Wedding Experiences, Lesson for all - பலரின் திருமண அனுபவம் நமக்கு பாடம&#302

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
பலரின் திருமண அனுபவம் நமக்கு பாடம்


நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.
-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு

இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.
-பாட்ரிக் முர்ரே

மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.
-கிரௌச்சோ மார்க்ஸ்

தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.
-யாரோ

திருமணத்துக்குப்
பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள்.
அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.
- ஹேமந்த் ஜோஷி

எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.
- சாக்ரடீஸ்

என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''
-புரூட்

கடவுள்,
மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக்
கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக்
கண்டுபிடித்தான்.
-யாரோ

என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.
-யாரோ

நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
-சாம் கினிசன்

மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.
-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்

ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.
-காலின் சாப்மன்
 
Joined
Jul 7, 2012
Messages
36
Likes
14
Location
Namakkal
#2
Re: Wedding Experiences, Lesson for all - பலரின் திருமண அனுபவம் நமக்கு பாடம&

ஓ! பெரிய ஆளுங்களும் நம்மள மாதிரி தானா? இப்பத்தான் நிம்மதியா இருக்கு!

சுவையான பகிர்வு!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.