Weight Loss Recipes

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#2
வாழைத்தண்டு லெமன் ஜூஸ்

தேவையானவை

வாழைத்தண்டு - 1/2 கப் சுத்தப்படுத்தி துண்டுகளாக்கியது
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
ஏலப்பொடி – சிட்டிகை
வெல்லப்பாகு – 2 டீஸ்பூன்

செய்முறை

  1. வாழைத்தண்டை மிக்ஸியில் அரைத்து அதன் சாறு எடுத்து வடிகட்டி வைக்கவும்.
  2. அதனுடன் எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.
  3. அதனுடன் ஏலப்பொடியையும், வெல்லப்பாகுவையும் சேர்க்கவும்.
  4. பிறகு குளிர வைத்து பருகவும்.

பயன்

1. உடல் இளைக்கும்.
2. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் வெளியேறும்.
3. தோல் தொற்று நோய்களை தீர்க்கும்.
4. சிறுநீரக செயல்பாடு செம்மையாகி, சிறுநீரகக் கற்களை கரைக்கும்.
5. உடல் ஸ்லிம்-ஆகவும், அழகாகவும் இருக்கும்.
6. இதை வாரம் ஒரு முறை, அல்லது இருமுறை பருகலாம்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#3
கேபேஜ் கீர்

தேவையானவை

கோஸ் – 1 கப்
வெல்லக்கரைசல் – 1/4 கப்
தேங்காய்பால் – 1/4 கப்
ஏலப்பொடி – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு

செய்முறை


  1. கோஸை ஒரு கப் நீரில் சேர்த்து வேகவிடவும்.
  2. பிறகு அதை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்.
  3. வெல்லக்கரைசலை கடினமான பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
  4. அதில் கோஸ் சாறை சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. பிறகு அது கொதித்ததும், இறக்கும்போது ஏலப்பொடியை தூவி, முந்திரியை சேர்க்கவும்.

பயன்

  1. கொழுப்பை குறைக்கும்.
  2. உடலை ‘சிக்’ கென்று வைக்கும்.
  3. அல்சரை குணமாக்கும் நார்ச்சத்து மிக்கது.
  4. இதயத்திற்கு இதமானது.
  5. தைராய்டு பிரச்சனை எனில் தவிர்ப்பது நலம்.
  6. ஆன்டி ஆக்சிடன்ட் மிகுந்து உள்ளதால் இளமையோடு வைத்திருக்கும்.
  7. மார்பக புற்றுநோயை தடுக்கும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#4
ஆரோக்கிய பொடிக் குழம்பு.

தேவையானவை

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
திப்பிலி – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்
புளிக் கரைசல் – 1 டீஸ்பூன்
வெல்லச்சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை


  1. உளுத்தம் பருப்புடன் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, தனியா, சீரகம், திப்பிலி, ஓமம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடிக்கவும்.
  2. கடுகு தாளித்து அதனுடன் தக்காளிச்சாறு, வெள்ளச்சாறு, மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க விடவும்.
  3. பிறகு உப்பு சேர்த்து இறக்கவும்.

பயன்

  1. வயிற்று பிரச்சனை, பசியின்மை, உடல் சோர்வை நீக்கும்.
  2. குளிர் சாதனப் பேட்டியில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#5
காசினி ஜூஸ்

தேவையானவை

காசினி கீரை – 1/4 கப்
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – 2 சிட்டிகை
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை


  1. காசினி கீரையை சிரித்து நீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
  2. அதனுடன் லெமன் ஜூஸ் சேர்க்கவும்.
  3. பிறகு மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

பயன்


  1. சிறுநீரகத்தை செம்மைப் படுத்தும்.
  2. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றும்.
  3. கொழுப்பை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைக்கும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#6
பசலைக் கீரை பச்சடி

தேவையானவை

பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் – 3
தக்காளி – 3
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் – 3
உப்பு – 1 டீஸ்பூன்
தயிறு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை


  1. கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
  2. அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  3. பிறகு அதில் தயிருடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  4. பிறகு உப்பு சேர்த்து சுவைக்கவும்.

