Wedding Rituals and their Benefits -திருமணத்தின்போது நிகழ்த்தப்படும&#3

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#1
திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளும் அதற்கான பலன்களும்


விளக்கேற்றுதல்: இருள் விலகி ஒளியேற்படும்.


அரசாணிக்கால் ஊன்றுதல்: அரசு செலுத்த செங்கோல் போலாகும்.

பந்தக்கால் நடுதல்: ஒற்றுமையை வலுப்படுத்திடும்.

மாவிலை தோரணம்: மங்கலம் பெருகும்.

திருமாங்கல்யம்: இறைவனின் நினைவாகும்.

திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட நூல்: வாழ்க்கை, மேன்மை, ஆற்றல், தூய்மை, தெய்வத் தன்மை போன்ற நற்குணங்கள் அமையும். விவேகம், தன்னடக்கம் உண்டாகும். தொண்டுள்ளம் மேம்படும். இவ்வளவு நற்பலன்களைத் தரும் அடையாளமே 9 நூலிழை கொண்ட மஞ்சள் நிற தாலிசரடாகும்.

அம்மி மிதித்தல்: பாறையைப் போன்று உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தல்.

அருந்ததி பார்த்தல்: கற்பின் சிறப்பினை அறிவுறுத்துதல்.

ஹோமம் வளர்த்தல்: ஆயுள் நீடிக்கச் செய்யும்.

காப்புக் கட்டுதல்: அவ்வேளையில் துன்பம் நிகழாதிருப்பதற்காக.

பூநூல் அணிவித்தல்: மந்திர உபதேசங்களை மனதில் பதியச் செய்திட.

படையல்: அனைத்துத் தேவதைகளுக்கு பிரியம்.

காசி யாத்திரை: பிரம்மச்சாரியாக இருந்தவனை இல்லறத்தானாக மாற்றும் நிகழ்வு.

காப்பரிசி மலர்: முப்பத்தி முக்கோடி தேவர்களும் மனிதர்களும் அருளாசி வழங்குவதாக ஐதீகம்.

மஞ்சலாடை: மங்கலமும், நோய் தடுப்பும் உண்டாகிட.

மாலை மாற்றிக் கொள்வது: மாலைகளில் உள்ள மலர் போல் மணம் பெற்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவனுக்கு மென்மையாக பணிபுரிதலை உணர்த்துவது.

யாகசாலை: மணம், மனம் மாறிட உதவுகிறது. இது அக்னி தேவதையின் சாட்சியாக திருமணத்தினை நடத்துவதாக ஐதீகம்.

விருந்தோம்பல்: சகல ஜீவராசிகளுக்கும் உரிய விருந்தோம்பல் பண்பு.

வாழ்த்துதல்: இம் மண்ணுலகில் 16 பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்திடும் பண்பு.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#2
Re: திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிக&#2996

Arumai Anna.

:thumbsup​
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#3
Re: Wedding Rituals and their Benefits -திருமணத்தின்போது நிகழ்த்தப்படு&#2990

அருமை ....மிக மிக அருமையான பதிவு .
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#4
Re: Wedding Rituals and their Benefits -திருமணத்தின்போது நிகழ்த்தப்படு&#2990

Thank you friends.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#5
Re: Wedding Rituals and their Benefits -திருமணத்தின்போது நிகழ்த்தப்படு&#2990

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம், பகிர்வுக்கு மிக்க நன்றி.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Re: Wedding Rituals and their Benefits -திருமணத்தின்போது நிகழ்த்தப்படு&#2990

Superb sir....:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.