட்டார்.

எதன் அடிப்படையில் இந்த சந்திப்பு நடக்கிறது என்ற கேள்விக்கு லூ காங் பதில் அளித்து கூறியதாவது:-

உலக மயமாக்கல் கொள்கை ஏற்கப்பட்ட பின்னர், சமீப காலமாக இந்த உலகம் பரவலாக ஒரு தலைப்பட்சமான சுய பாதுகாப்புவாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதை நாம் உன்னிப்பாக கவனித்து அதுபற்றி விவாதிக்கவேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

மேலும் நமது நாடுகள் உலக பொருளாதார சந்தையில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் அதிக மக்கள் தொகையை கொண்டவை. எனவே நம்மால் உலக மயமாக்கல் கொள்கையை மிகுந்த உள்ளடக்கம் கொண்டதாக தாங்கி பிடிக்க இயலும். மேலும் நமது நலன்கள், கவலைகள், நிலைகள் பற்றி நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளது.

வுகன் நகரில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது, கருத்துகளை பரிமாறிக் கொள்வது நீண்டகாலமாக தீர்க்கப்படவேண்டிய விஷயங்களுக்கு தீர்வு காண்பதாகவும் மற்றும் உலகம் ஸ்திரத்தன்மையுடன் வளர்ச்சி பெற உதவுவதாகவும் அமையும். இரு தலைவர்களும் வுகன் நகரில் சந்திப்பதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை.



இவ்வாறு அவர் கூறினார்.

மோடி, ஜின்பிங்கின் சந்திப்பு வர்த்தக துறையில் அமெரிக்காவின் சுய பாதுகாப்புவாதத்துக்கு எதிரானதா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக இது தொடர்பாக இரு தலைவர்களின் உரத்த குரலை இந்த உலகம் கேட்கும் என்றார்.

இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், சீன அதிபர் ஷின்பிங்கை நேற்று பீஜிங் நகரில் சந்தித்து பேசினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
20 Indian Americans running for US Congress raise more than $15.5 million






Highlights

  • Collectively they have raised more than $ 15.5 million, as per latest official figures, with seven of them raising over a million each.
  • As per the latest fund-raising figures, Congressman Raja Krishnamoorthi from Illinois has raised maximum over $3.5 million.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
1,863
Likes
494
Location
chennai
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் இந்திய பெண் டாக்டர் தோல்வி

1524743896598.png

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு அரிசோனா மாகாணத்தில் இருந்து குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டிரென்ட் பிராங்ஸ். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால் கடந்த டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு சிறப்பு தேர்தல் நடத்தப்பட்டது. இந்ததேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் செனட்டர் டெப்பி லெக்சோவும், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க வாழ் இந்திய பெண் டாக்டரும், புற்றுநோய் ஆய்வு விஞ்ஞானியுமான ஹிரல் திபிர்னேனியும் போட்டியிட்டனர்.இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதில் டெப்பி லெக்சோ மிகச்சிறிய சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லெக்சோவை விட திபிர்னேனி, 9 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இந்த தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் சில உள்ளூர் ஊடகங்கள், லெக்சோ வெற்றி பெற்றதாக அறிவித்தன.

சிறப்பு தேர்தல் நடந்த அந்த தொகுதி கடந்த 1980-ல் இருந்து குடியரசு கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. எனினும் இந்த சிறப்பு தேர்தலில் அந்த கட்சி ஒற்றை இலக்க வாக்கு சதவீத வித்தியாசத்திலேயே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேசியது என்ன? மோடி விளக்கம்

1524893220860.png
டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் நீடித்த மோதல் காரணமாக இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் மோடி சீனாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்ற மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது டோக்லாம் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், சீன அதிபருடனான சந்திப்பு பற்றி சீன நாட்டின் வெய்போ வலைத்தளத்தில் பிரதமர் மோடி தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘வுஹானில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் விரிவான மற்றும் பலன் தரும் பேச்சுவார்த்தையினை நடத்தினோம். இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.

சீன வரலாறு மற்றும் கலாசாரத்தின் இல்லமாக திகழும் ஹுபெய் மாகாண மியூசியத்தில் என்னுடன் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு பார்வையிட்டதற்காக அவருக்கு நன்றி” என மோடி தெரிவித்து உள்ளார்.



சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 112 பேர் மோடியை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்கியது. மோடியும் ஜி ஜின்பிங்கும் கிழக்கு ஏரிக்கரையில் நடந்து சென்றபடியே உரையாடினர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,718
Location
Germany
கர்நாடக தேர்தலில் ஓட்டுபோட இந்தியா வருவீர்களா? லண்டனில் விஜய் மல்லையா பதில்
1524893745018.png

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கு மல்லையா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் அடிக்கடி கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வந்த விஜய் மல்லையாவிடம், ‘கர்நாடக தேர்தலில் ஓட்டுபோட இந்தியாவுக்கு செல்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஆம், கர்நாடக தேர்தலில் வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. ஆனால், தற்போது நான் பிணையில் உள்ளேன். இதனால், இங்கிலாந்தை விட்டு என்னால் வெளியேற முடியாது” என அவர் கூறினார்.

இந்திய அரசியல் தொடர்பான கேள்விக்கு, “நான் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து எதுவும் அறிந்து கொள்ளவில்லை. இதனால், அது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது” என மல்லையா கூறினார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.