Ways to save Money - சுலபமாக பணத்தை சேமிக்க 6 வழிகள்

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
991
Location
Switzerland
#1
[h=1][/h]

சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு திண்டாடுவதையும், அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருப்பதையும் அனுபவித்திருக்கிறோம்.
இவ்வாறு அல்லல்படும் உணர்வுகளை குறைத்து கொள்ள நீங்கள் பெரியவை எதையும் செய்ய வேண்டாம். கீழ்காணும் வழிமுறையை சற்று பின்பற்றி பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.


உங்கள் செலவை விபரங்களை அவ்வப்போது சோதியுங்கள்
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை (ஸ்டேட்மண்ட்) தெளிவாக சுட்டிக்காட்டும்.
இதனை அவ்வப்போது சோதித்து பார்த்தால், சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பெறலாம்.
உங்களுடைய பண அட்டையை (டெபிட்/ கிரடிட் கார்டு) தேய்த்து கொண்டு விரும்பியதை இன்று வாங்கி கொள்ளலாம். ஆனால், மொத்த செலவை பார்க்கும்போதுதான், எவ்வாறு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்பட்டுள்ளதை உணருவோம்.
இந்த செலவுகளில் எவற்றை குறைத்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்வதற்கு இது நம்மை தூண்டும்.
உங்கள் சம்பளம் செலவு செய்யப்படும் விபரங்களை, துல்லியமாக அறிந்து செலவு செய்வீர்கள்.
தேனீர், காபி குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்
தினமும் வேலை செய்கிற நீங்கள் மதியத்திற்கு முன்னும், பின்னும் தேனீர், காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கலாம்.

ஒரு நாள் செலவாக இருந்தால், பெரிய தொகையாக இருக்காது. ஆனால், அதுவே தினமும் வாடிக்கை என்றால், ஒரு மாதத்தில் பெரிதொரு தொகை அதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும்.
எனவே, மதிய உணவு எடுத்து செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்கில் தேனீர் அல்லது காபி எடுத்து சென்றால் அதிக தொகையை சேமிக்கலாம்.
மின்சாரம், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்தும்போது, சிக்கனமாக இருந்து கொள்வது அவற்றுக்கும் நாம் கொடுக்கும் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறைந்த செலவில் நல்ல சேவை வழங்குநரை நாடுங்கள்
நம்முடைய அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய பல சேவை வழங்குநர்களின் சேவைகளை பயன்படுத்தி கொண்டிருப்போம்.
மலிவாக விலையில் தரமான பொருட்களை விற்கின்ற கடைகளை தேடி கண்டுபிடியுங்கள். இணையம், செல்பேசி சேவை நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

ஏற்கெனவே நீங்கள் சேவை பெற்று வருகின்றவர் மேலதிக சிறந்த சேவையை குறைந்த செலவில் வங்குவார்களா என்று பேசி பார்த்துவிட்டு, மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம். சோம்பி திரியாமல், பல வழிமுறைகளில் இவற்றை ஆராய்ந்து அறிவது நல்ல பயனை கொடுக்கும்.
வீட்டு சினிமா
நவீன காலத்தில் பொழுதுபோக்கிற்காக பெருவணிக வளாகங்களிலுள்ள திரையங்கம் செல்வது என்பது ஒரே நாளில் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.
அந்த திரைப்படத்தின் குறுந்தகடுகளை வாங்கி, வீட்டிலேயே பார்த்து மகிழ்வது உங்கள் பணப்பையை பதம் பார்க்காது. விருது பெற்ற திரைப்படங்களின் குந்தகடுகளை மிகவும் குறைவான விலையில் நீங்கள் பெற முடியும்.
நீங்களே செய்ய முயலுங்கள், சரி செய்யுங்கள்
நம்முடைய பொருட்களில் சிறிய பழுது ஏற்பட்டால் போதும், புதியவை வாங்க எண்ணும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், கிழிந்த துணியை தைத்து, வீட்டு வேலைகளில் செய்ய முடிகிறவற்றை சற்று முயற்சித்துதான் பாருங்களேன். மாத முடிவில் பெரும் சேமிப்பு உங்கள் வசமாகியிருக்கும்.
தெரியாதவற்றை செய்து கொள்ளும் வழிமுறையை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிந்து அவற்றை நீங்களே செய்ய தொடங்குங்கள். இயன்ற வரை சரி செய்து மீண்டும் பயன்படுத்த முயலுங்கள்.

சாப்பாட்டை திட்டமிடுங்கள்
தற்போதைய சூழ்நிலையில், மாதம் இரண்டு, மூன்று முறை ஹோட்டல் ஏறிவிட்டால் போதும், உங்கள் பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளது.
எனவே வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சரி, உணவை திட்டமிட்டு கொள்ளுங்கள். சமைத்து எடுத்து செல்வது, குடிநீர் கொண்டு செல்வது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கத்திற்கும் துணைபுரியும்.
இவ்வாறு திட்டமிடுவதால், உணவுக்கு தேவையானதை மட்டுமே வாங்கிவிட்டு, பிற பொருட்களை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,704
Likes
35,077
Location
mysore
#2
Really great tips for saving the money. Very much useful. Thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.