Weight Loss Diet and Guide Your Message

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள். எப்படியாவது தங்கள் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதைவிட சிறந்தது தேவையான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும். இவைகளை தொடர்ந்து இளம்பெண்கள் கடைபிடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. கவர்ச்சியான அழகையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.
உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை "டைட்னிங் பேஷியல்" செய்ய வேண்டும். டைட்னிங் பேக்குகளும், டைட்னிங் மாஸ்க்குகளும் சரும சுருக்கங்களைப் போக்க உதவுகின்றன.
சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்*ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும். கன்னங்கள் உள் அமுங்கி காணப்பட்டால் தினமும் பத்து நிமிடங்கள் வாய் நிறைய தண்*ணீரை வைத்து கொப்பளிக்கும் பயிற்சியை மேற்கொண்டால் போதும்.
உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.
முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும்
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2


முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.
.
குளியல் பொடி
இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
வெட்டி வேர் - 200 கிராம்
அகில் கட்டை - 200 கிராம்
சந்தனத் தூள் - 300 கிராம்
கார்போக அரிசி - 200 கிராம்
தும்மராஷ்டம் - 200 கிராம்
விலாமிச்சை - 200 கிராம்
கோரைக்கிழங்கு - 200 கிராம்
கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.
இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.


நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.