பயன்


  1. இரத்த சோகை உள்ளோர் அடிக்கடி சாப்பிட வேண்டியது.
  2. பெண்களுக்கு இரும்புச்சத்தை தரும்.
  3. கருத்தரிக்கவும், கரு முட்டை உற்பத்தியை மேம்படுத்தவும் கால்சியம் செறிந்தது.
  4. உடலைக் குளிர்விக்கும்.
  5. மூட்டு வலிக்கு நல்ல மருந்து.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#7
சுரைக்காய் தோசை

தேவையானவை

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
மிளகாய் வற்றல் – 5
சுரைக்காய் துருவல் – 1 கப்
தயிர் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிட்டிகை
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை


  1. பச்சரிசியையும், புழுங்கல் அரிசியையும் தனித்தனியே ஊற வைக்கவும்.
  2. அத்துடன் மிளகாய் வற்றலையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பிறகு இதில் சுரைக்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள், தயிர் ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.
  4. தோசை மாவு படத்தில் கரைத்துகிக்கொள்ளவும்.
  5. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அதில் சேர்க்கவும்.
  6. பிறகு அந்த மாவில் தோசை ஊற்றி சுவைக்கலாம்.

பயன்


  1. டயாபடீஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும் அதிக தாகத்தை தீர்க்கும்.
  2. சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் சுரையை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
  3. உடலில் கேட்ட நீரை வெளியேற்றி உடலை மெலிதாக்கும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#8
தூதுவளை சூப்

தேவையானவை

தூதுவளை இலை – 1/4 கப்
நீர் – 2 கப்
பால் – 2 டீஸ்பூன்
சோளமாவு – 1 டீஸ்பூன்
ஃபிரெஷ் கிரீம் – 1 டீஸ்பூன்
மிளகுபொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை


  1. தூதுவளை இலைகளைப் பொடித்து நீரில் கொதிக்க விடவும்.
  2. பாலில் சோளமாவை கரைத்து வடிகட்டி அதில் சேர்க்கவும்.
  3. அத்துடன் ஃபிரெஷ் கிரீம், மிளகுபொடி, உப்பு சேர்த்து சுவைக்கவும்.

பயன்


  1. நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும்.
  2. சுவாச மண்டலத்தி சீராக்கும்.
  3. சளி, தும்மல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#9
ஸ்லிம் ஜூஸ்

தேவையானவை

வெண்பூசணித் துருவல் – 1 கப்
வாழைத்தண்டு – 1 கப்
வெல்லக்கரைசல் – 2 டீஸ்பூன்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்

செய்முறை


  1. பூசணிதுருவலை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து வைக்கவும்.
  2. வாழைத்தண்டையும் மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து, இரண்டு சாரையும் கலக்கவும்.
  3. அத்துடன் வெல்லக் கரைசளையும், ஏலப்பொடியையும் சேர்த்துக் கலக்கவும்.

பயன்


  1. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை இளைக்க வைக்கும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#10
கொள்ளுச் சட்னி

தேவையானவை

கொள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
தக்காளி – 1
புளி – சுண்டைக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை


  1. உளுத்தம் பருப்பையும், கொள்ளையும் தனித்தனியே சிவக்க வறுக்கவும்.
  2. மிளகாய் வற்றல், மற்றும் தக்காளியை தனித்தனியே வதக்கி எடுக்கவும்.
  3. முதலில் மிக்ஸியில் கொள்ளை பொடிக்கவும்.
  4. இத்துடன் உப்பு, மிளகாய், புளி ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
  5. பிறகு தக்காளி சேர்த்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

பயன்


  1. நார்ச்சத்து மிக்கது.
  2. உடல் இளைக்க விருப்பம் உள்ளவர் தவறாது பயன்படுத்த வேண்டியது.
  3. அதிக சத்து அளிக்கும்.
  4. தொப்பையை கரைக்கும்.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.