VRI Corner

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,865
Likes
20,791
Location
Germany
முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி

1526100957644.png


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று நேபாளம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனக்பூர் சென்றடைந்த அவர், ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்றார். அப்போது அவரை நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று காலை புகழ்பெற்ற முக்திநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனையும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் மோடி சந்தித்து பேசினார். மோடியின் வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் காத்மாண்டு திரும்பும் மோடி, பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார். இதையடுத்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
இந்தியா-நேபாளத்துக்கு இடையே கிரிக்கெட் மூலம் நல்லுறவு; பிரதமர் மோடி

பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ‘இரு நாடுகளுக்கு இடையே அதிக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் உறவை மேம்படுத்த முடியும். குறிப்பாக நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது வீரர் சந்தீப் லமிசேன் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மூலமான இந்த செயல்பாடுகளால் நல்லுறவு மேலும் பலப்படும். பொதுமக்கள் தொடர்பும், வீரர்கள் இடையிலான நட்பும் வளரும். மேலும் இதுபோன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
சீதை பிறந்த இடமான ஜானக்பூர் நகர வளர்ச்சிக்கு ரூ.100 கோடி: நேபாளம் சென்ற பிரதமர் மோடி அறிவிப்பு

1526200213532.png


பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை அண்டை நாடான நேபாளத்துக்கு சென்றார். மோடி அங்கு செல்வது இது 3-வது முறையாகும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

காலை 10.15 மணிக்கு தனி விமானம் மூலம் நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.

சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு 1910-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவில் உள்ளது. ஜானக்பூர் சென்றதும் மோடி அந்த கோவிலுக்கு நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.

கோவிலில் வளாகத்தில்கூடிய ஆயிரக்கணக்கானோர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் வருகையையொட்டி கோவில் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அவர் கோவிலில் நடந்த, ‘சோடசோப்பச்சரா‘ என்னும் விசேஷ பூஜையிலும் கலந்து கொண்டார். சீதை மற்றும் ராமர் பற்றி 10 நிமிடங்கள் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அப்போது சீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார்.

ஜானக்பூர் சீதை கோவிலுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

ஜானக்பூர் கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு வந்த மோடிக்கு அங்குள்ள பார்ஹபிகா நகரில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்தியாவின் அயோத்தியையும், நேபாளத்தின் ஜானக்பூரையும் இணைக்கும் விதமாக ‘ராமாயண சர்க்கியூட்‘ திட்டத்தின் கீழ் பஸ் சேவையை மோடியும், சர்மா ஒலியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கும். ஜானக்பூரையும், அயோத்தியையும் இணைக்கும் பஸ் சேவை திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு மக்கள் காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது. நேபாள மக்கள் இந்தியாவை நோக்கி திரும்புவதாக இது அமைந்திருக்கிறது. என்றார்.

ராமாயண நகரங்களை இணைக்கும் பஸ் சேவை திட்டத்தில் அயோத்தி தவிர நந்திகிராம், ஷிரிங்கவெர்பூர் மற்றும் சித்ரகோட்(உத்தரபிரதேசம்), ராமேசுவரம்(தமிழ்நாடு), பத்ராசலம்(தெலுங்கானா), சீதாமரி, பக்‌ஷார், தர்பங்கா (பீகார்), மகேந்திரகிரி(ஒடிசா), சித்ரகோட்(மத்திய பிரதேசம்), ஜகதல்பூர்(சத்தீஷ்கார்), நாசிக், நாக்பூர்(மராட்டியம்), ஹம்பி(கர்நாடகா) ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி இன்றும்(சனிக்கிழமை) நேபாள நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத், பசுபதிநாத் கோவில்களுக்கும் சென்றும் வழிபடுகிறார். தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்றே அவர் நாடு திரும்புகிறார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,275
Likes
543
Location
chennai
மே 19, 20ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு

1526299570953.png


பன்னாட்டு தமிழர் கூட்டமைப்பு, பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடியா தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களின் சார்பில் மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு நடக்க உள்ளது.

தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்துதல், கம்போடியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து, தமிழ் இலக்கியங்களை தென்கிழக்காசிய நாடுகளுக்கு கொண்டு செல்வது, தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள இதுவரை ஆயிரக்கணக்கான தமிழர்கள் பதிவு செய்துள்ளனர். உலக அளவிலான தமிழ் பிரதிநிதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
அமீரக தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்

1526668273304.png

கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்குச் சென்று உழைத்து தொழிலதிபராக உயர்ந்தவர். தற்போது, பல கோடிகளுக்கு அதிபதியான ஷாஜி, வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அமீரகத்தில் உள்ள பியூஜைரா எனும் நகரத்தில் பணிபுரியும் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள், தொழுகைக்காக பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வந்ததை ஷாஜி அறிந்தார். மேலும், ஒருமுறை மசூதிக்கு சென்று வர தொழிலாளர்களுக்கு 20 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.400) தேவை. இதனைத் தொடர்ந்து, பியூஜைரா நகரில் தொழிலாளர்களுக்கு என மசூதி ஒன்றை கட்டித்தர ஷாஜி முடிவெடுத்தார். இந்திய மதிப்பு 2 கோடி ரூபாய் செலவில் அழகிய மசூதி ஒன்றை ஷாஜி கட்டத் தொடங்கினார். இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 950 பேர் வரை தொழுகை செய்ய முடியும்.

கிறிஸ்துவரான ஒருவர் மசூதி கட்டுவதை அறிந்த உள்ளூர் அதிகாரிகள் வியப்படைந்ததுடன், மசூதிக்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தந்தனர். அதிகாரிகளிடமிருந்து இப்படி ஒரு உதவியை எதிர்பாராத ஷாஜி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஷாஜியின் செயலைக் கண்டு திகைத்த உள்ளூர் அரேபியர்களும் நிதியுதவி செய்ய முன் வந்தனர். ஆனால், ஷாஜி அவர்களின் நன்கொடைகளை மறுத்து, தனது சொந்த செலவிலேயே மசூதியை எழுப்பினார்.

இதுகுறித்து ஷாஜி செரியன் கூறியதாவது:-

சொற்ப சம்பளமே வாங்கும் தொழிலாளர்கள் காசு செலவழித்து தொழுகைக்கு செல்வதைப் பார்த்தேன். அருகில் மசூதி இருந்தால் அவர்கள் சந்தோசப்படுவார்களே என என் உள்மனம் கூறியது. என் நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலரும் மசூதி கட்டுமானத்துக்கான கல், செங்கல், பெயிண்ட் போன்றவற்றை வாங்கித் தர முன் வந்தனர். ஆனால், என் சொந்த செலவில் இந்த மசூதியைக் கட்டவே நான் விரும்பினேன். அதனால், நன்கொடைகளை ஏற்கவில்லை. மதம், இனம், ஜாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து பார்ப்பதில்லை. எல்லா மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை’ என தெரிவித்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,865
Likes
20,791
Location
Germany
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் தூதர் மாதுரி குப்தா குற்றவாளி- டெல்லி கோர்ட் தீர்ப்பு

1526700861780.png

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 2010ம் ஆண்டு டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களை அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார்.

தண்டனை தொடர்பான வாதங்கள் நாளை நடைபெற உள்ளது. அதன்பின்னர் மாதுரி குப்தாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும்.
o_O
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,865
Likes
20,791
Location
Germany
ரூ.5 கோடி செலவில் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம் - நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்கிறார்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது.

திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை யொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியை கடவுள் ஆசீர் வதிப்பாராக. அவர்கள் இருவரும் கடவுளின் அன்பால் நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

மணமகள் மேகன் மார்கலுக்கு இளவரசர் சார்லஸ் அணிவிக்க இருக்கும் திருமண மோதிரத்தில் 3 வைரகற்கள் பதிக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று போட்ஸ் வானாவில் வாங்கப்பட்டது. சமீபத்தில் இந்த ஜோடி விடுமுறையை கழிக்க அங்கு சென்றபோது வாங்கப்பட்டது. மற்ற 2 வைரகற்களும் ஹாரியின் தாயார் மறைந்த இளவரசி டயானாவுக்கு சொந்தமானது.

திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. எனவே மேகனுடன் அவரது தாயார் டோரியா ராக் லேண்ட் தந்தை ஸ்தானத்தில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகன் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். அதற்காக அவர்கள் அனைவரும் விண்ட் சோர் நகருக்கு வந்துள்ளனர்.

அங்கு அரச குடும்பத்துக்கு சொந்தமான மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு மைதானத்தில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.



இளவரசர் ஹாரி திருமண விழாவில் இந்தியர்கள் சார்பில் பங்கேற்க நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தவிர மும்பை குடிசை பகுதியை சேர்ந்த அர்ச்சனா அம்ரி (25), டெபோரா தாஸ் (31) ஆகிய 2 பெண்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் சமூக சேவை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களுடன் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சுஹானி ஜலோடாவும் பங்கேற்கிறார்.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இது 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த வண்டியை விண்ட் சோர் நகரின் பழமைவாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து செல்கின்றன.

கோலாகலமாக நடைபெறும் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு ரூ.5 கோடி செலவிடப்படுகிறது. திருமண நிகழ்ச்சியை பல் வேறு சர்வதேச டெலி வி‌ஷன்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. ஏற்கனவே ஹாரி-மேகன் காதலை மையமாக வைத்து அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று ‘எ ராயல் ரொமான்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு சினிமா படம் ஒளிபரப்பியது. அது ஒரு காமெடி படத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,865
Likes
20,791
Location
Germany
இலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி!

சென்னையில் இலங்கைப் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மெரினாவில் நினைவேந்தல் நடத்த போலீஸார் தடை விதித்தநிலையில், பேரணியாகச் சென்று கடற்கரைக்குச் செல்ல முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.





இலங்கை இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என சென்னை போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இன்று காலை முதலே மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், பேரிகாடர்கள் அமைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.




இந்தநிலையில், நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சென்னையில் கூடிய 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாரதி சாலையிலிருந்து கண்ணகி சிலை வரை பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெஹ்லான் பாகவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்காணோர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். இதனால், பாரதி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.




பாரதி சாலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி பேரணியாகச் சென்ற அவர்கள், மெரினா கடற்கரைப் பகுதிக்குள் நுழைய முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, வைகோ மற்றும் திருமுருகன்காந்தி உள்ளிட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், பேரணியாக வந்தவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரணியாக வந்தவர்களை கைதாகுமாறு போலீஸார் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நினைவேந்தல் பேரணியில் ஈடுபட்டவர்கள், கைதாகினர். அவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,865
Likes
20,791
Location
Germany
பாகிஸ்தானில் உள்ள கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு

1526840622312.png

பாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அறக்கட்டளை சொத்து வாரியத்தின் முதன்மை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், ‘கிருஷ்ணா கோவிலை புதுப்பிக்க வேண்டி, மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கோவில் புணரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வர இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,865
Likes
20,791
Location
Germany
மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சரானார் கோவிந்த் சிங் தேவ்



மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் என்ற பெருமையை கோவிந்த் சிங் தேவ் (45) பெற்றுள்ளார்.
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்ந்த கோவிந்த் சிங் தேவுக்கு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா துறை அமைச்சகத்தை மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஒதுக்கினார். அக்கட்சியைச் சேர்ந்த இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மற்றொரு எம்.பி.யான எம்.குலசேகரனுக்கு மனித வளத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புசோங் தொகுதி எம்.பி.யான கோவிந்த் சிங் தேவ், மறைந்த முன்னாள் வழக்குரைஞரும், அரசியல்வாதியுமான கர்பால் சிங்கின் மகன் ஆவார். கோவிந்த் சிங் தேவ் அமைச்சர் பதவியை கடந்த திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டார். கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல்முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 2013-ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மலேசியாவில் சுமார் 1 லட்சம் சீக்கியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.