What can I do with my son?

Joined
Feb 10, 2015
Messages
1
Likes
1
Location
Chennai
#1
Hi friends

I am a house wife. My son is now 1.5 years old. We two only will be in home after my husband went to office. I want to spend my time with my child. Mostly I finish my works in morning itself. So most of the time I can spend with my child. He loves to play. So please tell me how can I engage myself for him? What can I play with him? How to spend time happily with him?

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine June 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Welcome to Penmai....friend.

நீங்க என்ன பண்ணலாம்ன்னா ,

காலைல குழந்தையை குளிச்சு விட்ட பிறகு , சாமி படத்துக்கு முன்னால போய் , கை கூப்பச் சொல்லித் தாங்க . அப்போ நீங்க ரொம்ப குட்டி ஸ்லோகம் எதாவது சொல்லுங்க .

தினமும் இதையே நீங்க சொன்னா , கொஞ்ச நாட்கள்ல குழந்தையும் மழலைல இதையே சொல்லும் .

விளையாட்டு சாமான்களுக்குன்னு ஒரு குறிப்பிட்ட இடத்தை வச்சு , அதுலேயே , விளையாடி முடிச்ச பொருட்கள் , விளையாட வேண்டிய பொருட்களை அங்கேர்ந்து எடுத்துட்டு வரது ,இதெல்லாம் குழந்தையையே செய்யச் சொல்லுங்க .

அப்போ , எடுத்ததை அதே இடத்துல வைக்கிற பழக்கம் வரும் .

சாப்பாடு ஊட்டும் போது , ராமாயணம் , மகாபாரதம் , நீதிக் கதைகள் போன்றவற்றை சொல்லி ஊட்டுங்க. அப்போ கதையும் மனசுல பதியும் . படுத்தாமல் சாப்பிடும் .

பாத்திரங்களை தேய்த்தபின் , அந்தந்த பாத்திரங்களை அதன் இடத்தில் வைக்கும்போது , குழந்தையை பக்கத்தில் வச்சுக்கிட்டு , எதை எங்கே வைக்கறீங்கன்னு பேசிட்டே வச்சா , மறுநாள்லேர்ந்து குழந்தையே அதே இடத்தில் வைக்கும் .

அதுக்கும் பொழுது போகும் (வித்தியாசமான activities நிறைய வேணும் குழந்தைக்கு )

நிறைய விளையாட்டு சாமான்களோடு , நிறைய புக்ஸ் வாங்கிடுங்க .

colours, alphabets, vegetables, fruits, transports, shapes இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி , ஒவ்வொண்ணா சொல்லித் தாங்க .

கொஞ்ச நாள் கழிச்சு , globe, நிறைய நாடுகளின் கொடிகள் இதெல்லாம் உள்ள புக் வாங்கி , அதை சொல்லித் தந்தா , படிக்க தெரியாமையே , குழந்தை இதெல்லாம் சொல்லும் .

2 வயசுக்கு மேலே ஸ்லோகங்களை கொஞ்சம் கொஞ்சமா சொல்லித் தந்தா , அப்டியே திருப்பிச் சொல்லும் .

2 வயசுக்கு மேலே , நீங்க இருக்கும் ஏரியா என்னன்னு சொல்லித்தாங்க.

வெளியே யார்கிட்டயும்(ரோட்டில் ) எதையும் வாங்கி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி வைங்க.

போடுற துணிகள் , துணி உலர்த்தும் கிளிப் , இதுலேர்ந்தும் கலர்களை சொல்லச் சொல்லுங்க . மரம் , செடி , கொடி எது இருந்தாலும் , அதைப் பத்தி விளக்கம் கொடுங்க .

கரன்ட் விஷயங்கள் (plug points) shock அடிக்கும் ன்னு சொல்லிடுங்க .

பொதுவா எந்த விஷயத்துக்கும் பயமுறுத்தி வைக்காதீங்க . எதையும் தைரியமா கையாளணும் .

விளையாட்டு சாமான்களை முதலில் கொஞ்சம் சாமான்களோடு விளையாடினால் , அப்புறம் அதை மறைத்து வைத்து (சில நாட்கள் ) , இப்போ வேற toys கொடுங்க . கொஞ்ச நாள் கழிச்சு , பழையதை கொடுங்க . ஒரே மாதிரி இருந்தா போர் அடிச்சுடும் .

சாயங்காலம் , பக்கத்தில் உள்ள கோவில் , பார்க் போன்ற இடத்துக்கு கூட்டிட்டு போங்க . கொஞ்ச தூரம் நடக்க விடுங்க .

நடக்கும் போது , எப்பவும் குழந்தை ரோட்டின் பக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளணும்.

அப்போ , ரோட்டில் போகும் வண்டிகளின் பெயர்களை சொல்லித்தாங்க . அப்படியே பிடிச்சுக்கும் . மறுநாள் சரியா சொல்லும் .

வீட்ல உள்ள நபர்களின் பெயர்களை சொல்லித்தாங்க . போட்டோ ஆல்பம் வச்சுக்கிட்டு , உங்க உறவினர் பெயர்களை , கொஞ்சம் கொஞ்சமா சொல்லித் தாங்க .

ஒவ்வொரு நேரத்துக்கு ஒண்ணொன்னு செய்ங்க . தினமும் இதையே செஞ்சாலும் , அதுக்கு போரடிக்காது . அதுவே உங்களை அந்த டைமுக்கு கேட்கும் .

மொத்ததுல நிறைய பேசணும் .

இந்த கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க . நிறைய toys பத்தின விவரம் இருக்கு . அதெல்லாம் வாங்கித்தரலாம் .

Toys for 1 and 2 years old

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine June 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
இந்த லிங்கை கிளிக் செஞ்சு பாருங்க . உங்களுக்கு போகப்போக நிறைய உதவியா இருக்கலாம் .

http://www.penmai.com/forums/parenting/40773-parenting-tips-jeyanthi.html

இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு , கீழே உள்ள லின்க்ல நிறைய வீடியோ வெல்லாம் இருக்கு . அதெல்லாம் கிளிக் செஞ்சு , குழந்தைக்கு போட்டு காமிங்க .

http://www.penmai.com/forums/kids-zone/69886-videos-kids-index.html
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.