Walking tips - எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1

எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா…


மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், "வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், "வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வாழ்க்கை வாழலாம் அதிகரித்து வரும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, "வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சி. நடைப் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள், இதை மேற்கொள்ளும் முறை குறித்து விளக்குகிறார், மருத்துவர் ராமலிங்கம்.


தினமும், "வாக்கிங்' செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், "இன்சுலின்' சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.


கூடுதல் ஞாபக சக்தி: தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. "வாக்கிங்' செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில், "அல்சீமர், "டிமென்ஷியா' போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. நடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.


ஆய்வில் தகவல்: எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் "டி' நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.


பெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை, நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், "வாக்கிங்' போக வேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.


இரவில் "வாக்கிங்' போகக்கூடாது: அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில், "வாக்கிங்' போவதே, சிறந்த பலனை தரும். அவரவர் இருப்பிடத்தை பொறுத்து, மொட்டை மாடி, தெருக்களிலும், நடைப்பயிற்சி போவதில் தவறில்லை. உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில், உணவருந்திய பின், "வாக்கிங்' போகக் கூடாது. மைதானம், பூங்காக்களின், இடப் பக்கம், "வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இதற்கு, ஆய்வுபூர்வமான நிரூபணங்கள் எதுவும் இல்லை. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், "வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வளமான வாழ்க்கை வாழலாம்.


டாக்டர் ராமலிங்கம்,
மருத்துவ துறை உதவி பேராசிரியர்,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#3
Re: எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக்க&#30

நடை பயிற்ச்சி பற்றி அருமையான தகவல் ...!!!
பகிர்வுக்கு நன்றி .....!!!!!!!!!!
 

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#4
Re: எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக்க&#30

A very useful article ....I am also accepting all your points on walking and it's true ....nowadays I feel guilty if I don't go walking....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: Walking tips - எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக&#3

அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மை
 

vinomanian

Commander's of Penmai
Joined
Sep 14, 2012
Messages
1,214
Likes
3,782
Location
chennai
#6
Re: Walking tips - எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக&#3

நல்ல பயனுள்ள தகவல். நன்றி சகோதரரே.

நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில்
15% பேர் நீரழிவு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன . நடைபயிற்சியை கடைபிடித்தாலே இதை தவிர்க்கலாம்.நாம் நம்மை சார்ந்தவர்களுக்கும் இதை கடைபிடிக்க சொல்லுவோம்.
 
Joined
May 20, 2013
Messages
55
Likes
76
Location
Delhi
#7
Re: Walking tips - எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக&#3

helpful tips a much needed one to sustain a good decent health.
 

dnsintu

Guru's of Penmai
Joined
Apr 29, 2011
Messages
6,428
Likes
14,803
Location
malaysia
#8
Re: Walking tips - எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக&#3

'walking' patri arumaiyaana thagavalgal...
kadaipidikka vendum...
 

skarthiga

Friends's of Penmai
Joined
Apr 30, 2012
Messages
376
Likes
1,117
Location
dgl
#9
Re: Walking tips - எந்த பக்கம் "வாக்கிங்’ போனால் உடம்புக&#3

kantippaga anaivarum therinthu kollaventiya thagaval,,,,,,,,,nantri anna,,,,,,
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.