Ways to Cure Oily Skin - எண்ணெய் பசை சருமம்... எப்படி தப்பிக்க

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எண்ணெய் பசை சருமம்... எப்படி தப்பிக்க

ண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஒருவரின் தன்னம்பிக்கையையே குலைத்துவிடுகிறது. வழுவழுப்பான, டல்லான சருமத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது. முகத்தில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பதுதான் எண்ணெய் பசை சருமத்துக்குக் காரணம். சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய் பசை உள்ள சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.

சோப்பு மற்றும் கிளென்ஸர்கள்


சிலவகை சோப்புகள் மற்றும் கிளென்ஸர்கள் காரத்தன்மை அதிகமானவையாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதால், சருமம் மிகவும் உலர்வாகி மீண்டும் சீபம் அதிகமாகச் சுரக்கும். எனவே, குறைந்த அளவு பி.ஹெச் உள்ள சோப்புகள் மற்றும் கிளென்ஸர்களைப் பயன்படுத்துங்கள்.

ஃபேஷியல் மாஸ்க்


தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைப்பகுதி, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி, முகப்பருவுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாதீர்


பொதுவாக, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகம் கழுவுவார்கள். இது மிகவும் தவறு. இதனால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. அவசியம் எனில், ஒரு சுத்தமான டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்


எண்ணெய் பசை சருமத்தினர் மாய்ஸ்சரைசர் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் கிரீம்களைப் பயன்படுத்தலாம்.

அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள்


எண்ணெய் பசை உள்ள சருமத்தினருக்கு முகப்பருவால் பாக்டீரியா இருக்கும். அடிக்கடி முகத்தைத் தொடும்போது, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தொற்றுப் பரவிக்கொண்டே இருக்கும். எனவே, அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள். கைகளை சுத்தமாக வைத்திருங்கள்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine December 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.